கும்மிடிப்பூண்டியில், தி.மு.க., மாவட்ட செயலர் கோவிந்தராஜன், களமிறங்கியுள்ளார். இவர் முதலியார். பா.ம.க.,வில் சமூக பிரகாஷ் நிற்கிறார். இவர் வன்னியர். தே.மு.தி.க.,வில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் கே.எம்.டில்லி அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் வன்னியர். தொகுதியில், நாயுடு ஓட்டு, 15 சதவீதத்துக்கு மேல் உள்ளது. பெரும்பாலானவர்கள், தே.மு.தி.க., ஆதரவாளர்கள். எனவே, ஒரு நாயுடுவை நிறுத்தி இருந்தால், மற்ற இரண்டு கட்சிகளுக்கும், நாயுடு சமுதாய ஓட்டுகள் போகாமல் தடுத்திருக்கலாம். ஆனால், வன்னியரை போட்டதால் ஓட்டுகள் பிரிந்து, பா.ம.க.,வுக்கு பாதிப்பு ஏற்படும். அது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும்.

கேப்டனின் மைத்துனர் சுதீஷ் இதை தெரிந்தே செய்திருப்பதாக கட்சிக்காரர்கள் நினைக்கின்றனர். தி.மு.க.,வின் கோவிந்தராஜன், சுதீஷின் மாமனார் குடும்பத்துக்கு நெருக்கம். அவர் மூலம் பல்வேறு தொழில்களை, உறவினர்கள் செய்கின்றனர். கோவிந்தராஜன் வெற்றி பெற்று, அமைச்சர் ஆகிவிட்டால் அந்த தொழில்கள் அமோகமாக நடக்கும். இதுதான் சுதீஷ் போட்ட கணக்கு என, மா.செ.,வின் ஆட்கள் புட்டுப் புட்டு வைக்கின்றனர். டில்லி வசிப்பது மாதவரம் தொகுதியில். எனவே, அந்த தொகுதியை கேட்டார். ஆனால், கும்மிடிப்பூண்டிக்கு சுதீஷ் தள்ளி விட்டதால் புலம்புகிறார். கட்சிக்காக தியாகம் செய்ய எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? 'சியர் அப் டில்லி!'
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE