மனு தாக்கல் செய்ய வந்த பெண் தாதா எழிலரசி கைது

Added : மார் 16, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
காரைக்கால்:பெண் தாதா எழிலரசி, காரைக்கால் திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய காரில் வந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த தொழில்அதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, 40. சில ஆண்டுகளுக்கு முன், ராமு கொலை செய்யப்பட்டார். கணவரை கொன்றவர்களை பழிதீர்க்க, தாதாவாக மாறினார்
 மனு தாக்கல் செய்ய வந்த  பெண் தாதா எழிலரசி கைது

காரைக்கால்:பெண் தாதா எழிலரசி, காரைக்கால் திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய காரில் வந்தபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருப்பட்டினத்தை சேர்ந்த தொழில்அதிபர் ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி, 40. சில ஆண்டுகளுக்கு முன், ராமு கொலை செய்யப்பட்டார். கணவரை கொன்றவர்களை பழிதீர்க்க, தாதாவாக மாறினார் எழிலரசி.கூலிப்படையை ஏவி, ராமுவின் முதல் மனைவி வினோதா, முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் ஆகியோரை கொலை செய்த வழக்கில், எழிலரசி கைதானார்.

தொடர்ந்து அவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில் வெளிவந்தார்.முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு, மதுக்கடை உரிமையாளரை மிரட்டி, கடையை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டது உள்ளிட்ட நான்கு வழக்குகளில், எழிலரசியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து, பிடிவாரன்ட் பிறப்பித்தது. தனிப்படை போலீசார், எழிலரசியை தேடி வந்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில், எழிலரசி பா.ஜ.,வில் இணைந்தார். வரும் சட்டசபை தேர்தலில், திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட, அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வந்தனர்.இந்நிலையில் நேற்று, எழிலரசி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நாகூர் பகுதியில் இருந்து, காரில் வந்து கொண்டிருந்தார்.

இதையறிந்த போலீசார், காரைக்கால் - நாகூர் தேசிய நெடுஞ்சாலை, வாஞ்சூர் பகுதியில் காரை தடுத்து நிறுத்தி, எழிலரசியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
22-மார்-202116:04:27 IST Report Abuse
periasamy அதிமுக( முதல் அமைச்சர் ) அமைச்சர்கள் பலர் தன்னோட குற்றங்களை மறைக்கவே அதிலிருந்து தப்பிக்கவே தமிழகத்தை பிஜேபியிடம் அடகு வைத்துவிட்டனர்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
22-மார்-202116:00:42 IST Report Abuse
periasamy குற்றப் பின்னணி கொண்டவர்களின் பாதுகாப்பு சரணாலயம்தான் பிஜேபி கட்சி
Rate this:
Cancel
Ravikumar Stephen - chennai,இந்தியா
22-மார்-202110:38:31 IST Report Abuse
Ravikumar Stephen இவளுக்கு என் கவுண்டர் இல்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X