அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்தாரா மோடி?

Updated : மார் 16, 2021 | Added : மார் 16, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது. அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.அந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து,

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்தே, தமிழகத்தில், அவருக்கு எதிராக கடுமையான காழ்ப்பு துாண்டப்பட்டு வருகிறது. அவர் தமிழகம் வரும் போதெல்லாம், கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலுான்கள் பறக்க விடுவதும், 'திரும்பிப்போ மோடி' என, கோஷமிடுவதும் தொடர்ந்து நடக்கிறது.latest tamil newsஅந்த வெறுப்பை, தி.மு.க.,வும், அதன் ஆதரவு ஊடகங்களும், மக்கள் மனதில் தொடர்ந்து விதைத்து, பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்து விட்டனர். அந்த அளவுக்கு, தமிழக மக்களால் வெறுக்கப்படுவதற்கு, தமிழகத்திற்கு மோடி என்ன துரோகம் இழைத்தார்?


தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மோடி தடை செய்தாரா?

அப்பட்டமான பொய். ஜல்லிக்கட்டை தடை செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. குறிப்பாக, காங்கிரஸ் அமைச்சரான ரமேஷ்; அந்த அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது என்பதை மறந்து விட வேண்டாம். தடை செய்ததற்கு, தி.மு.க.,வும் உடந்தை. பழி மட்டும் மோடி மீது. மோடி ஆட்சியில் தான், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது.


'நீட்' தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்தாரா மோடி?

'நீட்' தேர்வை அறிமுகப்படுத்தியதே, காங்கிரஸ் - -தி.மு.க., கூட்டணி மத்திய அரசு தான். அதை அமல்படுத்தச் சொல்லி, உத்தரவு போட்டது சுப்ரீம் கோர்ட். நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி. சுப்ரீம் கோர்ட் உத்தரவை, மோடி அரசு மீற முடியாது.


ஹிந்தியை திணிக்கிறாரா மோடி? தமிழுக்கும், தமிழர் பண்பாட்டுக்கும் அவர் எதிரியா?

இன்று தமிழகத்தில், தமிழ் படிக்காமலேயே கல்லுாரி கல்வி வரை முடித்து விடும் சாத்தியம் இருக்கிறது. தாய் மொழி தமிழிலேயே, ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை.


இது, தமிழ் வளர்ச்சிக்கான அடித்தளமா அல்லது அழிக்கும் செயலா?

தமிழ், ஆங்கிலம் தவிர, இன்னொரு மொழியை, ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுத்து படித்துக் கொள்ளலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. அது, எந்த ஒரு இந்திய மொழியாகவும் இருக்கலாம். திராவிட இயக்க தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி சொல்லித்தரப் படுகிறது. ஆனால், அதே தி.க., - தி.மு.க.,வினர் சாதாரண ஏழை குழந்தைகள் படிக்கும், அரசு பள்ளிகளில், மூன்றாவதாக ஒரு மொழியை சொல்லித் தரக்கூடாது என, ஏழை குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கின்றனர்.


latest tamil news
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பறிக்கும் அவர்களை அல்லவா தமிழர்கள் எதிர்க்க வேண்டும்?

வெளிநாடுகளிலும் சரி, இந்தியாவிற்கு உள்ளேயும் சரி, மோடி ஒவ்வொரு பொது மேடையிலும், தமிழ் மொழியின் தொன்மை குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் பேசுகிறார். துண்டு சீட் டின்றி, ஔவையார் பாடல்களையும், பாரதியார் பாடல்களையும், மிக அற்புதமாக மேற்கோள் காட்டுகிறார். காங்கிரஸ் அரசால் மறைக்கப்பட்ட, தமிழர்களின் தொன்மை போற்றும், ஆதிச்சநல்லுார் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கீழடி ஆராய்ச்சிகளுக்கு நிதி அதிகரித்துள்ளார். ராஜேந்திர சோழன் பெயரை, மும்பை துறைமுகத்துக்கு பா.ஜ., அரசு சூட்டியுள்ளது. தமிழ் தெரியவில்லையே என வருத்தப்படுகிறார் மோடி.அவர் தேர்தலுக்காக, இதைச் சொல்வதில்லை. தேர்தல் நடக்கும், வேறு மாநிலங்களில் அவர் அந்தந்த மாநில மொழிகளைப் பற்றி இவ்வளவு துாரம் பெருமையாக பேசியதில்லை. தமிழ் மொழியின் பெருமையை மட்டுமே, எங்கு போனாலும் பேசி வருகிறாரே. அவரா தமிழுக்கு எதிரி?


மீத்தேன் எடுப்பு திட்டத்தின் வாயிலாக, விவசாய நிலங்களை அழிக்கிறாரா?

மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தீட்டியது, மன்மோகன் சிங் தலைமையிலான காங்., - -தி.மு.க., கூட்டணி அரசு. அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவர், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின். எப்படியாவது, மீத்தேன் எரிவாயு திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் என, சவால் விட்டவர், தி.மு.க., சார்பில், மத்திய மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலு.மோடி அரசோ, காவிரி படுகை மக்களின் விருப்பத்திற்கு எதிராக, எந்தவொரு திட்டத்தையும் அமல்படுத்த மாட்டோம் என்கிறது.


தமிழர்களின் நீராதாரங்களை மோடி அழிக்கிறாரா?

காவிரி ஆணையத்தை உருவாக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின்னரும், அதை அமைக்காமல் தள்ளிப் போட்டது காங்., தலைமையிலான கூட்டணி அரசு. அதை கடைசியில் அமைத்தது மோடி அரசு. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்து, அதன் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் உத்தரவை அமல்படுத்தியது, கல்லணை திட்டத்தை துவக்கி,தமிழகத்தின் மிகப் பெரிய நீர் மேலாண்மை திட்டத்திற்கு நிதியுதவி அளித்ததும் மோடி அரசே.


தமிழகத்தில், ரயில்வே வளர்ச்சியை பா.ஜ., அரசு கண்டு கொள்ளவில்லையா?

கடந்த, 2010 முதல் மதுரை- - போடி ரயில் பாதையை நிறுத்தி வைத்து, அதன் தண்டவாளங்களையும் அகற்றியது, முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசு. ஆனால், மோடி அரசு, ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளுக்குள், தேனி வரையிலான பணிகளை முடித்து விட்டது. தேனி - -போடி ரயில் பாதையும் முடிக்கப்படும். வரும் மே மாதம் முதல், தேனி - சென்னை ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது. சென்னையிலும், கோவையிலும், மெட்ரோ ரயில் திட்டங்களையும், பிற ரயில்வே திட்டங்களையும் பெரும் அளவில் அறிவித்து நிதியுதவி செய்துள்ளது.


- எஸ்.டி. ராஜன், வலதுசாரி சிந்தனையாளர்

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
20-மார்-202114:52:30 IST Report Abuse
NARAYANAN.V சொல்லப்போனால் எல்லாக் கட்சிகளும் நாட்டை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.நாட்டிற்கு விடிவு காலமோ விமோசனமோ சில மாமாங்க்களுக்குக்கூடக் கிடையாது என்று நன்கு தெரிகிறது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
16-மார்-202117:30:41 IST Report Abuse
r.sundaram தங்கள் செய்த தப்பை பிஜேபி செய்ததாக சொல்லி தமிழக மக்களை முட்டாளாக பார்க்கிறது திமுக கூட்டணி. ஆட்சியில் இருந்த போதும் தமிழக மக்களை முட்டாளாக்கி சொத்து சேர்த்தது அந்த கட்சி. தமிழக மக்கள் இனிமேல் எங்களை முட்டாள் ஆக்க முடியாது என்று தற்போது நிரூபிக்கும் காலம் இது. மக்களே பாத்திரம் அறிந்து பிட்சை இடுங்கள்.ஒருபோதும் திமுக கூட்டணிக்கு வோட்டு போடாதீர்கள்.
Rate this:
Cancel
MURUGAPPAN - male,மாலத்தீவு
16-மார்-202113:54:06 IST Report Abuse
MURUGAPPAN மிஸ்டர் ராஜன் அவர்களே செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு பதில் வேறு வேலை இருந்தால் பாருங்கள். நம் மாநிலத்தவர்கள் தூங்கவில்லை, தூங்குவது போல் நடிக்கிறார்கள். இப்பொழுது இங்கு எந்த எந்த விசயத்திற்கு எந்த எந்த கட்சி போராட்டம் நடத்துகிறதோ அந்த அந்த திட்டங்கள் அனைத்தும் அந்த அந்த கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டவை. படித்த விபரம் தெரிந்தவர்கள் கூட கட்சியின் விசுவாசத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள். நம்மவர்கள் மிகவும் விபரமானவர்கள். அனைத்தும் தெரியும். மத்திய அரசின் அணைத்து திட்டங்களிலும் நம் மாநிலத்தவரே இந்தியா அளவில் அதிகம் பயன் பெற்றவர்கள். GST, CAA, 370, ADHAR,FARMER'S BILL, SUBSIDY நேரிடையாக பயனாளியின் வாங்கி கணக்கில் சேர்ப்பது அனைத்தும் காங்கிரஸ் அரசால் முன்மொழியப்பட்டவையே. அவர்களுக்கு உறுதியான தலைமையும் செயல்படுத்துவதற்கான தைரியமும் இல்லாததே காரணம். என்னுடைய வருத்தம் எல்லாம் BJP இந்த விஷயங்களை ஏன் மக்கள் முன் எடுத்து செல்வதில்லை என்பதே..
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
16-மார்-202117:52:42 IST Report Abuse
Rajகாங்கிரஸ் சரியில்லை என்று தானே உங்களை தேர்தெடுத்ததும், நீங்கள் அதே செய்தொம் என்று சொன்னால் நீங்கள் எதற்கு ......
Rate this:
sridhar - Chennai,இந்தியா
16-மார்-202118:03:09 IST Report Abuse
sridharஅது மட்டும் அல்ல , தமிழக பிஜேபி தலைவர்கள் செக்கு மாடு போல சில குறிப்பிட்ட தொகுதிகளையே சுற்றி சுற்றி வருகிறார்கள். வட தமிழகம் , டெல்டா போன்ற இடங்களிலும் கிராமங்களிலும் யாரும் பிரச்சாரம் செய்வதில்லை. ஹிந்தியில் இருக்கும் மதிய அரசு திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து பயனாளிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி எதுவும் இல்லை . தொகுதியை குறி வைக்கும் சுயநல தலைவர்கள் இவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X