இன்றும், நாளையும் வங்கி ஊழியர் 'ஸ்டிரைக்'

Updated : மார் 15, 2021 | Added : மார் 15, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து, இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.மத்திய பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்; காப்பீடு துறையில், 74 சதவீதம், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி என்பது உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.இதை எதிர்த்து, வங்கி

சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து, இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.latest tamil newsமத்திய பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும்; காப்பீடு துறையில், 74 சதவீதம், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி என்பது உட்பட, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.இதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை, இன்று துவக்குகின்றனர்.

இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கக்கூடும்.இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், நாடு முழுதும், 13 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இதனால், சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள காசோலை, 'கிளியரிங்' மையங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.


latest tamil newsஇரண்டு நாள் பொது விடுமுறை என்பதால், இன்று அதிக வர்த்தகம் பாதிக்கும். ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
15-மார்-202123:27:08 IST Report Abuse
m.viswanathan Let all the banks be in public sector. But there should not be union. Yearly leave must be reduced. Only regional festival holidays must be given. Republic day, and Independence day should be d as holidays. Except Sundays all six days should be working days. Yearly increment to be given on performance basis. Less working and efficiently working employees of same cadre should not get the same salary. In loan sanctioning there should not be any political influence. If a person is not returning loan that concerned branch all employees should be held responsible. After retirement the employees should be treated as common man and should not be given any special aminities. then the bank employees willl realise what is responsibility. . Also a Manager incharge who is sanctioning loan to a person, must be held responsible if he gets a transfer if the loan is repaid.
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-மார்-202117:09:41 IST Report Abuse
SENTHIL NATHAN அரசு துறை ஊழியர்கள் மட்டும் பொது துறை வங்கிகளில் கணக்கு வைத்து கொள்ள வேண்டும். தனியார் துறை ஊழியர்கள் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்து கொள்ள வேண்டும். அப்போது பாக்கலாம் என்ன நடக்கிறது என்று....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-மார்-202116:41:07 IST Report Abuse
J.V. Iyer ஏன் சம்பளம் அதிகம் கொடுக்கிறார்கள், குறைக்கவேண்டும் என்றா? இல்லை வேலை ஒன்றும் இல்லை. அதிக நேரம் வேலை வேண்டும் என்றா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X