புதுடில்லி: இந்தியர்களுக்கு போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை விட அதிகமாக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்., மூத்த தலைவரும் எம்.பி.,யுமான ப.சிதம்பரம், இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசிகள் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கும் செலுத்தப்படுகிறது. இதுவரை 3 கோடியே 71 லட்சத்து 43 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நமது அண்டை நாடுகளுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 5.9 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காங்., எம்.பி., சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 5.9 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால், இந்தியர்களுக்கு இதுவரை 3 கோடி கொரோனா தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதில் ஏமாற்றமடைகிறேன். இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து யாரேனும் சிந்திக்கிறீர்களா?.
The central government has failed miserably in rolling out the vaccination to Indians.
Is there any wonder that the number of infections is rising rapidly every day?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 18, 2021
தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசிக்கு மத்தியிலுள்ள போட்டியில் கொரோனாதான் மக்களை வெல்கிறது. மக்களுக்கு தேவைக்கேற்ப கொரோனா தடுப்பூசிகளைப் போட வேண்டும். கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு போன்ற அதிகாரத்துவ தடைகளை விலக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
At this rate the race between the virus and the vaccination will be won by the virus.
Government should allow walk-in vaccination on demand and get rid of bureaucratic hurdles including pre-registration.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 18, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE