கட்சி தொண்டர்கள் மாஸ்க் அணிவதில்லை: சுகாதார செயலர்

Updated : மார் 17, 2021 | Added : மார் 17, 2021 | கருத்துகள் (41) | |
Advertisement
சென்னை: அரசியல் கட்சி கூட்டங்களில் பெரும்பாலான தொண்டர்கள் மாஸ்க் அணிவது இல்லை எனவும், அவர்களை மாஸ்க் அணிய தொண்டர்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோரில் பெரும்பாலானோர்
சுகாதார செயலர், ராதாகிருஷ்ணன், மாஸ்க், தொண்டர்கள், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,

சென்னை: அரசியல் கட்சி கூட்டங்களில் பெரும்பாலான தொண்டர்கள் மாஸ்க் அணிவது இல்லை எனவும், அவர்களை மாஸ்க் அணிய தொண்டர்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோரில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. மாஸ்க் அணியாவிட்டாலும் கொரோனா வராது என மக்கள் தவறாக நினைக்கின்றனர். தொண்டர்களை மாஸ்க் அணிய தலைவர்கள் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அரசு வழங்கும் இலவச தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ள வேண்டும்.


அரசியல் கூட்டங்கள், குடும்ப நிகழ்ச்சிகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்கிறார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணன் தமிழக சுகாதாரத்துறை செயலர்

latest tamil news





அபராதம் விதித்தால் மட்டுமே பொதுமக்கள் முகக்கவசம் அணிகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் பாதிப்பு குறைவாக இருந்த பகுதிகளில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்கக்கூடும். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-மார்-202117:36:22 IST Report Abuse
S.Baliah Seer இல்லாத கோரோனோவுக்கு ஏன் மாஸ்க் அணியவேண்டும்?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-மார்-202115:58:05 IST Report Abuse
Visu Iyer மெரீனா கடற்கரையை இழுத்து மூடுங்கள்... காதலர்கள் சமூக இடைவெளி இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள். என்று யாராவது சொல்லப் போறாங்க..
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-மார்-202115:56:56 IST Report Abuse
Visu Iyer தனிமையில் இருந்த சசிகலாவுக்கே கொரானா வந்து இருக்கே.. அப்போ எதற்கு தனிமை படுத்த வேண்டும் என்று யாருக்குமே கேட்க தோன்றவில்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X