சக்கர நாற்காலியில் பிரசாரம் செய்த மம்தா; காயம்பட்ட புலிதான் ஆபத்தான விலங்கு என பேச்சு

Updated : மார் 14, 2021 | Added : மார் 14, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
கோல்கட்டா:சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காயம்பட்ட புலிதான் மிகவும் ஆபத்தான விலங்கு என பேசியுள்ளார்.மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர்,
MamataBanerjee, WheelChair, WestBengalElections2021, Wounded Tiger, Dangerous Animal, Campaigned, மம்தா பானர்ஜி, மேற்குவங்கம், முதல்வர், சக்கர நாற்காலி, பிரசாரம்,

கோல்கட்டா:சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா, காயம்பட்ட புலிதான் மிகவும் ஆபத்தான விலங்கு என பேசியுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், பிரசார கூட்டங்களில் பங்கேற்ற அவரை, கூட்டத்தில், சிலர் தன்னை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியதாக, மம்தா குற்றம்சாட்டினார். இதில் கால் மற்றும் உடலில் பல இடங்களில் காயமடைந்ததாகவும், கால் மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டு பிளாஸ்டர் கட்டு போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் (மார்ச் 12) டிஸ்சார்ஜ் ஆனார். இந்நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே, கோல்கட்டாவில் உள்ள ஹஷ்ரா பகுதியில் பேரணியில் பங்கேற்றார். பேரணியின் போது, மம்தாவிற்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த பிரசாரத்தில் மம்தா பேசியதாவது:


latest tamil news


மக்கள் எங்களுக்கு வாக்களித்தால், அவர்களுக்கு ஜனநாயகம் மீண்டும் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். மேற்குவங்கத்துக்கு எதிரான அனைத்து சதிகளும் முறியடிக்கப்படும். உடைந்த காலுடன் சக்கர நாற்காலியில் நான் பிரசாரம் செய்வேன் என்பதற்கு உறுதியளிக்கிறேன். ஆட்டம் துவங்குகிறது. காயம்பட்ட புலிதான் மிகவும் ஆபத்தான விலங்கு. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛நான் இன்னும் மிகுந்த வேதனையில் இருக்கிறேன். ஆனால் எனது வேதனையைக் காட்டிலும் மக்களின் வலியை அதிகமாக உணர்கிறேன். தொடர்ந்து தைரியமாக போராடுவோமே தவிர கோழைகளுக்கு முன் மண்டியிடமாட்டோம்,' என பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
15-மார்-202109:51:54 IST Report Abuse
Lakshmipathi S அடிபட்ட புலியால் ஆபத்து எனவே சுட்டுவிடவேண்டும்
Rate this:
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
15-மார்-202108:01:13 IST Report Abuse
கைப்புள்ள தமிழக மக்களே இது எல்லாம் உங்களுக்கு புரியுதா இல்லியா? என்னமோ சும்மா அ.தி.மு.க. மோசம் அ.தி.மு.க. மோசம் ன்னுட்டு அங்க தி மு க கிட்ட போனா, அவன் மட்டும் என்ன உங்களை தொட்டில்ல போட்டா தாலாட்ட போறான்? அவன் இன்னும் போட்டு மிதிப்பான். அ.தி.மு.க. காரன்கிட்ட ஏதோ கடைசில முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுல வாழ்க்கையானது ஓடி கிட்டு இருக்கும். தி மு க கிட்ட போனா இருக்கிறதும் போச்சுடா நொள்ளை கண்ணா என்கிற அளவுல இருக்கிறதும் புடுங்கிகிட்டு போய்டும் ஜாக்கிரதை. என்னதான் அ.தி.மு.க. காரன் மொக்க பீசா இருந்தாலும் கடைசிக்கு ஏதோ பிழைக்கிறதுக்கு ஒரு வழி இருக்கும், தி மு க கிட்ட போனா பிழைக்கிற வழி கூட போயி கடைசில எல்லோரும் நடுத்தெருவில் தான் நிக்கணும். அதனால அதை புரிஞ்சுகிட்டு தி மு க வுக்கு ஓட்டு போடுறதை நிறுத்தி விட்டு அ.தி.மு.க. வுக்கு போடுங்க.
Rate this:
Cancel
15-மார்-202107:58:50 IST Report Abuse
S.Balakrishnan. ஒரு காலத்தில் புலி மாதிரி தான் கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடினார். ஆட்டம் அதிகமாகி ஊழல் பெருகியதால் கட்சி தலைவர்கள் ராஜினாமா செய்து விட்டு போனதாலும் வேஷத்தை கலைத்து விட்டு பதுங்கும் பூனையாக நாடகமாடுகிறார். இவரை யாரும் மண்டியிட சொல்ல வில்லை. எதார்த்தமான அரசியல் செய்ய இவ்வளவு வேஷமும் நாடகமும் தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X