உதவுவதற்காகவே வாழும் முத்துக்குமாரசுவாமி

Updated : மார் 10, 2021 | Added : மார் 10, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
கடந்த நாற்பது ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு நாற்பது லட்ச ரூபாய்க்கு மேல் உதவி செய்தவர்தான் முத்துக்குமாரசுவாமி.சென்னை ஆதம்பாக்கம் ஜீவன்நகரில் உள்ள அந்த வள்ளலைப் பார்க்க போயிருந்தோம். சொந்த வீடுதான் ஆனால் மிக எளிமையாக இருந்தது வீட்டினுள்ள இருந்த விலைமதிப்புள்ள பொருளாக சைக்கிள்தான் தென்பட்டது மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம்latest tamil news


கடந்த நாற்பது ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு நாற்பது லட்ச ரூபாய்க்கு மேல் உதவி செய்தவர்தான் முத்துக்குமாரசுவாமி.
சென்னை ஆதம்பாக்கம் ஜீவன்நகரில் உள்ள அந்த வள்ளலைப் பார்க்க போயிருந்தோம். சொந்த வீடுதான் ஆனால் மிக எளிமையாக இருந்தது வீட்டினுள்ள இருந்த விலைமதிப்புள்ள பொருளாக சைக்கிள்தான் தென்பட்டது மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம் விருதுகளும் சந்தனமாலைகளும்தான் தென்பட்டது.
முத்துக்குமாரசுவாமி தமிழக அரசின் கருவூல கணக்கு அதிகாரியாக 36 ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பணியில் இருக்கும் போதே ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கட்டுவது,பாடநுால் வாங்கித்தருவது உள்ளீட்ட உதவிகள் செய்து வந்தார்.


latest tamil news


இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியாக நேரிடையாக சென்று உதவினார் அப்படி செல்லும் போது வகுப்பறை இல்லாமல் வெட்டவெளியில் வெயிலில் உட்கார்ந்து குரோம்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டு இருப்பதை பார்த்தார்.
வகுப்பறைகள் கட்ட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தார் சுமார் பத்து லட்ச ரூபாய் தேவை என்றனர்.இதை மனதில் சுமந்து கொண்டிருந்த முத்துக்குமாரசுவாமி ஒய்வு பெற்றதும் தனது ஒய்வு ஊதியம் மற்றும் சேமிப்பு வகையில் கிடைத்த பத்து லட்ச ரூபாயை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வழங்கி வகுப்பறைகள் அமைய உதவினார்.
கடந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் எந்த அரசு ஊழியரும் இப்படி தனது முழு சேமிப்பையும் அப்படியே துாக்கிக் கொடுத்தது இல்லை என்பதால் அரசு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.


latest tamil news


அதன்பிறகு இவர் தனக்கு வந்த பென்சன் பணத்தை செலவு போக சேமித்து வைத்து அறுபதாவது சுதந்திர தினவிழா,குடியரசு தினவிழாவில் ராணுவத்தினர்,ஆசிரியர்கள்,துாய்மைப் பணியாளர்களை பெரிய அளவில் கவுரவித்தார்.
இவரது மனைவி செல்லம் ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர் இப்போது அவர் உயிருடன் இல்லை.இவரது ஒய்வு ஊதியமும் முத்துக்குமாரசுவாமிக்கு வந்தது.எனது ஒய்வு ஊதியமே எனக்கு அதிகம் ஆகவே என் மனைவியின் ஒய்வு ஊதியம் தேவையில்லை என்று அரசுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.உலகத்தில் யாருமே இப்படி கடிதம் எழுதியது இல்லை என்பதால் இந்த கடிதத்தை அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.
இப்போது இரண்டு பேருக்குமான பென்சன் என்பதால் மாணவர்களுக்கு உதவுவதுடன் ஆதரவற்ற விதவைப் பெண்கள் பட்டியலை வாங்கி அவர்களில் இருநுாறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் அனுப்பிவைத்தார்.அதில் பத்து பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாதமாதம் ஆயிரம் ரூபாய் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.
நடுநடுவே அம்மா உணவகத்திற்கு ஐம்பாயிரம் ரூபாய் மதிப்பில் மளிகை சாமான்களும்,போலீசாருக்கு ஐம்பாதாயிரம் ரூபாய் மதிப்புள்ள கையுறைகளும்,முதல்வர் நிவாரண நிதியும் வழங்கியிருக்கிறார்.இப்படி தனது செலவிற்கு போக மீதமாகும் பென்சன் பணத்தை எப்படியும் செலவு செய்தாக வேண்டும் என்பதற்காக உங்களுக்கு தெரிந்த உடல் ஊனமுற்ற உண்மையாக தேவையுள்ள மாணவ மாணவியர் பற்றிய விவரம் தாருங்கள் அவர்களின் கல்வி கட்டணம் உள்ளீட்ட செலவுகளை நான் ஏற்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒய்வு பெற்று இருபது வருடங்களான போதும் ஒரு நாளும் வீட்டில் ஒய்வாக இருந்தது இல்லை அறக்கட்டளை ஒன்றில் ஊதியம் பெறாத ஊழியராக பணியாற்றி வருகிறார்.இரண்டு மாத பென்சன் தொகைளை சேமித்து வைத்தால் ஒரு நல்ல இருசக்கர மோட்டார் வாகனம் வாங்கலாம் ஆனால் ‛அது எதுக்கு சார்‛? எனக்கு இந்த சைக்கிள் போதும் என்று பழைய சைக்கிளில் ஏறி தனது சேவையைத் தொடர கிளம்புகிறார்.அவரது எண்:94454 51604.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
17-மார்-202119:53:07 IST Report Abuse
karutthu நல்லமனிதர் .....கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .....அவரது சேவை தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X