சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அச்சிடப்படும் ஆடம்பர வீடுகள்!

Added : மார் 11, 2021
Share
Advertisement
வீடு கட்டுவதற்கு முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கிறது. பரிசோதனைகளாகவே இந்த முயற்சிகள் இருந்தன, ஆனால், தற்போது ஆடம்பர வீடுகளைக் கட்டவும் முப்பரிமாண அச்சு உத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில், ஐகான் என்ற முப்பரிமாண கட்டிட அச்சு இயந்திர நிறுவனம் உள்ளது. இது, சில கட்டுமான அமைப்புகளுடன் சேர்ந்து
 அச்சிடப்படும் ஆடம்பர வீடுகள்!

வீடு கட்டுவதற்கு முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவது கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்கிறது. பரிசோதனைகளாகவே இந்த முயற்சிகள் இருந்தன, ஆனால், தற்போது ஆடம்பர வீடுகளைக் கட்டவும் முப்பரிமாண அச்சு உத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில், ஐகான் என்ற முப்பரிமாண கட்டிட அச்சு இயந்திர நிறுவனம் உள்ளது. இது, சில கட்டுமான அமைப்புகளுடன் சேர்ந்து 1,000 முதல் 2 ஆயிரம் சதுர அடியில், தரைத் தளம் மற்றும் ஒரு மாடி உள்ள வீடுகளை கட்டித் தரத் தொடங்கிஉள்ளது.
இதில் தரைத்தளத்தை, ஐகான் நிறுவனம் தனது 'வல்கன்' என்ற முப்பரிமாண கட்டிட அச்சியந்திரத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் அச்சிட்டுவிடுகிறது. அதன் பிறகு, முதல் மாடியை மரத்தால் ஆன கட்டுமானமாக உருவாக்குகின்றனர். இதுவும் விரைவிலேயே செய்து முடிக்கப்படுவதால், விரைவில், ஆடம்பர வீடு வேண்டுவோர், இத் திட்டத்தை விரும்புவர் என ஐகான் எதிர்பார்க்கிறது. சும்மா இல்லை. ஒரு வீடு ரூ.3.30 கோடி வரை விலை ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X