அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி; அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Updated : மார் 14, 2021 | Added : மார் 14, 2021 | கருத்துகள் (84)
Share
Advertisement
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனவும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் ஏப்.6ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அதிமுக இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த
ADMK, Manifesto, TamilnaduElections2021, அதிமுக, தேர்தல் அறிக்கை, வாக்குறுதி, வெளியீடு

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் எனவும், வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்.6ல் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அதிமுக இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


latest tamil news




வாக்குறுதிகள்:


* அம்மா இல்லம் என்ற திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா
* வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி
* அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்
* விலையில்லா கேபிள் டிவி இணைப்பு
* ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
* இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
* மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை
* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
* பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை
* மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்
* மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்
* கல்விக்கடன் ரத்து செய்யப்படும்
* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
17-மார்-202108:10:00 IST Report Abuse
நிலா ஏன் இன்னும் ஒருவரும் இந்த அறிக்கை வெளியிடவில்லை?
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
15-மார்-202112:49:58 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ கடன்சுமை இல்லாத தமிழகம். குடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தமிழகம் என்ற ஒரு அறிக்கை தான் தமிழக வளர்ச்சியை எதிர்நோக்கும் ஒரு நேர்மையான மனிதரின் எதிர்பார்ப்பு அப்படிப்பட்ட ஒரு நூறு பேர் இருப்பாங்களா தமிழ்நாட்டுல? அந்த நூறு பேர் ஓட்டுக்காக இதுபோல வாக்குறுதி குடுத்தா மத்த 5கோடியே 99லட்சத்தி 99ஆயிரத்து தெள்ளாயிரம் ஓட்டு போயிருமில்ல?
Rate this:
Cancel
Velu Karuppiah - Chennai,இந்தியா
15-மார்-202109:52:32 IST Report Abuse
Velu Karuppiah ஸ்டாலின் ஆகட்டும் எடப்பாடி ஆகட்டும் மற்ற தலைவர்கள் ஆகட்டும் யாராவது ஒருவராவது அரசு பணிகளுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று உறுதி கூறுகிறீர்களா. இவர்களால் சத்தியமாக உறுதி கொடுக்க முடியாது. அரசு அலுவலர்களை சம்பாதிக்க விட்டால் தான் இவர்கள் கல்லா கட்ட முடியும். இவர்கள் எந்த இலவசங்களை யம் கொடுக்க வேண்டாம். அரசு பணிகளில் யாரும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் குறித்த காலத்தில் எந்த பணிகளையும் செய்து கொடுப்பேன் என்று உறுதி கொடுத்து விட்டு இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்க வரட்டும் வரவேற்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X