கிராமி விருதுகளை அள்ளிய பெண்கள்!| Dinamalar

'கிராமி' விருதுகளை அள்ளிய பெண்கள்!

Added : மார் 16, 2021 | |
லாஸ் ஏஞ்செல்ஸ்: இசைத் துறைக்கான மிகப் பெரிய 'கிராமி' விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, நடைபெற்றது. கொரோனா விதிகளை பின்பற்றி நடந்த இந்த விழாவில், ஆண்களை விட பெண்கள் அதிக விருதுகளை பெற்றனர்.ஒன்பது பிரிவுஇதில், பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய
'கிராமி' விருதுகளை அள்ளிய பெண்கள்!

லாஸ் ஏஞ்செல்ஸ்: இசைத் துறைக்கான மிகப் பெரிய 'கிராமி' விருதுகளை, இந்தாண்டு அதிகமான பெண்கள் அள்ளிச் சென்றனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 63வது கிராமி விருது விழா, நடைபெற்றது. கொரோனா விதிகளை பின்பற்றி நடந்த இந்த விழாவில், ஆண்களை விட பெண்கள் அதிக விருதுகளை பெற்றனர்.


ஒன்பது பிரிவு




இதில், பாடகி பியான்ஸ், மிக அதிக விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், 'சேவேஜ், பிளாக் பரேட், பிரவுன் ஸ்கின் கேர்ள்' உட்பட, பாடல், வீடியோ என, ஒன்பது பிரிவுகளில் தேர்வாகி, அவற்றில் நான்கில் விருது களை அள்ளிச் சென்றார். இதன் மூலம், மொத்தம், 28 விருதுகளை வென்று, கிராமி வரலாற்றில் அதிகம் விருது வென்ற பெண் என்ற சிறப்பை, பியான்ஸ் படைத்துள்ளார்.


இவர், தற்போது, 31 கிராமி விருதுகளை வென்ற, இசையமைப்பாளர், சர்.ஜார்ஜ் சோல்டிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். பியான்சுடன் இணைந்து பாடிய அவரது, ஒன்பது வயது மகள், புளு ஐவி கார்ட்டருக்கு, சிறந்த இணை பாடகிக்கான கிராமி விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த வயதில் கிராமி விருது பெற்ற இரண்டாவது பெண் என்ற சிறப்பை, புளு ஐவி கார்ட்டர் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டிற்கான சிறந்த இசை ஆல்பமாக, டெய்லர் ஸ்விப்ட்டின், 'போக்லோர்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இவ்விருது வென்ற முதல் பெண் என்ற சிறப்பை, டெய்லர் ஸ்விப்ட் பெற்று உள்ளார். இதற்கு முன், ஸ்டீவ் வன்டர், பிராங்க் சினாட்ரா, பால் சைமன் ஆகியோர் தான் மூன்று முறை விருதுகளை வென்றுள்ளனர். விரைவில் வெளியாக உள்ள, 'நோ டைம் டு டை' ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 'டைட்டில்' பாடலுக்காக, எய்லிஷ் விருது வென்றார். முதன் முறையாக, வெளியாகாத ஒரு படத்தின் பாடலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. புதிய பாடகிக்கான விருதை, 'வேப்' பாடலுக்காக, மெகன் தட்டிச் சென்றார்.


முக கவசம்



இரட்டையர் பிரிவில், 'ரெய்ன் ஆன் மீ' பாடலுக்கான விருது, லேடி காகா, அரியனா கிராண்டே ஆகியோருக்கு கிடைத்தது. இந்தாண்டு, சிதார் இசைக் கலைஞர், ரவி சங்கரின் மகள், அனுஷ்கா
சங்கர், மும்பையைச் சேர்ந்த, பிரியதர்ஷனி ஆகியோரின் இசை ஆல்பங்கள், விருதுக்கு தேர்வான போதிலும், வெற்றி வாய்ப்பை இழந்தன. இந்நிகழ்ச்சியில், கனடாவில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, லில்லி சிங், டில்லி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முக கவசம் அணிந்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X