அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாஷிங் மெஷின் எப்படி கொடுப்பீர்கள்?: சீமான் கேள்வி

Updated : மார் 15, 2021 | Added : மார் 15, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கு காரணம் காசு இல்லை. உண்மையிலேயே அதுதான் காரணம்.
TamilnaduElections2021, NTK, Seeman, Washing Machine, நாம் தமிழர்கட்சி, சீமான், வேட்புமனு,

சென்னை: தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சத்திற்கு மேல் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேர்தல் வரைவு திட்டம் வெளியிடாததற்கு காரணம் காசு இல்லை. உண்மையிலேயே அதுதான் காரணம். இந்த முறை திடீரென தேர்தல் வந்ததால் திட்டமிடுதல் இல்லை. நாளை வெளியிடப்படும். பணம் இருக்கிறவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற கோட்பாட்டை ஒழிக்கவில்லை என்றால் முதலாளிகளின் லாபத்தை நோக்கிய அமைப்பாக மாறிவிடும்.


latest tamil news


மனம் உள்ளவனும் வெல்லலாம். இல்லையென்றால் கேடுகெட்ட பணநாயகம்தான் வெல்லும். ஜனநாயகம் வெல்லாது. என்னிடம் பணம் இல்லை. கமலுக்கு பிக்பாஸ் போதும். ஹெலிஹாப்டரில் போகலாம். அனல்மின் நிலையம், அதானி துறைமுகம் உள்ளிட்ட பிரச்னைகள்தான், நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட காரணம். உலக தரத்திலான கல்வி, மருத்துவம், குடிநீரை நான் உறுதியாக தருவேன். இதுதான் எங்கள் இலவசம் குறித்த வாக்குறுதி.


latest tamil news


வாஷிங் மெஷின் கொடுக்க ரூ.15 ஆயிரம் செலவாகும். 2 கோடிக்கு மேலான குடும்ப அட்டைக்கு வாஷிங் மெஷின் கொடுக்க எங்கிருந்து பணம் பெறுவீர்கள் என சொல்ல வேண்டும். ரூ.6 லட்சம் கோடி கடன் இருக்கும்போது எப்படி வாஷிங் மெஷின் கொடுப்பீர்கள்? அதிமுக, திமுக.,விற்கு மாற்றாக நாங்கள் 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழ் குடிகளே என ஸ்டாலின் கூறுகிறார். அவர் திராவிடர்களே என கூற முடியுமா. எல்லாம் ஏமாற்று வேலை. அந்த கருத்தியல் வேறுபாடை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
16-மார்-202116:42:25 IST Report Abuse
ganapati sb aandirku aayiram rubaythaan varumaanam yena koori varumai kotin keel vaadum seemanukku katchi nadatha panam varuvatheppadi
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மார்-202112:10:47 IST Report Abuse
Malick Raja பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு .. என்ற பாட்டு கனகச்சிதமாக பொருந்தும் ..
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
16-மார்-202109:41:24 IST Report Abuse
Ram அப்போ இலவச மின்சாரம் மட்டும் எப்படி முடியும் சீமான், உங்கள் பேச்சே முன்னுக்கு முரணாக இருக்கிறதே
Rate this:
Venkatesh J - Madurai,இந்தியா
16-மார்-202112:25:17 IST Report Abuse
Venkatesh Jஅட டுமுக்கு, முதலில் கட்சியின் செயல் பாட்டு வரையறை படிக்கவும். ஆட்சிக்கு வரும் முன் ஏன் இத்தனை கேள்வி, சொன்ன ஸ்டாலின் கிட்டே போய் கேட்கிறது எப்படி கொடுப்பீர்கள் என்று ? அது கேட்க துப்பு இல்ல ? இவர்கிட்டே கேட்கிறார்களாம் ?...
Rate this:
Venkatesh J - Madurai,இந்தியா
16-மார்-202112:30:36 IST Report Abuse
Venkatesh Jஸ்டாலின் கிட்டே நீ இத கேளு தில்லு இருந்தா, இலவச கல்வி, இலவச மருத்துவம் (அனைவர்க்கும் சமம்) மற்ற எந்த இலவசமும் வேண்டாம். இத கொடுத்தால் போதும் என்று. ஆட்சியில் இருந்தவர்களிடம் ஒன்னும் கேட்க துப்பு இல்ல அனைவர்க்கும். கட்ச தீவு மீது எடுக்கணும் னு எத்தனை காலம் டா சொல்லிட்டு வந்தானுங்க. ஆட்சிக்கு வந்ததும் அமைதி காத்தார்களே, அப்போ இந்த வாய் எங்க போச்சு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X