தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை ஏமாறாமல் இருக்க அலுவலர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை ஏமாறாமல் இருக்க அலுவலர் எச்சரிக்கை

Added : ஜூன் 27, 2010

கரூர்: "தொழிலாளர் நலவாரியம் சார்பில் அளிக்கப்படும் நலத்தொகைகளை பெறுவதில் போலி சங்கங்களை நம்பி தொழிலாளர்கள் ஏமாறவேண்டாம்' என்று மாவட்ட தொழிலாளர் அலுவலர் செல்வராஜ் அறிவித்துள்ளார்.


அறிக்கையில் உள்ளதாவது: கரூர் தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தின் மூலமாக தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட்ட 16 நல வாரியங்களில் கட்டிடம் கட்டுதல், சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி ஓட்டுதல், தையல் தொழிலாளர், முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர், பனைமரம் ஏறுபவர், கைத்தறி தொழிலாளர், கைவினை தொழிலாளர், காலணி தயாரிப்பவர், ஓவியர், மண்பாண்டம் செய்பவர், வீட்டுப்பணியாளர், அப்பளம் தயாரித்தல், ஊதுபத்தி தயாரித்தல், தோல்பொருள் பதனிடுதல், விசைத்தறி தொழிலாளர், தெரு வியாபாரம் மற்றும் நிறுவனங்களில் பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சம்மந்தப்பட்ட தொழிலாளர் நலவாரியங்கள் வாயிலாக பல உதவி தொகை வழங்கி வருகிறது.


பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு பதிவு புதுப்பித்தல் ஆகியவை அரசாங்கத்தால் இலவசமாக செய்து தரப்படுகிறது. நலவாரியங்களில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு சில தனிநபர்கள் மற்றும் ஒரு சில சங்கத்தினர் இடைத்தரர்கள் மூலமாக பணம் பெறுவதாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது. அப்படிப்பட்டவர்களை இனம் கண்டுகொண்டு, பதிவுக்கோ, புதுப்பித்தலுக்கோ மற்றும் நலஉதவிகளை பெறுவதற்கோ எவரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டார். அரசு தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், பதிவு புதுப்பிப்பதற்கும் முழுமையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவசமாகவே செய்து வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சந்தேகங்களை "தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகம், 53, காந்திபுரம் மின்வாரிய அலுவலகம் பின்புறம், செங்குந்தபுரம்' என்ற முகவரில் நேரிலோ அல்லது 04324-231545 என்ற டெலிஃபோன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X