அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு உள்ளூர் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்; தி.மு.க., தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்

Updated : மார் 13, 2021 | Added : மார் 13, 2021 | கருத்துகள் (141)
Share
Advertisement
சென்னை: இன்று ( மார்ச்-13ம் தேதி ) தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;* ரேசன் கடைகளில் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.*அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு 30 ல் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.*தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை (MLC) கொண்டு வரப்படும்.*சட்டம் ஒழுங்கு பணியில் உயிரிழந்த போலீஸ்
dmk, திமுக, தேர்தல் அறிக்கை, election manifesto

சென்னை: இன்று ( மார்ச்-13ம் தேதி ) தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;

* ரேசன் கடைகளில் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
*அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு 30 ல் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
*தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை (MLC) கொண்டு வரப்படும்.
*சட்டம் ஒழுங்கு பணியில் உயிரிழந்த போலீஸ் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.
* கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
*நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைபட்டா
*கிராமநத்தத்தில் உள்ள வீட்டுமனைகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும்
* சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்
*அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
*கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
*ஹிந்து ஆலயங்களில் குடமுழுக்கு, புனரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
*மசூதி, தேவாலயம் சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
*60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்
*500 இடங்களில் கலைஞர் உணவகம்
*மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
*பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
*பத்திரிகையாளர்கள், ஊடக துறையினரின் ஓய்வூதியம் உயர்த்தப்படும்
*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
*புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்
*அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும்
*முக்கியமான மலைக்கோயில்களில் அனைத்திலும் ரோப் கார் வசதி
*நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும்
*முதல்பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.
* 200 தடுப்பணைகள் கட்டப்படும்
*ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை அறிக்கையை விரைந்து பெற நடவடிக்கை
*மத்திய அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் 8 ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்
*விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்
*இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு
*பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்
*தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
*இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு அமைக்கப்படும்
*திருச்சி, மதுரை , சேலம், கோவையில் மெட்ரோ ரயில்
*வேலூர்,ஒசூர், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்
*சிறுகுறு விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்
*பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் போலீஸ் ஸ்டேசன் அமைக்கப்படும்
*பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை நேரம் பால் வழங்கப்படும்
*கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
*100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக வழங்கப்படும்.
*அரசு உள்ளூர் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்.
*தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.


latest tamil news


*நடைபாதைவாசிகள் தங்க இரவு நேர காப்பகம் ஏற்படுத்தப்படும்
*மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும்
*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின் போது இறந்தால் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்
*சத்துணவு ஊழியர்கள அரசு பணியில் அமர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்
*அதிமுக அரசால் ஏற்பட்டுள்ள கடன்சுமையை சரிப்படுத்த பொருளாதார குழு
*கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை
*தேயிலை, எண்ணெய் வித்துகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஏற்படுத்தப்படும்
*அரசுத்துறை நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்குமேல் தற்காலிக பணியில் உள்ளவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
*மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம்
*அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டேப்லேட் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும்.
*ஆதரவற்ற பெண்கள் திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்
*தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பஸ்கள்
*மீனவர் சமுதாயத்தினர் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுவர்
*பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி இருக்கும் அர்ச்சகர்கள் உடனடி பணி நியமனம்
*தமிழக ஆறுகள் மாசடையாமல் காக்க தமிழக ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்
*ஊட்டச்சத்து குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கு உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும்.
*பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் நலன்காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்
*ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்
*தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்
*வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்
*அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறு கால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும்
*புதிய தனி கனிமவள அமைச்சகம் உருவாக்கப்படும்
*கனிமங்கள், தாதுமணல், மணல் ஆகிய தொழில்கள் அனைத்தும் டாமி நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்
*போக்குவரத்து துறையினருக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
*நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்
*கரும்பு டன் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
*உழவர் சந்தை அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்
*நீர்பாசனத்துறைக்கு மாற்றாக, புதிய நீர்வள அமைச்சகம் உருவாக்கப்படும்
*நீர்மேலாண்மை ஆணையம் அமைந்திட சட்டம் கொண்டு வரப்படும்
*முதல்வரின் நேரடி பார்வையில் ரூ.10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்
*ஏழை, எளிய சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்
*தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்
*இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை
*வெளிநாடுவாழ் தமிழர்கள் நலனை பேணுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்
*மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
*ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ரூ.1000 ஊக்கத்தொகை.
*மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்
*மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்படும்.
*புகழ்பெற்ற ஹிந்து கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்
*பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும்
*சென்னை சிறுசேரியில் நவீன பேருந்துநிலையம் அமைக்கப்படும்
*30 வயதிற்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
*மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவுவங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
*சட்டசபை கூட்டத்தொடரை 100 நாட்கள் நடத்த நடவடிக்கை
*சட்டசபை நிகழ்ச்சிகள், டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்
*பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும்
*சென்னையில் திராவிட இயக்க திடல் கோட்டம் அமைக்கப்படும்
*குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதி திட்டம் கொண்டு வரப்படும்
*முக்கியமான மலைக்கோயில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி செய்யப்படும்
*கிராமப்புற பூசாரிகளின் சம்பளம், பென்சன் அதிகரிக்கப்படும்.
*இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இந்த அமைச்சகத்திற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என பெயரிடப்படும்

Advertisement
வாசகர் கருத்து (141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
15-மார்-202106:56:45 IST Report Abuse
Girija கவலைபடாதீங்க கேசவன் , உங்களுக்கு க்கூடிய விரைவில் நல்ல அருமையான, அழகான, வாயை திறந்தாலே கூவம் கூட மணக்கும் என்கிற அளவிற்கு. குத்தாட்டம் போட தெரிந்த மகளிர் அணி பெண் கிடைப்பாள் இலவசமாக . தலைவர் சமாதி யில் திருமணம் செய்து வைப்பார் இலவசமாக .
Rate this:
Cancel
sivajothi.s - trichy,இந்தியா
15-மார்-202105:20:06 IST Report Abuse
sivajothi.s இலவசம் வேண்டாம் . உழைப்பதற்கு வாய்ப்பை கொடு. இவற்றை செய்ய தவறினால் சவுக்கடி கொடுப்போம். இதற்கு ஒப்புக்கொண்டால் எங்கள் ஓட்டு உங்களுக்கே.
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
14-மார்-202114:45:51 IST Report Abuse
M.Selvam குட்டையில் ஊறிய ரெண்டாவது மட்டையின் அறிக்கை இதை மிஞ்ச போகுது ..அப்ப என்ன செய்யப் போறீங்க ஜால்றாக்களே ??? :))))
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X