டி.எம்.சி., என்றால் என்ன? மம்தா கட்சி குறித்து பிரதமர் புது விளக்கம்

Updated : மார் 18, 2021 | Added : மார் 18, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: எனது கமிஷனை கொடுங்கள் ( Transfer My Commission) என்ற அடையாளமாக திரிணமுல் காங்கிரஸ் மாறிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மே.வங்க மாநிலம் புருலியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது: புருலியா நகரை கைவிட்டது ஏன் என்பது குறித்து மம்தா விளக்கம் அளிக்க வேண்டும். உங்களின் அனைத்து பிரச்னைகளையும் பா.ஜ., தீர்த்து வைக்கும். உள்ளூர் மக்களின் உரிமைகளை மம்தா
Narendra modi, Modi, Pmmodi, Pmnarendra modi, mamata, Mamata banerjee, trinamool congress , Tmc

புதுடில்லி: எனது கமிஷனை கொடுங்கள் ( Transfer My Commission) என்ற அடையாளமாக திரிணமுல் காங்கிரஸ் மாறிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மே.வங்க மாநிலம் புருலியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது: புருலியா நகரை கைவிட்டது ஏன் என்பது குறித்து மம்தா விளக்கம் அளிக்க வேண்டும். உங்களின் அனைத்து பிரச்னைகளையும் பா.ஜ., தீர்த்து வைக்கும். உள்ளூர் மக்களின் உரிமைகளை மம்தா அரசு பறித்துவிட்டது.

இடதுசாரிகள் முதல் மம்தா அரசு வரை, இப்பகுதியில் உள்ள தொழில்துறை வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண இயலவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் சந்திக்கும் குடிநீர் பிரச்னைகள் குறித்து நான் நன்கு அறிவேன். புருலியா நகர மக்கள் வெளியேறி வருகின்றனர். நாட்டில் மிகவும் பின் தங்கிய பகுதி என இப்பகுதிக்கு மாநில அரசு அடையாளம் கொடுத்துள்ளது. . விவசாயிகளையும் மாநில அரசு கைவிட்டுவிட்டது. மாவோயிஸ்ட்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.


latest tamil news


மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். இந்தியாவின் மகள் என்ற முறையில் மம்தாவை மதிக்கிறோம். அவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து கவலைப்படுகிறோம். அவர் விரைவில் குணமடைய வேண்டும். ஓபிசி பிரிவினரை ஏமாற்றிய மம்தா, தலித்கள் மற்றும் ஆதிவாசிகளை புறக்கணித்து விட்டார்.

மத்திய அரசு அனுப்பிய இலவச அரிசி மற்றும் பணத்தை திரிணமுல் கட்சியினர் தடுத்துவிட்டனர். அம்பான் புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை, திரிணமுல் தொண்டர்கள் கொள்ளையடித்தனர். மே. வங்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்போம். பயத்தை பரப்புவதையே திரிணமுல் கட்சியினர் முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

நேரடி மானியம் வழங்கும் திட்டத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனது கமிஷனை கொடுங்கள் என்பது (Transfer MY Commission) என்பது திரிணமுல்லின் நிலையாக உள்ளது. மம்தா வெளியேறுவதற்கான கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. மே 2ம் தேதி ஆட்சியில் இருந்து மம்தா வெளியேறுவார். மே 2 அன்று மாபியாக்களுக்கும், கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பவர்களுக்கும் முடிவு கட்டப்படும். மே 2க்கு பிறகு, மக்கள் அச்சத்தை தவிர்த்து கொண்டாட்டத்தில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-மார்-202107:08:42 IST Report Abuse
தல புராணம் //விவசாயிகளையும் மாநில அரசு கைவிட்டுவிட்டது.// டில்லியில் நாலு மாசமா நடுரோட்டில் கெடக்குறாங்க.. மனசாட்சி இல்லாமே கொடுமைப்படுத்தும் கொடுங்கோலன், கண்ணில்லாத இவரு, மத்தவாளை பத்தி பேசுறார்..
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
19-மார்-202112:01:47 IST Report Abuse
R MURALIDHARANஅவர்கள் விவசாயிகளே அல்ல. இடைதரகர்கள். ஒட்டுமொத்தமாகவே மூன்று மாநிலங்களை சேர்த்த தரகர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள்....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-மார்-202107:02:46 IST Report Abuse
தல புராணம் இங்கே கூட அடிமைங்க ஆட்சியிலே (2019 இல்) , சென்னையில் காக்னிசன்ட் (அமெரிக்க கிளை) நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவாக்க 20 லட்சம் வரை ஆத்தீமூக்கா அடிமை அமைச்சர்களுக்கும், அவர்களின் துறை லஞ்ச பேய்களுக்கும் - 20 லட்சம் - லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் 200 கோடி அபராதம் கட்டியது.. அசிங்கம் பிடித்த நம்நாட்டில் அந்த லஞ்சத்தை விசாரிக்க இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அசிங்கம் பிடித்த கூட்டத்துக்கு முட்டு கொடுத்து தமிழ்நாட்டை அழிக்க வருகிறது மோசடி கூட்டம்.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
19-மார்-202103:33:29 IST Report Abuse
Milirvan பக்கி'ஸ்தானிளாய் நாடு நாடாய் சென்று பிச்சை எடுக்கின்ற.., ISIS என்று குமுறி எழுந்து ஊர் கூடி குமுறியவுடன் தாடியை வழித்துக்கொண்டு பதுங்கிய...சூடானிய டார்பர் வீதிகளில் புணர்கேளிக்கை கொண்டாடிய.. ஐரோப்பிய நாடுகளில் அருவருக்கப்படுகின்ற... டிரம்ப்பால் ஒதுக்கப்பட்ட... "உங்களின் நீங்களை" பற்றி பேசலாமே..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X