நம்பிக்கை இழந்தவரை தேடி வந்த தி.மு.க., 'சீட்'

Added : மார் 16, 2021 | |
Advertisement
பொள்ளாச்சி தொகுதிக்கு, தி.மு.க.,வில் மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், மாநில விவசாய அணி நிர்வாகி தமிழ்மணி, வடக்கு ஒன்றிய நிர்வாகி மருதவேல், நெகமம் கந்தசாமி பேரன் சபரி கார்த்திகேயன் ஆக, நான்கு பேர் மல்லுக்கட்டினர். அதில் இருவர், தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.நால்வரில் இல்லாத நகர பொறுப்பாளர் வரதராஜன் பெயரை அறிவித்தார் ஸ்டாலின். டாக்டர் தொழில் செய்யும் வரதா, எந்த

பொள்ளாச்சி தொகுதிக்கு, தி.மு.க.,வில் மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், மாநில விவசாய அணி நிர்வாகி தமிழ்மணி, வடக்கு ஒன்றிய நிர்வாகி மருதவேல், நெகமம் கந்தசாமி பேரன் சபரி கார்த்திகேயன் ஆக, நான்கு பேர் மல்லுக்கட்டினர். அதில் இருவர், தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

நால்வரில் இல்லாத நகர பொறுப்பாளர் வரதராஜன் பெயரை அறிவித்தார் ஸ்டாலின். டாக்டர் தொழில் செய்யும் வரதா, எந்த கோஷ்டியிலும் சேராதவர். ஊரில் நல்ல மரியாதை. ஆனால், போட்டி பலமாக இருந்ததால், 'சீட்' கிடைக்காது என்று விட்டுவிட்டார். அறிவிப்பு அவருக்கு இன்ப அதிர்ச்சி. அன்று இரவே, சென்னை சென்று சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து ஆசி பெற்று பொள்ளாச்சி திரும்பினார்.

இருபது ஆண்டுகளாக, எம்.எல்.ஏ., வாக இருக்கும், பொள்ளாச்சி ஜெயராமனை எதிர்கொள்ள அவர் தயார் தான். கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை சமாளிப்பதுதான் பெரிய சவால். மருந்து, மாத்திரை குடுத்து சரியாக்கிருவார்னு சொல்றாங்க.

கோஷ்டிகளை சமாளிப்பது பெரிய சவால்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X