ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாயாம்: எழுத்து பிழை என சீமான் விளக்கம்

Updated : மார் 17, 2021 | Added : மார் 17, 2021 | கருத்துகள் (87) | |
Advertisement
சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2019-20 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது எழுத்துப்பிழை என தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள
Seeman,சீமான்,நாம் தமிழர் கட்சி

சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 2019-20 நிதியாண்டில் ஆண்டு வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது எழுத்துப்பிழை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அத்துடன், தங்களது சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி, நிலுவையில் உள்ள கடன் விவரங்கள், தண்டனை பெற்ற விவரங்கள் உள்ளடக்கிய பிரமாண பத்திரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர்.

அவ்வாறு திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 2019 - 20ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.31,06,500, அசையா சொத்து ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு ரூ.63,25,031 மதிப்பு அசையும் சொத்து உள்ளதாகவும், ரூ.25,30,000 மதிப்பு அசையா சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


latest tamil news2019- 20 ம் நிதியாண்டில், வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சீமான், ஆயிரம் ரூபாய் வருமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது எழுத்து பிழை என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
22-மார்-202114:35:04 IST Report Abuse
periasamy உன் அரசியலே பிழைதான் நீ வசூலுக்காக கட்சி நடத்தும் ஆள்தான் நீ ஆட்சியை பிடிப்பேன் என்றுதான் கடைசிவரை சொல்லிக் கொண்டு அலைவாய் உன் சுயரூபம் தெரியும் போது தொம்பிகள் உன் கட்சியை விட்டு ஓடி விடுவார்கள்
Rate this:
Cancel
Muguntharajan - Coimbatore,இந்தியா
18-மார்-202106:43:16 IST Report Abuse
Muguntharajan இதையும் தேர்தல் கமிஷன் சரியென்று ஏற்றுக் கொண்டதா? ஏன் கேள்வி கேட்கவில்லை? 1000 ரூபாய் எழுத்துப் பிழை. அப்ப 12000 ரூபாய் சரியா? அதை ஏன் ஊடகங்கள் கேட்கவில்லை?
Rate this:
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
18-மார்-202105:22:13 IST Report Abuse
சத்தியம் தமிழ் வரலாறு தெரியா தமிழன் வரலாறு தெரியா சீமான்..... கட்டுகதை சொல்லும் தற்குறி சீமான்னுக்கு தமிழன் வரலாறு எதுவும் தெரியாது.... சங்க இலக்கியம் சித்தர் இலக்கியம் ,தமிழ் மன்னர்கள் கல்வெட்டு செப்பு பட்டையம் எல்லாம் இராமனை தான் புகழ்ந்து சொல்லி உள்ளன.... சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் இராமனை திருமால் அவதாரம் என்று சொல்லி உள்ளன.... சங்க இலக்கியம் எல்லாம் இராவணனை அரக்கன்,என்று சொல்லி உள்ளன.. மணிமேகலை காப்பியம் இராவணனை மானம் கெட்டவன் என்று சொல்லி உள்ளது ,திருப்புகழ் இராவணனை திருட்டு அரக்கன் என்று சொல்லி உள்ளது... சித்தர் சிவ வாக்கியர் இராம நாமம் பற்றி புகழ்ந்து பாடி உள்ளார்.... எந்த தமிழ் நூல்களும் இராவணன் பற்றி புகழ்ந்து சொல்ல இல்லை..... சேர சோழ மன்னர்கள் தங்கள் கல்வெட்டு செப்புபட்டையங்களில் எல்லாம் தங்களை சூரிய குலத்தில் பிறந்த இராமன் வழியில் வந்தவர் என்று சொல்லி உள்ளனர்.... (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு) பாண்டிய மன்னனுக்கு பயந்து பயந்து இராவணன் பாண்டிய மன்னன் உடன் சமாதானம் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்று பாண்டியர் செப்பு பட்டையம் சொல்லி உள்ளது.... எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழி வந்தவர்கள் என்று சொல்லி கொண்டது இல்லை..... அன்னிய கைக்கூலி சீமான் தமிழ் தமிழன் என்று சொல்லி கொண்டு தமிழனை ஏமாற்றி கொண்டு உள்ளார்..... இராவணன் சிங்களவன் என்பதற்கும் இராவணவனன் தமிழன் இல்லை என்பதற்கும் தமிழ் மன்னர்கள் செப்பு பட்டையம் கல்வெட்டு, சங்க இலக்கியம், சித்தர்கள் இலக்கியம், சிங்கள மொழி கல்வெட்டு சிங்கள மொழியில் உள்ள பழைய நூல்கள், சிங்கள நாட்டுப்புறக்கதைகள் ,இவைகளில் எல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கு எங்கும் ஆதாரம் இல்லை......சீமானை நம்பி ஏமாந்து போகும் தம்பிகள்..... வாழ்க்கையை தொலைப்பது நிச்சயம்...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X