சொத்து பத்திரம் எழுதுவதில் கூடுதல் கவனம் அவசியம்

Added : மார் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான பத்திரம் எழுதுவதில் பல்வேறு கூடுதல் விஷயங்களையும் கவனிக்க வேண்டும். வீடு, மனை வாங்குவோர் அதற்கான கிரைய பத்திரத்தை எழுதுவதில் பொது விஷயத்தில் மட்டுமே பலரும் கவனம் செலுத்துகிறோம். சொத்துக்கள் விற்பனை பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர், பெயர், முகவரி, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, வகை, நான்கு எல்லை போன்ற தகவல்கள் இருந்தால் போதும் என
சொத்து பத்திரம் எழுதுவதில் கூடுதல் கவனம் அவசியம்

அசையா சொத்துக்கள் வாங்குவதற்கான பத்திரம் எழுதுவதில் பல்வேறு கூடுதல் விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

வீடு, மனை வாங்குவோர் அதற்கான கிரைய பத்திரத்தை எழுதுவதில் பொது விஷயத்தில் மட்டுமே பலரும் கவனம் செலுத்துகிறோம். சொத்துக்கள் விற்பனை பத்திரத்தில் விற்பவர், வாங்குபவர், பெயர், முகவரி, சொத்தின் சர்வே எண், பரப்பளவு, வகை, நான்கு எல்லை போன்ற தகவல்கள் இருந்தால் போதும் என நினைப்பது தவறு. ஆனால், இது போதுமானதல்ல. சொத்து எந்த நிலையில் உள்ளது, காலி நிலமா, தோட்டமா, வீடு, கிணறு, ஆழ்குழாய் உள்ளதா என பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.

இதுபோன்ற தகவல்களை பத்திரத்தில் அவசியம் குறிப்பிட வேண்டும். நிலம், வீட்டின் மதிப்பை மட்டும் குறிப்பிட்டால் போதும் என நினைக்கலாம். ஒரு சொத்தை நிலம், வீடு ஆகியவற்றுடன் மட்டுமே வரையறுக்க முடியாது. அதில் உள்ள பொருட்களையும் சேர்த்து தான் மதிப்பு தீர்மானிக்க வேண்டும். இது போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடவில்லை என்றால் விற்பனை முடிந்த பின் மனையில் உள்ள வீட்டுக்கு விற்றவர் உரிமை கோரினால் சிக்கல் ஏற்படும்.

நீங்கள் வாங்கும் நிலத்தில் என்ன வசதிகள் இருக்கிறதோ அதை அப்படியே பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். மரங்கள் இருந்தாலும் என்ன வகை, எத்தனை என்பதை குறிப்பிட வேண்டும் இதற்கு பதிவு துறையில் மதிப்புகள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த மதிப்புகளை விசாரித்து பத்திரத்தில் குறிப்பிடுவது நல்லது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
19-மார்-202109:07:48 IST Report Abuse
Sathiamoorthy.V யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து வை . இதை எல்லாம் பார்த்து மக்கள் மயங்குவார்களா என்ன . பத்திர பதிவு துறையில் நடக்கும் தில்லு முள்ளு மக்களுக்கு தெரியாதா . தேர்தல் நடக்க இருப்பதால் நிறைய நில கட்டிட விற்பனை விளம்பரங்கள் காணப்படுகின்றன . மக்கள் மீது கரிசனம் காட்டுவது போல் நடிக்காதீர்கள் . சட்டியில் இருந்தால் தான் அகப்பைக்கு வரும் . மக்களிடம் கரோனா காலகட்டத்தில் பணம் இல்லாத சமயத்தில் எப்படி இவ்வளவு நில கட்டிட விற்பனை விளம்பரங்கள். கண்டிப்பாக மக்கள் இப்போது வாங்க சந்தர்ப்பம் இல்லாத பட்சத்தில் அரசியல் வாதிகள் குண்டர்கள் வாங்கி தள்ளுகிறார்களா ? சொந்த முதலில் பில்டர்கள் கட்டுவதில்லை . மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் வங்கிகளில் கடன் வாங்கி வங்கிகளுக்கு மக்களுக்கு பட்டை நாமம் போடுகிறார்கள் .
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
16-மார்-202116:55:10 IST Report Abuse
Hari என்னமோ உங்களால் முடிந்த அளவிற்கு குழப்புங்கள் ,வீட்டு நிலம் ஒருவர் பெயரும் வீடு ஒருவர் பெயருக்கும் எப்படி இருக்க முடியும் ,அதை விளக்கி சொல்லுங்கள் ,கயவர்களுக்கு வழிகாட்டிய தமிழன் இன்னும் என்ன என்ன கேடுகளை அடையப்போறானோ.நிம்மதியா வீடுவாங்கி வாழ விடுங்கப்பா திருட்டு பயம் வேறு ,தி மு க பயம் வேறு எப்போ நம் கைவிட்டு சொத்து புடுங்கப்படுமோ என பயமாக வாழ்ந்து சாகணுமா.சொல்றத தெளிவாக சொல்லுங்க ,என்னமோ பத்திரப் பதிவு அலுவலகத்தில் அனைவரும் அரிச்சந்திரனின் வாரிசுகள்போல யோக்கியர்களாகவா இருக்கிறார்கள் ,அல்லது வக்கீலும்,தீர்ப்புகளும் உடனடியாக நியாயமாகவா கிடைக்குது .கலிகாலம்.
Rate this:
Cancel
jawahar - Nagapattinam,இந்தியா
15-மார்-202120:53:51 IST Report Abuse
jawahar நல்ல தகவல், நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X