சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உலை சிறிது: உற்பத்தி பெரிது

Added : மார் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அந்த தொழில்நுட்பம், 2030ல் தான் நடைமுறைக்கு வரும். ஆனால், அது அணு ஆற்றலை மூலமாக கொண்டது. அதை முன் மொழிவோரில் பில்கேட்சும் ஒருவர். எனவே தான் அதற்கு இப்போதே கவன ஈர்ப்பு கிடைத்துள்ளது.சிறிய, மலிவான, அணு உலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்வது வருங்காலத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்கும் என பில்கேட்ஸ் நம்புகிறார். இதற்கென அவரது நிதி முதலீட்டுடன் இயங்கும் 'டெர்ராபவர்' மற்றும்
 உலை சிறிது: உற்பத்தி பெரிது

அந்த தொழில்நுட்பம், 2030ல் தான் நடைமுறைக்கு வரும். ஆனால், அது அணு ஆற்றலை மூலமாக கொண்டது. அதை முன் மொழிவோரில் பில்கேட்சும் ஒருவர். எனவே தான் அதற்கு இப்போதே கவன ஈர்ப்பு கிடைத்துள்ளது.
சிறிய, மலிவான, அணு உலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்வது வருங்காலத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்கும் என பில்கேட்ஸ் நம்புகிறார். இதற்கென அவரது நிதி முதலீட்டுடன் இயங்கும் 'டெர்ராபவர்' மற்றும் 'ஜி.ஈ.-ஹிட்டாச்சி' அணு ஆற்றல் நிறுவனம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள, நாட்ரியம் என்ற சிறு அணு மின் ஆலை தொழில்நுட்பத்திற்கு, அமெரிக்க ஆற்றல் துறை ஒரு பெரிய நிதியை வழங்கியுள்ளது.
அந்த நிதியைக் கொண்டு நாட்ரியம், ஒரு சிறு ஆலையை நிறுவி, தொழில்நுட்பத்தின் திறனை உலகிற்கு பறைசாற்றும். நாட்ரியம், அணுப் பிளவு மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்து, நீராவி டர்பைன்களை இயக்கி மின் உற்பத்தி செய்யும். அணுப் பிளவின் போது கிடைக்கும் உபரி வெப்பத்தை திரவ உப்பை ஊடகமாகக் கொண்டு சேமித்து வைக்கிறது. பிறகு, மின் தட்டுப்பாடு ஏற்படும்போது திரவ உப்பிலுள்ள வெப்பத்தை கொண்டு உடனடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்து விட முடியும்.
செர்னோபில் முதல் புகுசிமா வரை பல விபத்துகளையும் தாண்டி, அணு உலை பாதுகாப்பானதே என வல்லுனர்கள் கூறுகின்றனர். நிலக்கரி, எண்ணெய் எரிசக்தியால் உற்பத்தியாகும் ஒரு டெராவாட் மின்னாற்றலுக்கு, முறையே, 24.6 மற்றும் 18.4 மனித உயிர்கள் பலியாகின்றன. ஆனால், அணு மின்னாற்றலை உற்பத்தி செய்ய, 0.07 அளவே மனித உயிர்கள் மாண்டு உள்ளன.தவிர, காற்றாலை, நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் என்று அனைத்திற்குமே பெருமளவு நிலப் பரப்பும், இயற்கை வள விரயமும் ஆகின்றன. ஆனால் ஒரு சிறிய அணு உலைக்கு சில பெரிய கட்டடங்கள் அளவு இடம் போதும். ஆக, 2030 வாக்கில் சிறிய அணு மின் ஆலைகள் சகஜமாகிவிடும் போலத் தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
26-மார்-202110:21:34 IST Report Abuse
ponssasi மனிதன் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பு என்று வாழ்வியலை தொலைத்துவிட்டான், ஆரோக்கியத்தை தொலைதான், இன்றைய உலகில் ஐம்பது வயதுக்குமேல் ஆரோக்கிய வாழ்வு யாருக்கும் அமைவது இல்லை. அதை நோக்கி நாம் பயணம் செய்யவேண்டும். மின்சாரம், அணுவுலை இவை நமக்கு ஆரோக்கியம் தந்துவிடுமா? நமது குறுகிய கால வாழ்வில் இயற்கைக்கு எதிரான கண்டுபிடுப்புகளால் வாழ்வு இன்னும் குறுகி கொண்டே செல்லுகிறது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-மார்-202102:30:31 IST Report Abuse
மலரின் மகள் ஹைட்ரஜன் பியூல் காலை பயன்படுத்தி அதன் மூலம் மின்சார உற்பத்தில், ஆட்டோமொபைல் என்று பரிணமிக்க இருக்கிறது உலகு. நமது பிஏஆர்சி இதை 90 களின் மத்தியிலிருந்து பெருமாராய்ச்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறது. அரசின் ஒத்துழைப்புடன் மிகப்பெரியளவில் ஆலைகளை உருவாக்க முயலும் இனி. ஜைஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X