'நாட்டை குட்டிச்சுவராக்கியது காங்கிரஸ் கட்சி தான்'; நடிகர் செந்தில் காட்டம்

Updated : மார் 17, 2021 | Added : மார் 17, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
சினிமா உலகில் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெ., அழைப்பை ஏற்று, அ.தி.மு.க.,வில் இணைந்து, நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகர் செந்தில். ஜெ., மறைவுக்கு பிறகு, அ.ம.மு.க.,வில் இணைந்து அமைப்பு செயலரானார். நடிகர்கள் காயத்ரி ரகுராம், ராதாரவி, குஷ்பு, கவுதமி வரிசையில், தற்போது, பா.ஜ.,வில் இணைந்த கையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு
senthil, bjp, congress, செந்தில்

சினிமா உலகில் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. மறைந்த முதல்வர் ஜெ., அழைப்பை ஏற்று, அ.தி.மு.க.,வில் இணைந்து, நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகர் செந்தில். ஜெ., மறைவுக்கு பிறகு, அ.ம.மு.க.,வில் இணைந்து அமைப்பு செயலரானார். நடிகர்கள் காயத்ரி ரகுராம், ராதாரவி, குஷ்பு, கவுதமி வரிசையில், தற்போது, பா.ஜ.,வில் இணைந்த கையுடன் தேர்தல் பிரசாரத்திற்கு ஆயத்தமாகி உள்ளார்.

'தினமலர்' நாளிதழ் தேர்தல் களத்திற்காக அவருடன் பேசியதிலிருந்து:திடீரென, பா.ஜ.,வில் இணைந்துள்ளீர்களே?


மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை, அ.தி.மு.க.,வில் தான் இருந்தேன். அவரது மறைவுக்கு பின் சசிகலா கேட்டு கொண்டதால், அதிலிருந்தேன். பின், அ.ம.மு.க., துவங்கியதும், எனக்கு அமைப்பு செயலர் பதவியை தினகரன் அறிவித்தார். நான் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறேன். சசிகலா வெளியில் வரும் வரை, நடுநிலையாக இருக்கலாம் என்று இருந்தேன். ஆனால், அமைப்பு செயலர் பதவியில் இருந்து எடுக்கப்படுவதாக தினகரன் அறிவித்தார்.

ஜெ.,யுடன், அ.தி.மு.க., சகாப்தம் முடிந்தது. இப்போது, எந்த கட்சி இருப்பது நல்லது என பார்த்தேன். பா.ஜ.,வில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் உள்ளன. பிரதமர் மோடி, யார் ஊழல் செய்தாலும் தட்டிகேட்பவராக இருக்கிறார். அவரை கண்டு ஊழல் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதியே, வாஜ்பாய் காலத்தில், பா.ஜ.,கூட்டணியில் இணைந்திருக்கிறார். அதனால், நானும் இணைந்தேன்.உங்களை போன்ற நடிகர்கள், பிரபலங்கள் தொடர்ந்து, பா.ஜ.,வில் இணைகிறார்களே?


நல்ல கட்சியில் இருந்தால் தான், அங்கீகாரம் கிடைக்கும். ஜெ., காலம் முதல் பொது வெளியில் பேசி வருகிறேன். எனக்கு அங்கீகாரம் கிடைக்காமல், பல முட்டுக்கட்டைகள் இருந்தன. அ.தி.மு.க.,வில் நான் இருந்த காலத்தில், ஜெ.,க்கு நான் கடிதங்கள் அனுப்புவேன். அது, அவரிடம் போய் சேராது. ஜெ., பங்களாவில் இருந்த ஒருவருக்கு காசு கொடுத்தால், அந்த கடிதம் மட்டும் அவரை சென்றடையும்.அ.தி.மு.க.,வில் இணையாமல், பா.ஜ.,வில் இணைந்தது ஏன்?


அ.ம.மு.க., - அ.தி.மு.க.,வில் உரிய மரியாதை இல்லை. அதனால், பா.ஜ.,வில் இணைந்தேன்.பா.ஜ.,வுக்கு ஆதரவாக, எப்போது பிரசாரம் துவங்கவுள்ளீர்கள்?


இந்த தேர்தலில், குறைந்த நாட்கள் தான் பிரசாரம் செய்ய முடியும். கன்னியாகுமரியிலிருந்து பிரசாரம் துவங்க இருக்கிறேன்.பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி?


பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்தபடி இருக்கிறார். தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவ கல்லுாரிகள் என, ஏராளமான திட்டங்களை தந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி, இந்த நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டது.எப்படி சொல்கிறீர்கள்?


காங்., மத்தியில் ஆட்சியில் இருந்த போது, காவிரி உள்ளிட்ட நதிகளை இணைத்திருக்கலாமே. இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் காங்., தலைவர் சோனியா தானே. இதற்காகவே, காங்., வரவே கூடாது.தமிழகத்தில், காங்., கூட்டணியான, தி.மு.க., ஆட்சி வந்து விடும் என, அதன் தலைவர் ஸ்டாலின் கூறுகிறாரே?


காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., இணைந்தது, ஸ்டாலினுக்கு பின்னடைவே. வல்லரசாக முயன்ற நாட்டை, கெடுத்தது காங்., இந்திய பணம் பாகிஸ்தானில் புழங்க காரணமாக காங்கிரசார் இருந்தனர். இதுகுறித்து, நான் அ.தி.மு.க., மேடைகளில் முழங்கிய போது, என் வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்த உத்தரவிட்டார், அப்போதைய நிதியமைச்சர்.


latest tamil news

பா.ஜ., ஆட்சியில், அதானிக்கு சலுகை செய்வதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?


ராகுலுக்கு என்ன தெரியும்; அவர் சிறு பிள்ளை. மக்களிடம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எடுபடாது. காங்கிரசில் ஏற்கனவே இருந்த காமராஜர், கக்கன் போன்றவர்கள் தற்போது இல்லை. அவர்களை போல, பல தேசிய தலைவர்கள் இருந்தனர். அவர்களுடன் காங்., சரி.அ.மு.ம.க., தான் உண்மையான, அ.தி.மு.க., என, அதன் பொது செயலர் டி.டி.வி.தினகரன் கூறி வருகிறாரே?


அவருக்கும், நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.ம.மு.க.,விற்கு சும்மா சென்றேன், வந்தேன் அவ்வளவு தான். அதுவும், சசிகலா விரும்பியதால் தான்.தமிழகத்தில், பா.ஜ., வளர்ச்சி பெற்றிருக்கிறதா?


நுாற்றுக்கு நுாறு வளர்ச்சி பெற்றிருக்கிறது. முன்னர் நம்ம ஊர்களில், சிறிய கிராமங்களில், பா.ஜ., கொடியை காண முடியாது. தற்போது, சிறிய கிராமங்களிலும், பா.ஜ., கொடி பறக்கிறது.தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி எப்படி?


அது, மக்கள் கைகளில் தான் உள்ளது. யார் வெற்றி பெற்றாலும், மோடி முன் அமர்ந்தாக வேண்டும்.ரஜினியுடன் நடித்துள்ளீர்கள். அவர் திடீரென அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டாரே?


அவரது உடல்நலம் அப்படி. எல்லாவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வர முடிவு செய்திருந்தார். ஆனால், டாக்டர்கள் அறிவுரையின்படி வரவில்லை. அரசியலுக்கு வந்தால், அவரால் உண்மையிலேயே அலைய முடியாது.நடிகர் கமல், கோவை தெற்கில் நிற்கிறாரே?


அவர் நடிகர் கோதாவில் நிற்கிறார்.


எம்.ஜி.ஆர்., மடியில் வளர்ந்தவன் நான் என்கிறாரே கமல்?


அது உண்மை தானே. அவர் எம்.ஜி.ஆருடன் இருக்கும் போட்டோவை காட்டுகிறாரே.அப்படியென்றால், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் ஓட்டு அவருக்கு கிடைக்குமா?


எல்ல கட்சியினரும், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு தான் என்கின்றனர்.சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறீர்களா?


நடிக்கிறேன். சினிமாவுக்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை.நண்பர் கவுண்டமணி எப்படி இருக்கிறார்?


நன்றாகயிருக்கிறார்; அடிக்கடி பேசிக் கொள்வோம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பார்த்து கொள்வோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-மார்-202110:35:04 IST Report Abuse
Malick Raja இது நடந்து சென்றால்கூட யாரும் திரும்பி கூட பார்ப்பதில்லை .. தனது சுயநல வாழ்வுக்காக கட்சி மாறலாம்.. வாக்குகளை மாற்றவே முடியாது .. பேப்பரில் வரலாம் .. மக்களிடம் வந்தால் பெப்பர் பொடியை போடுவார்கள் ..
Rate this:
Cancel
Azhagan Azhagan - Chennai,இந்தியா
17-மார்-202120:41:06 IST Report Abuse
Azhagan Azhagan தல...........நீயெல்லாம் சொல்லுற லெவலுக்கு காங்கிரஸ் நிலைமை ஆயிருச்சே தல
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-மார்-202119:27:06 IST Report Abuse
மலரின் மகள் காங்கிரஸ் சிறப்பு செய்தது தேசத்திற்கு. சுதந்திரம் அடைந்த காலத்தில் நமது நிலைமை எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ளவேண்டும். காங்கிரசில் தான் மிக சிறந்த தலைவர்கள் எல்லோரும் இருந்தார்கள். இரும்பு மனிதர் தான் நாட்டை ஒன்று படுத்தினார். காங்கிரஸ் தேசத்தை மிகவும் சாதுரியமாக சிறப்பாகவே நிர்வகித்தது. தலைவருக்கு அடுத்தபடியாக நிறைய தலைவர்கள் அனைவருமே ரத்தினங்கள், தலைமை பொறுப்புக்கு சிறப்பானவர்கள் பலர் இருந்தார்கள் அவர்கள் அமைச்சர்களாக இருந்து நாட்டை சிறப்பாகத்தான் ஆண்டார்கள். காமராஜர் முழுமையான காங்கிரவாதி. காங்கிரசுவாதிகள் என்றால் எளிமையானவர்கள், சிறந்தவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று பல சிறப்பான அடைமொழிகளை தன்னகத்தே கொண்டவர்கள். அவர்கள் காங்கிரஸ் என்று சொன்னால் அது காந்தீயம் என்று தான் கொள்ளவேண்டும். அமைதிவழியில் தேசத்தை தங்கள் உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் தந்து உயர்த்தியவர் அவர்கள். இந்திரா காந்தியின் இறகென்னசி காலத்திற்கு பிறகு தான் காங்கிரஸ் என்பது மிகவும் தவறான பாதைக்கு சென்றுவிட்டது. தொடர்ந்து தொய்வு என்று சென்று இப்போது கரைந்து கொண்டு அழிவுப்பாதையை தானாகவே தேடிக்கொண்டது. துவாபர யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பித்து விட்டது காங்கிரசிற்கு என்று கூட சொல்லலாம். காங்கிரசின் உயரிய கொள்கைகளுடன் அந்த கட்சி அதன் தலைவர்களையும் அவர்களோடு இணைந்து இருக்கும் உப தலைவர்களையும் கோஷ்டி மட்டுமே காணமாக கொண்டவர்களும் முழுதும் புறக்கணிக்கப்பட்டு புதியவர்கள் நல்லவர்கள் அங்கே வரவேண்டும். மேலிடத்தை சீர்படுத்தி செம்மைப்படுத்தினால் நலம். காங்கிரஸ் தேசத்திற்கு வேண்டிய கட்சி. நாம் தாங்கும் எழுநட்சத்திர ஓட்டல்களில் மினி பார் இருக்கிறது என்பதற்காக நாம் குடிகாரர்களா என்ன? அனைத்து மதமும் அமைதியை போதிக்கின்றன எஹற்காக மதம் மாறவேண்டும் ஒரு மதம் சரியில்லை என்று. கட்சிகளின் கொள்கைகள் சிறப்பாகத்தான் இருக்கும் அதை பார்த்தா அதில் இணைந்தார் திரு செந்தில், திடீரெண்டு இவர் இணைந்த கட்சிகள் கொள்கைகளை மாற்றி கொண்டனவா இவர் கட்சி மாறுவதற்கு? இவரால் பெரியளவில் கட்சிக்கு லாபமில்லை வெளியேறும்படி செய்தார்கள் அல்லது அடிப்படை தொண்டனாக இருக்கலாம் என்று விட்டு விட்டார்கள், இவர் நிறம் மாறுகிறார் அதுவும் அடிக்கடி. நம்பகத்தன்மை இழந்தவராகி விடுவார். உரிய மரியாதை கிடைக்கவில்லை அதனால் தான் தலைமையை பிடிக்காமல் வேறு கட்சிக்கு மாறிவிட்டேன் என்றுதான் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் மற்றபடி பெரும்பாலும் இந்த விஷயத்தில் பொய் பிஸ்கெட்டுவதில்லை.
Rate this:
uday - Northland,நியூ சிலாந்து
18-மார்-202111:06:28 IST Report Abuse
udayசரியாக சொன்னீர் ....
Rate this:
raja - Kanchipuram,இந்தியா
21-மார்-202113:05:44 IST Report Abuse
rajaமிக சரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X