அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : குறைத்து எடை போடாதீர்!

Updated : மார் 11, 2021 | Added : மார் 11, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக மக்களை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என, அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது, ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும், மக்களிடமிருந்து

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக மக்களை ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என, அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது, ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும், மக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ளது, அனைவருக்கும் தெரியும்.latest tamil newsஅந்த பணத்தில் இருந்து தான், தேர்தல் நேரங்களில் கூட்டணி அமைக்கும் சிறு கட்சிகளுக்கு, பல கோடி ரூபாய் கைமாறுகிறது என்பதும்; வாக்காளருக்கு ஓட்டுக்கு பணம் வினியோகிக்கப்படுகிறது என்பதும், அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரியும். தமிழக அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரை பார்த்து, 'ஊழல்வாதி' என, விமர்சனம் செய்வது, கேலிக்குரியது; அவர்கள் என்னவோ, உத்தமர் போல! கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சி மற்றும் தனித்து நிற்கும் கட்சி சார்பில், தேர்தல் அறிக்கை வெளியிடுவதில், ஒரு அர்த்தமுள்ளது.

ஆனால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து, தேர்தல் செலவுக்கு அவர்களிடம் பணம் வாங்கும் சிறிய கட்சியினர், தேர்தல் அறிக்கை வெளியிடுவது, மிக வேடிக்கையாக உள்ளது. இது போன்ற செயலை எல்லாம், காமெடி நிகழ்ச்சி போலத் தான், மக்கள் பார்க்கின்றனர். யாரை எங்கே வைப்பது என்று, தமிழர்களுக்கு தெரியும். எம்.ஜி.ஆர்., இருந்தபோதே, லோக்சபாதேர்தலில், இரண்டு தொகுதிகள் தவிர, மற்ற இடங்களில், அ.தி.மு.க.,விற்கு தோல்வியை கொடுத்த மக்கள், அடுத்த சட்டசபை தேர்தலில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து, அவரை முதல்வராக்கினர். யாருக்கு எப்போது வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பது, மக்களுக்கு தெரியும்.


latest tamil newsஎந்த கருத்து கணிப்பாலும், மக்களின் மனதில் உள்ளதை கண்டுபிடிக்க முடியாது. எனவேஅரசியல் கட்சியினரே... தமிழர்களை குறைவாக எடை போடாதீர்; ஏமாந்து விடுவீர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
11-மார்-202111:39:33 IST Report Abuse
sankaseshan எரிய ர கொள்ளியில் எந்த கொள்ளி நல்லது ஒருவித்தியாசமும் இல்லை ஜனங்கள் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
Rate this:
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் - செந்தமிழ்நாடு ,இந்தியா
11-மார்-202112:51:36 IST Report Abuse
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் ஒருவர் 15 லட்சம் தருவேன் என்று மக்களின் ஆசையை தூன்டி விட்டு பிரதமர் ஆனார்... இன்று நாடு எந்த நிலை நூறு ரூபாயை நோக்கி பெட்ரோல் செல்கிறது...ஆயிரம் ரூபாயை நோக்கி..கேஸ் சிலிண்டர் செல்கிறது...150 வது நாளை நோக்கி விவசாயிகள் போராடுகின்றனர்...நடுத்தெருவை நோக்கி..சாமான்ய மக்கள் செல்கின்றனர் ஆகவே நாக்கில் சர்க்கரை தடவுகிறவனை நம்பாதீர்கள்...
Rate this:
Tamilan - செந்தமிழ்நாடு,இந்தியா
11-மார்-202114:36:59 IST Report Abuse
Tamilanஅந்த 15 லட்சத்தை வாங்க வாயைபோழந்து ஒட்டு போட்ட நீ இன்னைக்கு புலம்பி என்னாவப்போகுது?...
Rate this:
Cancel
Rajah - Colombo,இலங்கை
11-மார்-202111:17:05 IST Report Abuse
Rajah ஒரு நல்ல திறமையான நேர்மையான வைத்தியிரிடம் நோயாளிகள் செல்கின்றார்கள். அவர்களும் குணமடைந்து சுகமாக வாழ்கின்றார்கள். மக்களும் அவர் என்ன சாதி என்று பார்க்கவில்லை, வைத்தியரும் நோயாளிகள் என்ன சாதி என்று பார்க்கவில்லை. அதேபோல் உங்கள் வேட்ப்பாளரும் இருக்க வேண்டும். நீங்களும் இருக்க வேண்டும். திரு ராமதாஸ் அவர்களும் ஒரு வைத்தியர்தான். சாதி மத கட்சி பேதமின்றி நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்.
Rate this:
கேவைசி - madurai,இந்தியா
11-மார்-202114:39:15 IST Report Abuse
கேவைசிராமதாஸ் வன்னியர் வன்னியர்ன்னு அடிச்சுக்குறாரே? அது ஏதாவது மறந்தோட பேரா தல?...
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
11-மார்-202110:36:53 IST Report Abuse
dina தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் உள்ள கட்சி சார்ந்த அமைப்புகளை முடக்கவேண்டும் ..அரசுஅலுவலகங்களில் வேலை செய்பவர்கள் யாரும் சொந்த முளையை வைத்து சேரவில்லையா ?ஏன் கட்சிகளின் பின்னால் செல்லவேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X