வாழப்பாடி:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுவர். கொள்ளையடிக்கும் கூட்டம் வரக்கூடாது,'' என, முதல்வர் பழனிசாமி., பேசினார்.
தில்லுமுல்லு
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டசபை தொகுதி, வாழப்பாடியில், அ.தி.மு.க., வேட்பாளரான, எம்.எல்.ஏ., சித்ராவை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி., பேசியதாவது:அ.தி.மு.க., அரசு, ஏழை, எளிய மக்களுக்கானது. ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தி.மு.க., என்றும் கொள்ளை அடிப்பதையே குறிக்கோளாக கொண்ட கட்சி. இந்தியாவில், ஊழலுக்கென உள்ள ஒரே கட்சி அது தான்.ஸ்டாலின் பிரசாரம் ஒருபோதும் எடுபடாது. ஏதாவது தில்லுமுல்லு செய்து, தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார்.அது நடக்காது.
அ.தி.மு.க., அரசு தொலைநோக்கு பார்வையோடு செயல்படுகிறது.தற்போது, நான்கு ஆண்டுகள் கடந்து, ஐந்தாவது ஆண்டாக ஆட்சி பொறுப்பில் நாம் அமர்ந்துள்ளதை, ஸ்டாலினால் பொறுத்து கொள்ள முடியவில்லை. யுத்தம்தி.மு.க., அராஜக கட்சி. அவர்கள், ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை சிந்தித்து, நீங்கள் ஓட்டு போட வேண்டும்.தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பில் ஈடுபடுவர். கொள்ளை அடிக்கும் கூட்டம் வரக்கூடாது.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல். நான் முதல்வராவது பெரிதல்ல. என்னைப் பொறுத்தமட்டில் மக்கள் தான் முதல்வர். இத்தேர்தலைப் பொறுத்தவரை, தர்மம், அதர்மம் இடையே நடக்கும் யுத்தம்.இதில், தர்மமே வெல்லும். அதற்கு, இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE