தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம்:பழனிசாமி

Updated : மார் 12, 2021 | Added : மார் 12, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
ஆத்தூர்: கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலின் முதல்வராவது போன்று கனவு காணலாம் அது நடக்கவே நடக்காது. என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை எண்ணிப்பார்க்க

ஆத்தூர்: கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலின் முதல்வராவது போன்று கனவு காணலாம் அது நடக்கவே நடக்காது. என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.latest tamil news
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, தமிழக முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
திமுக நாட்டு மக்களுக்கு என்ன செய்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக. அதிமுக மீது ஸ்டாலின் கூறும் குற்றசாட்டுகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? 52,31,000 மாணவ மாணவியருக்கு ரூ 7330 கோடி மதிப்பில் மடிகணிணி வழங்கப்பட்டுள்ளது தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.


latest tamil newsதிமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக அளித்த வாக்குறுதி என்ன ஆனது?எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு.இவர்கள் இருவரும் மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக உணவு தானிய உற்பத்தியை பெருக்கி விருது பெற்றுள்ளோம் 2006 - 2011 வரை கடுமையான மின்வெட்டு நிலவியது.

தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருக்கிறது 2011 ல் திமுக ஆட்சி முடியும் போது100 க்கு 35 பேர் கல்வி கற்றார்கள் ; தற்போது அரசின் திட்டங்களால் 100 க்கு 49 பேர் உயர் கல்வி பயில்கிறார்கள். கொரோனா காலத்தில் அரசி பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கி மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளோம்

கருணாநிதி குடும்பம் என்றாலே வாரிசு அரசியல் குடும்பம். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதிதான் வரவேண்டுமா? பழனிசாமி, ராமசாமி, குப்புசாமி வரக்கூடாதா?
திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.பெண்கள், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இருக்காது; நில அபகரிப்புகள் நடக்கும் நான் முதலமைச்சராக இருப்பது சேலம் மாவட்ட மக்களுக்கு பெருமை. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதே முதலமைச்சரின் பணி.முதலமைச்சர் ஆவேன் என ஸ்டாலின் கனவு காணலாம்; அது நடக்கவே நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-மார்-202119:35:01 IST Report Abuse
bal அவர்கள் வாரிசுகள்....நாலு வருடம் முன்னாள் நீங்கள் யாரென்றே தமிழ் நாட்டுக்கு தெரியாது..
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
13-மார்-202117:57:12 IST Report Abuse
Loganathaiyyan கீழே பாருங்கள் President of political parties in India Congress - Sonia's son NCP - Pawar's daughter RJD - Lalu's son SP - Mulayam's son Akali Dal - Badal's son TMC - Mamta's nephew JDS - Deve Gowda's son BSP - Mayawati's nephew TRS - Chandrasekhar Rao's son TDP - Chandrababu Naidu's son Shiv Sena - Uddhav Thackeray's son National Conf - Farukh Abdullah's son YP - Rajasekhara Reddy's son LJP - Ram Vilas Paswan's Son JMM - Shibu Soren's son BJD - Biju Patnaik's son PDP - Mufti's daughter RLD - Ajit Singh's son INLD - Chautala's son DMK - Karunanidhis son BJP - any son of Bharat Mata Which party has democracy??? Do they worry about their children or our country???A few Indians want Dynasty Rule, but claim to be democratic......
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
13-மார்-202115:32:39 IST Report Abuse
A NATARAJAN இன்னும் நம்ம தமிழ் நாட்டு ஆளுவ, முட்டா பயலுவளாவே இருக்கேன்ங்களே...இந்த அரசியல்ல வாரிசு என்ற வார்த்தை இல்லாட்டி அரசியலே இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X