முதல்வர் பழனிசாமிக்கு எவ்வளவு சொத்து ? வேட்புமனுவில் தகவல்

Updated : மார் 15, 2021 | Added : மார் 15, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் ஏப்.,6ல் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாளில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மார்ச் 15), மீண்டும் மனு தாக்கல்
TamilnaduElections2021, TamilnaduCM, Palanisamy, Assets, தமிழகம், தேர்தல், முதல்வர், பழனிசாமி, சொத்து மதிப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் ஏப்.,6ல் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாளில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மார்ச் 15), மீண்டும் மனு தாக்கல் துவங்கியது. மதியம் 1 மணியளவில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news


முதல்வர் பழனிசாமிக்கு 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்து 2021ல் ரூ. 4.68 கோடியாக உள்ளது.. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
15-மார்-202121:14:34 IST Report Abuse
சோணகிரி தீயமுகவின் கவுன்சிலருக்கே இதைவிட சொத்துக்கள் மிக அதிகம்... நம் முதல்வர் சொக்கத்தங்கம்...
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
15-மார்-202119:45:27 IST Report Abuse
Srinivas.... சிரமப்பட்டு சம்பாதித்த பணம்,சொத்து முழுவதையும் நாட்டிற்காக செலவு செய்துவிட்டதால் சொத்து மதிப்பும்,பணம் கையிருப்பும் குறைந்துள்ளது...மக்களே நம்புங்கள்....
Rate this:
Cancel
Chola - bangalore,இந்தியா
15-மார்-202119:37:23 IST Report Abuse
Chola ஐயோ பாவமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X