உங்களுக்கு, பா.ஜ.,வில் தேசிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்பது உறுதி தான்...

Updated : மார் 15, 2021 | Added : மார் 15, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டுவேன். மேலும், அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும் சென்று, எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.- நடிகை குஷ்பு'உங்களுக்கு, பா.ஜ.,வில் தேசிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்பது உறுதி தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், நடிகை குஷ்பு பேட்டி.பட்ஜெட்டில்
உங்களுக்கு, பா.ஜ.,வில் தேசிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்பது உறுதி தான்...

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டுவேன். மேலும், அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும் சென்று, எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.
- நடிகை குஷ்பு


'உங்களுக்கு, பா.ஜ.,வில் தேசிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்பது உறுதி தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், நடிகை குஷ்பு பேட்டி.



பட்ஜெட்டில் தள்ளுபடிக்கான நிதி ஒதுக்கப்படாத நிலையில், சுய உதவிக்குழு கடன் ரத்து, நகைக் கடன்கள் ரத்து என்பது எப்படி சாத்தியமாகும். தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட வெற்று வாக்குறுதிகள் இவை.
- காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்


'மாதந்தோறும் மளிகை இலவசம் என சொல்லப் போகிறார் பாருங்கள்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு.



பா.ஜ., குடும்ப கட்சியல்ல. பெண்கள், இளைஞர் என, எல்லாருக்குமான கட்சி. நடிகை குஷ்புவை, எங்கள் கட்சி என்றுமே கைவிடாது. அவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கும்.
- பா.ஜ., மகளிரணி தேசியச் தலைவர் வானதி சீனிவாசன்


latest tamil news




'அப்போ அவரை, கவர்னராகவோ அல்லது பா.ஜ., தேசிய சிறுபான்மையினர் மகளிரணி தலைவியாகவோ எதிர்பார்க்கலாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மகளிரணி தேசியச் தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.



இன்று மற்றும் நாளை, வங்கி ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. எங்களைப் போல மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்


'தி.மு.க., கூட்டணியில், 'சீட்' வாங்க நடையாய் நடக்கும் நிலையிலும், எங்கே போராட்டம் நடக்கிறதோ அங்கே ஆதரவு என்ற உங்களின் நிலைப்பாடு கிரேட்...' என, 'பாராட்டத்' தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.



ஜெனீவா நகரில் நடைபெறும், ஐ.நா., மனித உரிமைகள் சபையில், இலங்கையில், 2009ல் நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை விவாதிக்க, அவர்களுக்கு தக்க நிவாரணம் கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ


'ஒவ்வோர் ஆண்டும், நீங்கள் கோரிக்கை வைக்கத் தான் செய்கிறீர்கள்; மத்திய அரசு செய்வதில்லையே ஏன்; காங்கிரஸ் தடுக்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.



மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு சென்று எளிதாக ஓட்டளிக்க தேவையான வசதிகளை செய்து தர, தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, தபால் ஓட்டுகள் போடுவதை கைவிட்டு, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க, மாற்றுத்திறனாளிகள் தயாராக வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கம்


'மாற்றுத்திறனாளிகளுக்குள் பல மாற்றுக் கருத்துகள் உள்ளது போல, உங்கள் சங்கத்திலும் அரசியல் புகுந்துள்ளதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கம் அறிக்கை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
15-மார்-202121:11:06 IST Report Abuse
Ramesh Sargam இதற்குத்தான் ஆசைப்பட்டாயா 'ராஜ குமாரி' அவர்களே??
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
15-மார்-202118:38:15 IST Report Abuse
Nachiar பி ஜே பி யின் இந்த தேர்வை வார்த்தையில் சொல்ல முடியாத மன வருத்தத்துடன் பார்க்கிறேன். தேசியம் கொள்கை கோட்பாட்டுடன் கடின உழைப்புடன் இருக்கும் ஆர் எஸ் எஸ் மற்றும் பி ஜெ பி எங்கே இப்படியான அசிங்கங்கள் எங்கே. மற்ற கட்சிகளுக்கும் பி ஜே பி இற்கும் வித்தியாசம் குறைகிறது. ஒரு குடம் பாலில் விழுந்த ஒரு துளி சாணம்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-மார்-202118:10:22 IST Report Abuse
vnatarajan இனிமேல் குஷ்பூ மேடம் கட்சி தாவல ஆயுதத்தை கையில் எடுக்கமாட்டார் என்று கூறலாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X