அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை வாரிசு அரசியல் செய்வதாக நினைத்தால் தோற்கடிக்கட்டும்: உதயநிதி

Updated : மார் 15, 2021 | Added : மார் 15, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
சென்னை: தன்னை வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் தன்னை தோற்கடிக்கட்டும் என சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தால்,
TamilnaduElections2021, UdhayanidhiStalin, DMK, உதயநிதி, திமுக, வாரிசு அரசியல்

சென்னை: தன்னை வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் தன்னை தோற்கடிக்கட்டும் என சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து அவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டசபையில் கூறியது முதல்வர் பழனிச்சாமிதான். இப்போது, அதே அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.


latest tamil news


அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததையா, இனி அவர்கள் செய்யப் போகிறார்கள்?. எம்எல்ஏ பதவி என்பது நியமன உறுப்பினர் பதவி கிடையாது. மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் பதவி. என்னை வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடிக்கட்டும், அல்லது என்னை வெற்றி பெற வைக்கட்டும். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
17-மார்-202111:08:37 IST Report Abuse
SENTHIL அரசியலும் அதிகாரமும் சேர்ந்து நாட்டை நாட்டு மக்களை சீரழித்து வருகிறது என்பது மட்டும் நிதர்சனம் . எங்கே செல்லும் இந்தபாதை . உன்னை பார்த்து நான் கெட்டேன் என்னை பார்த்து நீ கெட்டே . ஆக மொத்தம் நாடே கெட்டது நம்மால் என்பதே கேடு கெட்ட அரசியல்வாதிகளின் சாதனை.... எவ்வளவு அருமையான சட்டங்கள்.... எல்லாம் பாழ் இந்த கொள்ளை கூட்டத்தினரால்... மக்களும் கெட்டர்கள்... மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி ...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மார்-202112:26:39 IST Report Abuse
Malick Raja காசுக்கு கூவும் கூலிகளின் கருத்துக்கள் மேலும் பல வாக்குகளை உதயநிதிக்கு வழங்கும் .. ஆக கூவிக்கொண்டே ஆவிபோகும் .. வெற்றி உதயசூரியன் சின்னத்திற்கு என்பது இப்போதே தெரிந்த ஒன்று ..
Rate this:
Cancel
prakashc - chennai,இந்தியா
16-மார்-202110:02:20 IST Report Abuse
prakashc நாட்டை நாசம் செய்து ஒரு நாள் குடி மற்றும் சோற்றுக்காக இந்த திமுக ஒட்டு போட்டு சாகும் மனிதர்களை மனதில் வைத்து தான் உலுத்த நிதி பேசியுள்ளேன் . நாட , குடியா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X