தி.மு.க., தேர்தல் அறிக்கை; எண்ணி எண்ணி உடைகிறோம் மாற்றுத்திறனாளிகள் உருக்கம்

Added : மார் 15, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
தி.மு.க., தேர்தல் அறிக்கையை, சமீபத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வௌியிட்டார். அந்த அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் அளித்து, பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. தேர்தல் அறிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள்

தி.மு.க., தேர்தல் அறிக்கையை, சமீபத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வௌியிட்டார். அந்த அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் அளித்து, பாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருப்பது, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
latest tamil news


தேர்தல் அறிக்கை குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:புதியஸ்மார்ட் கார்டு ஏன்? ஏற்கனவே ஒரு ஸ்மார்ட் கார்டு உள்ளது. அதை நாங்கள் என்ன செய்வது. உடலில் உள்ள ஒரு ஊனத்தை இன்னொரு ஸ்மார்ட் கார்டு வாங்க வைப்பதால், நாங்கள் எங்கள் இயலாமை மற்றொரு முறை நிரூபிக்க வைக்கப்படுவோம் இல்லையா?

இயலாமையை மீண்டும்,மீண்டும் நிரூபிக்க வைப்பது எங்கள் மீது ஒரு விதமான தாக்குதலாகாதா?


மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 நடைமுறைக்கு 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் காலாவதியான 1995 ஊனமுற்றோர் சட்டத்தை அமல்படுத்துவோம் என, சொல்வதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நவீன கால சமூக நீதி கோட்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் வருகிறதே. அவ்வாறு இருக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளாட்சி இட ஒதுக்கீடு என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாத்து ஏற்க முடியவில்லை. எத்தனையோ கூட்டங்கள் போட்டு பேசி எங்கள் கோரிக்கைகளை வடிவமைத்து தந்தோம். ஆனால், அது முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளது எங்களுக்கு மனவலிமையை தந்திருக்கிறது.


latest tamil newsகருணாநிதி, 'நானும் உங்களை போன்று ஊனமுற்றவன் தான்' என, கண்களில் நீர்வடிய எங்களை ஆதரத்தழுவினார். அதை நாங்கள் இப்போது நினைத்து பார்க்கிறறோம். இன்னும், நாங்கள் எத்தனைக் காலம் உடையார் முன் இல்லாதோர் போல் நிற்க வேண்டும் என, எண்ணி எண்ணி உடைகிறோம்; உடைந்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-மார்-202105:12:53 IST Report Abuse
meenakshisundaram கருணாநிதி 'நானும் ஊனமுற்றவர் 'என்று வசனம் பேசினார் என்கிறார்கள் .அவர் இன்று இருந்தால் ஒரு பிராமணரை பார்த்து நானும் ஒரு பிராமணன் தான் என்று கூட சொல்வார் பதவியே குடும்பத்துக்கு மட்டுமே என்று ரூம் போட்டு யோசிக்கும் திமுக ஏன் ஊனமுற்றவரை நினைப்பார்கள் ?ஏமாற்றியது திமுக இல்ல.எதிர் பார்த்து ஏமாந்தது ஊனமுற்றவர்கலே .
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
16-மார்-202104:02:26 IST Report Abuse
SaiBaba உண்மையான இட ஒதுக்கீடு தேவைப்படுவது - மாற்றுத்திறனாளிகளுக்கு, தீராத நோயாளிகள், மன நோயாளிகள், திரு நங்கைகள், ஆதரவில்லாத அனாதைகள் இவர்களுக்குத் தான். ஏதாவது ஒரு வீட்டை தட்டி நான் குறிப்பிட்டிருந்த லிஸ்டில் உள்ளவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் எல்லோரும் ஏன் வாழ வேண்டும் என்று கேட்பார்கள். இந்தியப்பெருங்கடல் பொங்கும் நாள் எந்நாளோ? நம் நாட்டில் தான் மிகத் திறமை வாய்ந்த. மிகவும் படித்த, எல்லா பலமும் பொருந்தியவர்கள் கூட வாழ முடியாது.
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
15-மார்-202121:20:06 IST Report Abuse
சோணகிரி எரியும் வீட்டில் பிடுங்கும் கட்சி தீயமுகவால் உலகில் யாருக்கும் நன்மைகளை செய்யமுடியாது... தீயமுக உ.பி.களுக்கும் கூட நன்மை இல்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X