'மார்ஷியல்' சட்டம் பிரகடனம்: மியான்மர் ராணுவம் அதிரடி

Added : மார் 16, 2021 | |
Advertisement
யாங்கூன்:மியான்மரின் யாங்கூனில், முழு அதிகாரமும் ராணுவத்திற்கு கிடைக்க வழிவகுக்கும், 'மார்ஷியல்' சட்டம், நேற்று, பிரகடனம் செய்யப்பட்டது.நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த
'மார்ஷியல்' சட்டம் பிரகடனம்: மியான்மர் ராணுவம் அதிரடி

யாங்கூன்:மியான்மரின் யாங்கூனில், முழு அதிகாரமும் ராணுவத்திற்கு கிடைக்க வழிவகுக்கும், 'மார்ஷியல்' சட்டம், நேற்று, பிரகடனம் செய்யப்பட்டது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பல்வேறு முறை
கேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது.


போராட்டம்


மேலும், ஆங் சன் சூச்சி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர், சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.இதையடுத்து, ராணுவ புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எண்ணற்ற மக்கள், சாலைகளில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவதால், நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, போராட்டக்காரர்களை கலைக்கும் பணிகளில், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.இதில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டில், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. யாங்கூனில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நேற்று முன்தினம் மட்டும், 38 பேர் உயிரிழந்தனர். இதுவரை, நாடு முழுவதும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


ஆறு பகுதி


இந்நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்கும் நோக்கத்தில், யாங்கூனில் உள்ள, வடக்கு டகோன், தெற்கு டகோன், டகோன் செய்க்கான், வடக்கு ஒக்கலபா, ஹிலைங் தார் யார் மற்றும் ஷ்வேபியிதா உள்ளிட்ட, ஆறு பகுதிகளில், நேற்று, மார்ஷியல் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக, இந்த குறிப்பிட்ட பகுதிகளில், நிர்வாகம், நீதித் துறை மற்றும் சட்ட அமலாக்கத் துறை என அனைத்தும் ராணுவ கட்டுப் பாட்டின் கீழ் வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X