பிரசாந்த் கிஷோருக்கு பதவி?

Updated : மார் 16, 2021 | Added : மார் 14, 2021
Share
Advertisement
தமிழகத்தில் இன்னும் தேர்தலே நடக்காத நிலையில், அதற்குள், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விட்டது போன்ற மனநிலையில் உள்ளார், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். இதை நம்பி, தி.மு.க., தலைமை, அமைச்சர்கள் பட்டியலையும் தயாரித்து விட்டதாம். கடந்த தேர்தலிலும், இதே போல அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தனர், தி.மு.க.,வினர்.கடைசியில், அது குப்பை தொட்டிக்கு போயிற்று.ஆனால், 'இந்த முறை

தமிழகத்தில் இன்னும் தேர்தலே நடக்காத நிலையில், அதற்குள், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விட்டது போன்ற மனநிலையில் உள்ளார், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர். இதை நம்பி, தி.மு.க., தலைமை, அமைச்சர்கள் பட்டியலையும் தயாரித்து விட்டதாம். கடந்த தேர்தலிலும், இதே போல அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தனர், தி.மு.க.,வினர்.கடைசியில், அது குப்பை தொட்டிக்கு போயிற்று.

ஆனால், 'இந்த முறை நிச்சயம் ஸ்டாலின் முதல்வர்; அவரை முதல்வர் பதவியில் உட்கார வைத்து விட்டு தான் மறு வேலை' என்கிறார், பிரசாந்த் கிஷோர்.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும், தன்னை, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டில்லியில் அமர்த்த வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளாராம் கிஷோர். இந்த பதவிக்கு, தமிழக அமைச்சர் பதவி அந்தஸ்து உண்டு. தமிழக அரசின் டில்லி விஷயங்களை, இந்த பிரதிநிதி பார்த்துக் கொள்வார். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரண்டு கட்சிகளுமே, தேர்தலில் தோற்றுப் போன முக்கிய பிரமுகர்களை, இந்த பதவியில் அமர்த்துவது வழக்கம்.

'தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு மூலதனம், தமிழகத்தின் புதிய திட்டங் களை அமல்படுத்த உடனடி அனுமதி என, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்' என, கட்சி மேலிடத்திடம் கூறியுள்ளாராம் பிரசாந்த் கிஷோர். கட்சி மேலிடத்தின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர், இதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டனராம். பிரசாந்த் கிஷோரின் கனவு பலிக்குமா என்பது, மே 2ம் தேதி தெரிய வரும்.


புதிய தேர்தல் ஆணையர் தமிழர்?



தேர்தல் ஆணையத்தில், மூன்று கமிஷனர்கள் உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இவருக்கு அடுத்ததாக, 'சீனியாரிட்டி'யில் உள்ள சுஷில் சந்திரா, அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பார். அதற்கடுத்து, ராஜீவ் குமார் இந்த பதவிக்கு வருவார்.அரோரா பதவி ஓய்விற்கு பின், புதிய ஆணையரை, மத்திய அரசு நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இந்த பதவிக்கு நியமிக்கப்படுவது வழக்கம்

.ஏப்ரலில் அரோரா ஓய்வு பெற்ற பின், யாரை நியமிக்க வேண்டும் என்பதற்கான, 'லாபி' இப்போதே துவங்கி விட்டது. டி.என்.சேஷன், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபாலசாமி என, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமை தேர்தல் ஆணையராக சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கோபாலசாமிக்கு பின், தமிழர்கள் யாரும் ஆணையராக நியமிக்கப்படவில்லை.

'இந்த முறை, தமிழகத்திலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும்' என, முதல்வர் இ.பி.எஸ்., பிரதமரிடம் கேட்டுக் கொண்டு உள்ளாராம். ஓய்வு பெற்ற, ஒரு பெண் அதிகாரியின் பெயர், இந்த பதவிக்கு அடிபடுகிறது. இந்த அதிகாரியை தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்பது, தமிழக முதல்வரின் கோரிக்கையாம்.




சாமியே சரணம்!



தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ், கேரளாவில் இடது சாரிகளை எதிர்த்து போட்டியிடுகிறது.இடதுசாரிகளுக்கு காங்கிரசை விட முக்கிய பிரச்னையாக இருப்பது, சபரிமலை கோவில் விவகாரம் தான்.

'இந்த கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் போகலாம்' என, உச்ச நீதிமன்றத்தில் இடதுசாரி அரசு தெரிவித்த போதே, மக்களுக்கு கோபம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, பெண்களை சபரிமலை கோவிலில் அனுமதிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும், பினராயி விஜயன் தலைமையிலானஇடதுசாரி அரசு எடுத்தது. கேரள மக்களின் வெறுப்பால், கடந்த லோக்சபா தேர்தலில், இடதுசாரிகளுக்கு மரண அடி விழுந்தது. சபரிமலை பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த, முதல்வர் பினராயி விஜயன், அய்யப்ப பக்தர்கள் மீது, அரசு போட்ட வழக்குகளை, சமீபத்தில் வாபஸ் பெற்றார்.

மேலும், சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலின்போதும், 'நாங்கள் அய்யப்பனுக்கு எதிரானவர்கள் அல்ல' என, இடதுசாரி கட்சியினர் கூறினர். பஞ்சாயத்து தேர்தலில், இடதுசாரிகள் அமோக வெற்றி பெற, காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.சமீபத்தில், ஒரு அமைச்சர், சபரிமலை விவகாரத்தில், அரசு தரப்பில் மன்னிப்பும் கேட்டார். சபரிமலையை வைத்து, காங்., பிரசாரம் செய்து வருகிறது. 'சரணம் அய்யப்பா... எங்களைக் காப்பாற்று' என, இடதுசாரி கட்சியினர், அய்யப்பன் காலில் விழுந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X