மணல் புயல் தாக்குதல் புழுதிக்காடானது பீஜிங்

Added : மார் 16, 2021 | |
Advertisement
பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங் நகரில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மணல் புயல் வீசியது. இதனால், பீஜிங் நகரம் புழுதிக்காடானது; காற்று மாசு பல மடங்கு உயர்ந்து உள்ளது.சீனாவை ஒட்டியுள்ள மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் உருவான மணல் புயல், சீனாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்களை தாக்கியது. தேசிய தலைநகர், பீஜிங்கும் இந்த தாக்குதலில் சிக்கியது.

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங் நகரில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் மணல் புயல் வீசியது. இதனால், பீஜிங் நகரம் புழுதிக்காடானது; காற்று மாசு பல மடங்கு உயர்ந்து உள்ளது.

சீனாவை ஒட்டியுள்ள மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் உருவான மணல் புயல், சீனாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள மாகாணங்களை தாக்கியது. தேசிய தலைநகர், பீஜிங்கும் இந்த தாக்குதலில் சிக்கியது. மங்கோலியாவில், 341 பேர் காணவில்லை என, தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மணல் புயலால், சீனாவின் பீஜிங் உட்பட பல நகர்கள் செம்மண் நிறத்தில் காணப்பட்டன. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மணல் புயல் தாக்குதல் இது என, வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இந்த தாக்குதலால், பீஜிங்கில், காற்று மாசு பல மடங்கு உயர்ந்தது. இதனால், பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக, மார்ச் - ஏப்ரல் மாதங்களில், பீஜிங்கை இதுபோன்ற மணல் புயல் தாக்கும்.நாட்டின் வடக்கே, கோபி பாலைவனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.தற்போது, எல்லையை ஒட்டி, பசுமை சுவர் அமைக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X