அவரு... சீட் வாங்க தள்ளிவிட்டாராம் ரூ.பல கோடி ... இவரு... ‛ சீட்டு போட அள்ளியெடுக்கிறாராம் ஓடி ஓடி!| Dinamalar

அவரு... 'சீட்' வாங்க தள்ளிவிட்டாராம் ரூ.பல கோடி ... இவரு... ‛ சீட்டு ' போட அள்ளியெடுக்கிறாராம் ஓடி ஓடி!

Updated : மார் 16, 2021 | Added : மார் 15, 2021 | |
வெயிலை விட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் 'அனல்' பறக்கிறது. அப்படியொரு நாளில், மித்ராவின் வீட்டுக்கு சென்றாள் சித்ரா.''அடடே…வாங்கக்கா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. உட்காருங்க'' என, வரவேற்ற மித்ரா, எலுமிச்சை ஜூஸ் கொடுத்தாள். ஜூைஸ பருகியபடியே, டிவி.,யில் செய்தி சேனலில், பார்வையை உலவ விட்டாள் சித்ரா.'வேட்பாளர் தேர்வில் கூட்டணி கட்சியினருக்குள் இழுபறி'
 அவரு... 'சீட்' வாங்க தள்ளிவிட்டாராம் ரூ.பல கோடி ...  இவரு... ‛ சீட்டு ' போட  அள்ளியெடுக்கிறாராம் ஓடி ஓடி!

வெயிலை விட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் 'அனல்' பறக்கிறது. அப்படியொரு நாளில், மித்ராவின் வீட்டுக்கு சென்றாள் சித்ரா.''அடடே…வாங்கக்கா. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. உட்காருங்க'' என, வரவேற்ற மித்ரா, எலுமிச்சை ஜூஸ் கொடுத்தாள்.

ஜூைஸ பருகியபடியே, டிவி.,யில் செய்தி சேனலில், பார்வையை உலவ விட்டாள் சித்ரா.'வேட்பாளர் தேர்வில் கூட்டணி கட்சியினருக்குள் இழுபறி' என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்க, ''ஏன்... மித்து. எலக்ஷன் நியூஸ் எதுவும் உண்டா?''''ம்... அதுக்கென்னக்கா பஞ்சம். 'டாஸ்மாக்' கடையில், விற்பனை நிலவரத்த கண்காணிக்க, கோவையில இருந்து, 'டாஸ்மாக்' பறக்கும் படைன்னு ஒரு 'டீம்' வந்திருக்கு. அவங்க, என்னடான்னா, மதுக்கடையில, வசூல் வேட்டைல இறங்கிட்டாங்க. ஜோனல் ஆபீசருக்கு கொடுக்கோணும்னு, சொல்லியே வசூல் பண்றாங்களாம். 'கலெக்ஷன் அமவுன்ட்' டெய்லி ஒரு லகரத்தை தாண்டுதாம்,''அப்போது, 'பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, அதிகாரிகள் கனகராஜ், மகேஷ் பாபுசிங், பாலமுருகன், ஜாகீர் உசேன், அருள்தாஸ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்' என்ற செய்தி, 'டிவி,' திரையில் ஒளிர்ந்தது.

''டாஸ்மாக் டிபார்ட்மென்ட்ல இருக்க பெரிய ஆபீசரும், சத்தம் இல்லாம பல இடங்கள்ல, டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கொடுத்துட்டு இருக்காரு. போன வாரம் கூட, குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில ஒரு கடை திறந்திருக்காங்க,''''கடை திறக்கறதுக்கு, பெரிய அமென்ட் வாங்கிட்டு இருந்த அதிகாரி, இந்த ஆறு மாசமாக, 'பார்ட்னர்' ஆயிட்டாராம். மாசாமாசம், பெரிய தொகை குடுக்கோணுமாம். இவரென்ன அதிகாரியா, வியாபாரியா,'' கோபமாக கேட்டாள் சித்ரா.''அக்கா... அவரு வியாபாரியாட்டத்தான் நடந்துக்கறாரு. ரெண்டு 'சி'க்கு 'சீட்டு' போட்டிருக்கேன். கட்டறதுக்கு பணம் வேண்டாமான்னு, நெருங்கிய நண்பர்கிட்ட சொன்னாராம்,'' மித்ரா சொன்ன போது, வீட்டின் கதவை யாரோ தட்ட, கதவை திறந்தாள்.

''அக்கா, இந்த ஏரியாவுல, சவுந்தரபாண்டியன்னு யாராவது இருக்காங்களா'' என, ஒரு சிறுவன் கேட்க, ''ம்ம்ம்... நாலு வீடு தள்ளிபோய் கேளு தம்பி. அங்க தான் அவர் இருக்கார்'' என, அனுப்பி வைத்தாள் மித்ரா.மதிய நேரம் நெருங்கிய நிலையில், இருவரும், பல்லடத்தில், தங்களது பள்ளி தோழியின், வீடு கிரஹப்பிரவேசத்துக்கு கிளம்பினர். சித்ரா வண்டி ஓட்ட, மித்ரா அமர்ந்தாள்.''எலக்ஷன்ல போட்டி போட 'சீட்' வாங்க முட்டி மோதின முரசு கட்சிக்காரர், கூட்டணி மாறியதும், ஜகா வாங்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா

.''அப்படியா?''''திருப்பூர் வடக்கு தொகுதி, இலை கட்சியின் அசைக்க முடியாத கோட்டையா இருக்கு. இலை கட்சியும், முரசு கட்சியும் கூட்டணி பேசிக்கிட்டு இருந்தப்ப, முரசு கட்சியின் முக்கிய பொறுப்புல இருக்கறவரு, இலையின் தயவில் முரசு கொட்டலாம்ன்னு நினைச்சு, 'சீட்' வாங்க ரொம்பவே 'ட்ரை' பண்ணாரு. வார்டு, வாரியா பொறுப்பாளர்கள நியமிச்சு, ஓட்டு வாங்க, 'வொர்க்' பண்ணி வைச்சிருந்தாரு

.''ஆனா, முரசு கட்சி, கூட்டணியை முறிச்சுகிட்டு, குக்கர் கட்சில ஐக்கியமானதால, 'சீட்' வாங்கற முடிவுல இருந்து, அந்த நிர்வாகி பின்வாங்கிட்டாராம். இதனால, தேடிப்பிடிச்சு ஒருத்தர வேட்பாளரா நிறுத்தியிருக்காங்க. இவரு, ஏற்கனவே நடந்த கார்ப்பரேஷன் வார்டு எலக்ஷன்ல போட்டி போட்டு தோத்து போனவராம்'' என்றாள் சித்ரா.மித்ராவின் மொபைல் போன் சிணுங்க, ''யாரு, செல்வகுமாரா? உங்கள முத்துவெங்கடேஷ் அண்ணன் பாக்கணும்னு சொன்னாரு. போய்ப் பாருங்க,'' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.''என்ன மித்து. கட்டப்பஞ்சாயத்து எல்லாம் பண்ற மாதிரி,'' என கிண்டல் அடித்தாள் சித்ரா.''இல்லைங்க்கா. பக்கத்து வீட்ல இருக்கவரு. ஏதாவது, வேலை வாங்கி தாங்கன்னு கேட்டாரு. அதான், தெரிஞ்சவர்கிட்ட ரெக்கமண்ட் பண்ணேன்,'' என்றவள், ''பல்லடத்தில, இலை கட்சில ஆனந்தமானவருக்கு 'சீட்' கிடைக்கும்னு கட்சிக்காரங்களே எதிர்பார்க்கலையாம்,'' என்றாள்.''உனக்கு விஷயமே தெரியாதா மித்து. இதெல்லாம் உள்ளூர் மினிஸ்டரோட வேலை தானாம். இப்போதைய, வி.ஐ.பி., திரும்ப ஜெயிச்சு, திரும்பவும் இலை கட்சி ஆட்சிக்கு வந்துட்டா, அவர் எப்படியும் 'மினிஸ்டர்' ஆகிடுவாருன்னு, பேச்சு அடிபட்டுச்சுல்ல. அதுக்கு 'செக்' வைக்கத்தான், ஆள மாத்திட்டாங்க. அதுமட்டுமில்லாம, பல 'சி' கை மாறியதால தான், தொகுதிய விட்டுக்கொடுத்துட்டாராம் அந்த 'தில்லைநாதர்'' என்றாள் சித்ரா.

''அதே ஊர்ல, குழந்தைகளுக்கு சமைச்சு போட, காய்கறி, மளிகை சாமான்னு, எதுக்குமே பணம் தராம இழுத்தடிக்கிறதா, அங்கன்வாடி ஸ்டாப்ஸ் புலம்பிட்டு இருக்காங்க. சரியான தேதில, சம்பளமும் தர்றது இல்லையாம்,''''யாராவது கேட்டா அவங்க மேல ஆக்ஷன் எடுக்கறாங்களாம் அந்த பெரிய ஆபீசர். கலெக்டரால கூட, என்னை எதுவும் செய்ய முடியாதுன்னும் சொல்றாங்களாம். அந்த ஆபீசரோட டார்ச்சர் தாங்காம சிலரு வேலைய விட்டு போற நிலைமைல இருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.ரோட்டோரம் தென்பட்ட, 'விஜயலட்சுமி கிப்ட்ஸ்' என்ற கடைக்குள் நுழைந்த இருவரும், தனது தோழிக்கு கொடுக்க, 'கிப்ட்' தேர்வு செய்து வாங்கினர்.''என்னய்யா… இப்டி பண்ணிட்டிங்களேய்யான்னு... சைக்கிள் கட்சியோட மாவட்ட நிர்வாகி ஒருத்தர் புலம்பிட்டு இருக்காராம்'' என்ற சித்ரா, வண்டி ஓட்டியபடியே கேட்டாள்.''இது யாருங்க்கா?''''திருப்பூர் சவுத்தில, எப்படியும் சீட் வாங்கிடலாம்ன்னு நினைச்சு, மாவட்ட நிர்வாகி, தன்னோட ஆபீசையே வாஸ்துபடி மாத்தியிருந்தாரு. இதனால, 'நல்ல நேரம், வொர்க் அவுட்' ஆகும்ன்னு, நம்பிட்டு இருந்த நிலைமைல, தொகுதி, கூட்டணி கட்சிக்கு போயிடுச்சு. நொந்து போயிட்டாராம், அந்த நிர்வாகி,'' என்றாள்.

இவர்களை ஓவர்டேக் செய்த வேனில், 'ரவிக்குமார்' என எழுதி இருந்தது. அதைப்படித்த மித்ரா, ''அக்கா... இந்த டிராவல்ஸ் வேன் கம்பெனி, காந்தி நகரில் தான் இருக்குது. அடுத்த வாரம் டூர் போறதுக்கு புக் பண்ணிக்கலாம்,'' என்றாள்.''ஓ.கே., மித்து,'' என்ற சித்ரா, ''தேர்தல் விதிமீறினா கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்னு,'' சும்மா தான் அதிகாரிங்க சொல்றாங்க போல,' என்றாள் சித்ரா.'ஏன்க்கா… என்ன ஆச்சு?''''சரக்கு வாகனங்கள்ல ஆட்கள ஏத்திட்டு வரக் கூடாதுன்னு, தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கு. ஆனா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, லிங்கேஸ்வரர் ஊர்ல, இலைக்கட்சி வேட்பாளர வரவேற்க, 30 சரக்கு வாகனங்கள்ல ஆட்கள ஏத்திட்டு வந்தாங்க. இந்த புகார் மேலேயும், தேர்தல் அதிகாரிங்க ஆக்ஷன் எடுக்கல,''''இன்னொரு தகவலையும் சொல்றேன் கேளுங்க…'' தொடர்ந்த மித்ரா, ''சீட் ஒதுக்கினதுல, செங்கொடிகாரங்க அதிருப்தில இருக்காங்க. தொழிலாளர்கள் அதிகமா இருக்கற திருப்பூர்ல, இடதுசாரி கட்சிகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.,ன்னு மாறி, மாறி 'சீட்' கொடுப்பாங்க,''''சி.பி.ஐ., கட்சிய சேர்ந்த எம்.பி., சிட்டிங்ல இருக்கற நிலைமைய, சி.பி.எம்.,க்கு தான், எம்.எல்.ஏ.,சீட் கிடைக்கும்னு, கட்சிக்காரங்க நம்பிட்டு இருந்தாங்க. ஆனா, நார்த் தொகுதில, சி.பி.ஐ.,க்கே, எம்.எல்.ஏ., சீட் ஒதுக்கினதால, சி.பி.எம்., அதிருப்தில இருக்காங்க. இதனால, எலக்ஷன் வேலையில சுணக்கம் ஏற்படுமாம்,'' என்றாள்.

''அதெல்லாம், சரி பண்ணிடுவாங்க. என்னதான் 'பனிஷ்மென்ட்' பண்ணாலும், போலீஸ் டிப்பார்ட்மென்ட்ல இருக்கறவங்க அடங்க மாட்டேங்கறாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''யாரை சொல்றீங்க,'' என்றாள் மித்ரா.''கமிஷனர் 'ஆபீஸ்' பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு, மக்கள் போகவே ரொம்ப தயங்கறாங்க. அங்க இருக்குற ரெண்டு, மூனு குட்டி ஆபீசர்ங்க கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துக்குறாங்களாம். மன உளைச்சலோட 'கம்ப்ளைன்ட்' தர்ற வர்றவங்ககிட்ட, பணத்தை கறக்காம விடுறதில்லையாம்,''''அதுமட்டுமில்லாம, ஸ்டேஷனுக்கு 'ஏ4' ஷீட் வேணும்னு சொல்லி, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வர சொல்றாங்க. இன்னொரு அதிகாரி, அதுக்கும் மேல போயி, வண்டிக்கு பெட்ரோல் போடுங்க; டயர் மாத்திக்கொடுங்கன்னு, செம 'டார்ச்சர்' பண்றாராம்'' என்றாள் சித்ரா.

''உண்மைதாங்க்கா. பக்கத்து வீட்ல இருக்க, பிச்சைமணி, பரஞ்ஜோதி அங்கிள்ஸ் கூட, இதபத்தி என்கிட்ட சொன்னாங்க,'' என்ற மித்ரா, ''பேசிட்டு வந்ததில், அதுக்குள்ள விசேஷ வீட்டுக்கு வந்துட்டோம்,'' சொல்லி விட்டு, கீழே இறங்க, சித்ரா வண்டியை பார்க்கிங் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X