பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப் பாகுபாடு கிடையாது: இளவரசர் வில்லியம் சால்ஜாப்பு

Updated : மார் 11, 2021 | Added : மார் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாக முன்னதாக சர்ச்சை எழுந்தது. தற்போது இதுகுறித்து இளவரசர் வில்லியம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பிரிட்டன் குடிமக்கள் மற்றும் அரசு ஆகியவற்றால் அதிகம் மதிக்கப்படும் பக்கிங்ஹாம் அரச குடும்பத்தில் இருந்து முன்னதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்கல் ஆகியோர் கருத்து வேறுபாடு

பிரிட்டன் அரச குடும்பத்தில் இனப்பாகுபாடு கட்டப்பட்டதாக முன்னதாக சர்ச்சை எழுந்தது. தற்போது இதுகுறித்து இளவரசர் வில்லியம் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.



latest tamil news



பிரிட்டன் குடிமக்கள் மற்றும் அரசு ஆகியவற்றால் அதிகம் மதிக்கப்படும் பக்கிங்ஹாம் அரச குடும்பத்தில் இருந்து முன்னதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்கல் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்க கருப்பின நடிகையான மேகனை ஹாரி நீண்ட காலமாக காதலித்து வந்தார். பிரிட்டன் அரசு குடும்பத்துக்குள் நுழையும் முதல் கருப்பின மருமகள் மேகன் ஆவார்.
அரச குடும்பத்தைவிட்டு ஹரி-மேகன் தம்பதி பிரிந்து பல மாதங்கள் ஆகியதையடுத்து ராணி இரண்டாம் எலிசபெத் இந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக அரச குடும்ப பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.


விமர்சனம்



இதனையடுத்து ஹாரி-மேகன் ஆகிய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தனர்.பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே இந்த தம்பதியை பேட்டிகண்டார். அப்போது பேசிய மேகன், அரச குடும்பத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் நிறத்தை விமர்சித்ததாகத் தெரிவித்திருந்தார்.இது அரச குடும்பத்தின்மீது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.


latest tamil news




தற்போது இளவரசர் வில்லியம் கிழக்கு லண்டனில் உள்ள ஓர் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஹாரி -மேகன் ஆகியோரது பேட்டிக்குப்பிறகு தான் அவர்களிடம் பேசவில்லை என்று தெரிவித்த வில்லியம் அரச குடும்பத்தில் எந்த ஒரு நபரும் இனப்பாகுபாடு காட்டுபவர் கிடையாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
12-மார்-202109:38:27 IST Report Abuse
Amirthalingam Shanmugam இனப்பாகுபாடு வெள்ளைக்காரனின் ரத்தத்தில் ஊறிய ஓன்று. பிரிட்டன் அரசு குடும்பத்துக்குள் நுழையும் முதல் கருப்பின மருமகள் மேகன், அவரே கடைசியும் ஆவார். அதனாலேயே ராணி இரண்டாம் எலிசபெத் இந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக அரச குடும்ப பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
12-மார்-202108:42:49 IST Report Abuse
Balaji இவர்கள் சென்ற இடமெல்லாம் பிரித்தாளுவதும், மக்களை குழப்பி குட்டையில் மீன் பிடிப்பதும், கலகமூட்டுவதும், மதம் பரப்புவதும், பரவலாக செய்த பாரம்பரியம் மிக்கவர்கள்..
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
11-மார்-202123:20:19 IST Report Abuse
வெகுளி சும்மாவா அந்தக்கா தற்கொலை வரை போயிருக்கு? இனப்பாகுபாடு இல்லையின்னா ஹிஹி வரதட்சணை கொடுமையின்னு எடுத்திக்கலாமா?... இந்த பஞ்சாயத்துக்கு ஓசிச்சோறுதான் தீர்ப்பு சொல்லணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X