சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வருகிறது தனியார் விண்வெளி நிலையம்!

Added : மார் 11, 2021
Share
Advertisement
இன்னும் ஐந்தே ஆண்டு களில், விண்வெளியில் அந்த விந்தை நடக்கும் என்கின்றனர். அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ஆர்பிட்டல் அசெம்பிளி என்ற நிறுவனம், விண்வெளி விடுதி ஒன்றை 2026 வாக்கில் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். ரூ.36.5 கோடி டிக்கெட் கட்டணம் செலுத்தினால், மூன்றரை நாட்களுக்கு விண்வெளியில் சுழலும் விடுதியில் தங்கலாம்.'வாயேஜர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி, 700 அடி சுற்றளவுள்ளது.
வருகிறது தனியார் விண்வெளி நிலையம்!

இன்னும் ஐந்தே ஆண்டு களில், விண்வெளியில் அந்த விந்தை நடக்கும் என்கின்றனர். அதாவது, அமெரிக்காவை சேர்ந்த ஆர்பிட்டல் அசெம்பிளி என்ற நிறுவனம், விண்வெளி விடுதி ஒன்றை 2026 வாக்கில் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். ரூ.36.5 கோடி டிக்கெட் கட்டணம் செலுத்தினால், மூன்றரை நாட்களுக்கு விண்வெளியில் சுழலும் விடுதியில் தங்கலாம்.
'வாயேஜர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி, 700 அடி சுற்றளவுள்ளது. நிலாவில் இருக்கும் ஈர்ப்பு விசையின் அளவுக்கு, இந்த விடுதிக்குள் ஏற்படுத்த, அதை விரைவாக சுழலும்படி செய்யவிருக்கின்றனர்.இந்த விண்வெளி நிலையத்தில் 100 பேர் இருப்பர். இது போக, 300 விண்வெளி சுற்றுலா பயணிகளையும் வரவேற்கும் திறன் வாயேஜர் நிலையத்திற்கு இருக்கும்.
பணம் படைத்தவர்கள், சாகச உணர்வு உள்ளவர்கள் மட்டுமல்லாமல், விஞ்ஞானிகளையும் இந்நிலையம் விருந்தினர்களாக அழைக்கவிருக்கிறது. இந்த நிலையத்திற்கு தேவையான மின்சாரம் பூமியிலிருந்து கம்பியில்லா தொழில்நுட்பம் மூலம் அனுப்பப்படும். இங்கு இருப்போருக்குத் தேவையான உணவு, உடை போன்றவையும் பூமியிலிருந்து விண்கலன்கள் மூலம் எடுத்து வரப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X