ஆஸ்கர் விருதுகள் விழா: இறுதிப் பட்டியல் வெளியீடு| Dinamalar

'ஆஸ்கர்' விருதுகள் விழா: இறுதிப் பட்டியல் வெளியீடு

Added : மார் 16, 2021 | |
லாஸ் ஏஞ்சலஸ் : ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள 'டால்பி' தியேட்டரில் வரும் ஏப்ரல் 25ம் தேதி 93வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் பெறுவதற்கான இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள திரைப்படங்கள்
 'ஆஸ்கர்' விருதுகள் விழா: இறுதிப் பட்டியல் வெளியீடு

லாஸ் ஏஞ்சலஸ் : ஆஸ்கர் விருதுகளின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள 'டால்பி' தியேட்டரில் வரும் ஏப்ரல் 25ம் தேதி 93வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் பெறுவதற்கான இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதை பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸும் இணைந்து வெளியிட்டனர்.

சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில், முழு, 10 மதிப்பெண்களுடன், 'மான்க்' திரைப்படம் முதலில் இணைந்தது. இதனுடன் 'மினாரி, நொமட்லேண்ட், தி ட்ரையல் ஆப் தி சிக்காகோ 7' உள்ளிட்ட சில படங்களும் பட்டியலில் இடம்பெற்றன.சிறந்த நடிகருக்கான இறுதிப் பட்டியலில் நடிகர் ரிஸ் அகமது இடம்பிடித்துள்ளார். இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள, முதல் முஸ்லிம் நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவரைத் தவிர போஸ்மேன் மற்றும் ஸ்டீவன் யூனும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

சிறந்த நடிகைக்கான பட்டியலில் பிரான்சஸ் மெக்டார்மண்ட், வயோலா டேவிஸ், வனேசா கிர்பி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.சிறந்த இயக்குனருக்கான இறுதிப் பட்டியலில் ஷோலே ஜாவோ, சங் பென்னல், டேவிட் பின்சர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பட்டியலில் ஹாங்காங்கின் 'பெட்டர் டேஸ்', ரோமானியாவின் 'கலெக்டிவ்', துனிசியாவின் 'தி மேன் ஹூ சோல்ட் ஹிஸ் ஸ்கின்' உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளன.

சிறந்த ஆவணப்படத்திற்கான பட்டியலில் 'மை ஆக்டபஸ் டீச்சர்' ஆவணப் படம் தேர்வாகி உள்ளது. இந்திய பத்திரிகையாளரான ஸ்வாதி தியாகராஜன் இந்த படத்தின் தயாரிப்பு மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X