திமுக வேட்பாளர் பட்டியல்: கொளத்தூரில் ஸ்டாலின்- சேப்பாக்கத்தில் உதயநிதி

Updated : மார் 12, 2021 | Added : மார் 12, 2021 | கருத்துகள் (105) | |
Advertisement
சென்னை: 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட நபர்களே தேர்வு
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், கொளத்தூரில் 3வது முறையாக ஸ்டாலினும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியும் போட்டியிடுகின்றனர். இன்று வெளியான பட்டியலில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் சில தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்ட நபர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மட்டும், 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், 187 தொகுதிகளில், தி.மு.க.,களமிறங்குகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களுக்கான தொகுதி எண்ணிக்கை முடிவாகி உள்ளது. 234 தொகுதிகளில், 47 தொகுதிகளில், தனி சின்னத்தில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. மீதமுள்ள, 187ல், தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., உள்ளிட்ட இதர கட்சிகளும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் 61 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 173 தொகுதிகளில் திமுக களம் இறங்குகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கொளத்தூரில் ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சேப்பாக்கத்தில் உதயநிதி, காட்பாடியில் துரைமுருகன், திருவண்ணாமலை எவ வேலு, ஆலங்குளம் ஆலடி அருணா, திருச்சுழி தங்கம் தென்னரசு களமிறங்குகின்றனர். திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், திருச்சி மேற்கில் கேஎன் நேரு, கரூரில் செந்தில் பாலாஜி, மொடக்குறிச்சியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகின்றனர். எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமார், போடியில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் நிற்கின்றனர். கூட்டணி கட்சியை சேர்ந்த 14 பேர் உதயசூரியன் சின்னத்தில் நிற்கின்றனர். அதையும் சேர்த்தால், 187 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது.

பட்டியலை வெளியிட்டு ஸ்டாலின் கூறுகையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது அரசியல் கூட்டணி அல்ல. தேர்தல் கால கூட்டணி அல்ல. இது கொள்கை கூட்டணி. திமுக வேட்டாளர்கள் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 61 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிமுக, பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் உள்ளிட்ட கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அனைவரும் வெற்றி பெறுவார்கள். இதில் சந்தேகம் இல்லை. கூட்டணி கட்சியினரும் வெற்றி பெறுவார்கள். திமுக ஆட்சிஎன்ற ஒற்றை நோக்கத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு, எதிர்காலத்திற்கு உங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என பத்திரிகையாளர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்


வேட்பாளர் பட்டியல்

தொகுதி - வேட்பாளர் பெயர்
பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்,நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,
கன்னியாகுமரி - ஆஸ்டின்
ராதாபுரம் - அப்பாவு,
பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
நெல்லை - லட்சுமணன்,
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி - கீதா ஜீவன்
முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,
பரமக்குடி - சே.முருகேசன்,
திருச்சுழி - தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,
கம்பம் - ராமகிருஷ்ணன்
போடி - தங்கதமிழ்ச்செல்வன்,
ஆண்டிப்பட்டி - மகாராஜன்,
திருமங்கலம் - மணிமாறன்
மதுரை மேற்கு - சின்னம்மாள்,
மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு - தளபதி,
சோழவந்தான் - வெங்கடேஷன்
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,
ஆலங்குடி - மெய்யநாதன்,
திருமயம் - எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை - முத்துராஜா,
விராலிமலை - பழனியப்பன்,
பேராவூரணி - அசோக்குமார்
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை,
ஒரத்தநாடு - ராமச்சந்திரன்,
தஞ்சை - நீலமேகம்
திருவையாறு - துரை சந்திரசேகரன்,
கும்பகோணம் - அன்பழகன்
நன்னிலம் - ஜோதிராமன்,
திருவாரூர் - கலைவாணன்,
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
வேதாரண்யம் - வேதரத்தினம்,
பூம்புகார் - நிவேதா முருகன்,
புவனகிரி - துரை சரவணன்
குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
நெய்வேலி - சபா ராஜேந்திரன்
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்,
குன்னம் - சிவசங்கர்,
பெரம்பூர் - பிரபாகரன்
துறையூர் - ஸ்டாலின் குமார்,
முசிறி - தியாகராஜன்,
மணச்சநல்லூர் - கதிரவன்
லால்குடி - சவுந்திரபாண்டியன்,
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்,
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
கரூர் - வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி - இளங்கோ,
நத்தம் - ஆண்டி அம்பலம்
ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
பழனி - ஐபி செந்தில்குமார்,
மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
சிங்காநல்லூர் - கார்த்திக்,
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி,
கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்
கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்,
பவானி - கே.பி.துரைராஜ்,
காங்கேயம் - சாமிநாதன்
தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்,
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,
ராசிபுரம் - மதிவேந்தன்,
வீரபாண்டி - தருண்
சேலம் தெற்கு - சரவணன்,
சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்,
சங்ககிரி - ராஜேஸ்,
எடப்பாடி - சம்பத்குமார்
மேட்டூர் - சீனிவாச பெருமாள்,
ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்,
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
திருக்கோவிலூர் - பொன்முடி,
விக்கிரவாண்டி - புகழேந்தி,
விழுப்புரம் - லட்சுமணன்,
திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்,
மயிலம் - மாசிலாமணி,
செஞ்சி - மஸ்தான்
செய்யாறு - ஓ.ஜோதி,
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,
போளூர் - சேகரன்,
கலசப்பக்கம் - சரவணன்
கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி,
திருவண்ணாமலை - எவ வேலு,
செங்கம் - மு.பெ.கிரி
பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்,
பென்னாகரம் - இன்பசேகரன்,
பாலக்கோடு - முருகன்
ஓசூர் - ஒய்.பிரகாஷ்,
வேப்பனஹள்ளி - முருகன்,
கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,
பர்கூர் - மதியழகன்
திருப்பத்தூர் - நல்லதம்பி,
ஜோலார்பேட்டை - தேவராஜு,
ஆம்பூர் - வில்வநாதன்
குடியாத்தம் - அமலு,
அணைக்கட்டு - நந்தகுமார்,
வேலூர் - கார்த்திகேயன்,
ராணிப்பேட்டை - காந்தி
உத்தரமேரூர் - சுந்தர்,
செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,
காட்பாடி - துரைமுருகன்,
சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,
ஆவடி - சா.மு.நாசர்
திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,
மாதவரம் - சுதர்சனம்,
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி,
மயிலாப்பூர் - த.வேலு,
சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,
அண்ணா நகர் - மோகன்,
சேப்பாக்கம் - உதயநிதி
எழும்பூர் - பரந்தாமன்,
திருவிக நகர் - தாயகம் கவி,
வில்லிவாக்கம் - வெற்றியழகன்
பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news

முதல்வரை எதிர்த்து சம்பத்குமார்எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமாரும், போடி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்கதமிழ்செல்வனும், தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து சிவசேனாதிபதியும், கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில்பாலாஜியும் போட்டியிடுகின்றனர்.

திமுக.,வில் 71 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 12 பெண்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். திமுக 25 தனித்தொகுதிகளிலும், 2 பழங்குடியின தொகுதியிலும் போட்டியிடுகிறது. 14 தொகுதிகளில் தி.மு.க.,வுக்கும் - பா.ஜ.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 129 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriniv - India,இந்தியா
13-மார்-202100:27:22 IST Report Abuse
Sriniv ஆயிரம் விளக்கு தொகுதி இந்த பட்டியலில் இல்லை ?
Rate this:
Susil Kumar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மார்-202121:24:41 IST Report Abuse
Susil Kumarஇனபநிதி வயசுக்கு வந்ததும் வருவார் , வெயிட் பண்ணுங்க....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
12-மார்-202122:06:30 IST Report Abuse
Narayanan துணை முதல்வர் உதயநிதி தயார் . அவரின் கால்களில் விழ துரைமுருகன் ரெடி . போங்க நீங்களும் உங்கள் அரசியலும்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-மார்-202121:49:23 IST Report Abuse
A.George Alphonse துரை முருகன்,பொன்முடி,ஆலடி அருணா போன்ற பல முதியோர்கள் இன்னும் சில வாரிசுகள் இந்த கட்சியை ஒரு வழிப்பண்ணாமல் ஓயமாட்டார்கள் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X