அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது நடக்கும்? எது நடக்காது?

Updated : மார் 14, 2021 | Added : மார் 14, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: தி.மு.கழகத்தின் தொலைநோக்கு பார்வையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. தேர்தல் அறிக்கையில், சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்த்தால், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சேர்த்தே, 482 திட்டங்களை அறிவித்து, 'எக்ஸ்ட்ரா'வாக கூவியுள்ளது அக்கட்சி.தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள, 482 வாக்குறுதிகள், 'பிளஸ்'

சென்னை: தி.மு.கழகத்தின் தொலைநோக்கு பார்வையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. தேர்தல் அறிக்கையில், சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்த்தால், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சேர்த்தே, 482 திட்டங்களை அறிவித்து, 'எக்ஸ்ட்ரா'வாக கூவியுள்ளது அக்கட்சி.latest tamil newsதேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள, 482 வாக்குறுதிகள், 'பிளஸ்' மாவட்ட வாரியான வாக்குறுதிகள், 1,437 ஆகியவற்றைக் கூட்டினால், மொத்தம், 1,919 வாக்குறுதிகள் வருகின்றன. ஒருவேளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலும், 5 x 365 = 1,825 நாட்கள் தான் அதற்கு ஆட்சியதிகாரம் இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வாக்குறுதி வீதம் நிறைவேற்றினால் கூட, 94 வாக்குறுதிகள் மிச்சமிருக்குமே என்று ஒரே கவலையாக இருக்கிறது!எதிர்க்கட்சிகள் இதை மீறி வேறு எதையும் புதிதாகச் சொல்லிவிடக் கூடாது என்று யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.
அதனால், எதையும் மிச்சம் வைக்காமல் அத்தனையையும் சொல்லித் தீர்த்துள்ளனர்.

சரி அப்படி என்ன விஷயங்களை முன்வைத்துள்ளனர் என்று தேடத் துவங்கியபோது, கண்ணில் பட்ட சொற்கள் சுவாரசியமாக இருந்தன. 'வலியுறுத்தப்படும்', 'தொடர்ந்து வலியுறுத்தப்படும்' 'முயற்சி மேற்கொள்ளப்படும்' என்பன போன்ற சொற்கள் தான் திரும்பத் திரும்ப எட்டிப் பார்த்தன.
உதாரணமாக, 482 வாக்குறுதிகள் உள்ள தேர்தல் அறிக்கையில்,
*வலியுறுத்தப்படும்-- 35 முறை,
*தொடர்ந்து வலியுறுத்தப்படும் -- 11 முறை,
*முயற்சிகள் மேற்கொள்ளப்படும் -- 15 முறை,
*ஆவணம் செய்யப்படும் -- 18 முறை
*நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் -- 2 முறைஎன்று மட்டுமே உள்ளது.

அதாவது, மத்திய அரசைச் சார்ந்த விஷயங்களிலும், முடிவு எடுப்பதில் தமிழகம் மட்டுமே முடிவு எடுக்க முடியாத விஷயங்களிலும், வலியுறுத்தப்படும், தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்ற வார்த்தைகள் பயன்பட்டுள்ளன.முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதெல்லாம் தமிழக அரசால் மேற்கொள்ளத்தக்க விஷயங்களைப் பேசுகிறது.

துணிச்சலாக, 'நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் இரண்டே இடங்களில்தான் வருகின்றன.இதேபோன்று, ஒரு பருந்து பார்வையை, மாவட்ட வாரியான வாக்குறுதிகள் மீதும் செலுத்தினோம்.

அங்கே,
*நடவடிக்கை எடுக்கப்படும் -- 230 முறை,
*நிறைவேற்றப்படும் -- 46 முறை,
*விரிவுபடுத்தப்படும் -- 12 முறை
*துவங்கப்படும் -- 130 முறைஇடம்பெற்றுள்ளன.


latest tamil newsஅதாவது, நிறைவேற்றப்படும், விரிவுபடுத்தப்படும் ஆகியவை எல்லாம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள். அவை ஒன்று நிறைவேற்றப்படும். அல்லது விரிவுபடுத்தப்படும். நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் யூகமான திட்டங்கள். துவங்கப்படும் என்பவை மட்டுமே உறுதியாக ஆரம்பிப்போம் என்று சொல்லப்படுபவை.

எல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் தானே? இதில் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்களா? எது நடைபெறும், எது நடைபெற சாத்தியமில்லை, எது சந்தேகத்துக்கிடமானது என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் புள்ளியியல் முறையும் நிச்சயம் உதவும்.இப்போது உங்களுக்கே தேர்தல் அறிக்கையின் உண்மை புரிந்திருக்குமே!


தி.மு.க.,வின் 2வது கதாநாயகன்!

தலைப்பை பாத்ததும் உதயநிதி ஞாபகம் வந்தா தப்பு.ஸ்டாலின், நேற்று கருணாநிதி நினைவிடம் சென்றார். அவரது நினைவிடத்தில், தேர்தல் அறிக்கையை வைத்து வணங்கினார். பின் அறிவாலயம் வந்து, அதை வெளியிட்டார்.''எங்கள் தேர்தல் அறிக்கையை, 'தேர்தல் கதாநாயகன்' என்று கூறுவதுண்டு. இம்முறை எங்கள் வேட்பாளர் பட்டியலுக்கு அந்தப் பெயர் கிடைத்து விட்டது. ஆகவே, தேர்தல் அறிக்கைக்கு இரண்டாவது கதாநாயகன்அந்தஸ்து கிடைத்துள்ளது.''எங்கள் தேர்தல் அறிக்கை கட்சியின் விருப்பமாக இல்லாமல், தமிழக மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது.

முதல் தேர்தலில், நாவலர் தலைமையிலான குழு, தமிழகம் முழுதும் பயணம் செய்து, மக்களை சந்தித்து, கருத்துக்களை பெற்று, அறிக்கை தயாரித்தது.''அதேபோல, இப்போது, டி.ஆர்.பாலு தலைமையில், சுப்புலட்சுமி ஜெகதீசன், ராசா, செல்வராஜ், கனிமொழி, சிவா, இளங்கோவன், மற்றும் பேராசிரியர் ராமசாமி மக்கள் கருத்துகளை தொகுத்து அறிக்கை தயாரித்துள்ளனர். இதில், 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன,'' என்றார் ஸ்டாலின்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
14-மார்-202120:52:51 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் எதுவும் நடக்காது. பாஜகவின் A (Adimai) டீம் அதிமுக, B டீம் திமுக. திமுகவுக்கும், பாஜகவுக்கும் ரெண்டு அண்டர்ஸ்டாண்டிங், ஒன்னு 2G கேசிலிருந்து தப்பிக்க வைக்கணும், இன்னொன்னு அதிமுகவோட கூட்டு சேர்ந்து அதை அழிக்கனும். அதுக்கு கைமாறா, தேர்தலுக்கப்புறம், மத்தியில பாஜக என்ன சட்டம் கொண்டுவந்தாலும், திமுக அதை சப்போர்ட் செய்யும்.
Rate this:
Cancel
Saravanan -  ( Posted via: Dinamalar Android App )
14-மார்-202119:21:14 IST Report Abuse
Saravanan தினமலர், இது போல் அதிமுக தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து, உங்களின் பொருளாதார நிபுணர்களை வைத்து ஒரு கட்டுரை எழுதுங்கள். வீட்டுக்கு ஒரு அரசுவேலை. யப்பா சாமி. போதும்டா. ரீல் அருந்து போச்சு.
Rate this:
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
14-மார்-202116:59:15 IST Report Abuse
R.Selvaperumal எது எப்படி இருந்தாலும் திமுக வரவே கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X