பொது செய்தி

இந்தியா

கிழிந்த ஜீன்ஸ் பெண்கள் ; உத்தர்கண்ட் முதல்வர் 'கமென்ட்' : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 18, 2021 | Added : மார் 18, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
டேராடூன் : கால் முட்டி தெரியும்படியும், கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள், இது நல்லதா, மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதன் விளைவு என உத்தர்கண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசிய கருத்திற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் டுவிட்டரில் இன்று(மார்.,18) டிரெண்ட் ஆனது.உத்தர்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.,
RippedJeansTwitter, rippedjeans, UttarakhandCM

டேராடூன் : கால் முட்டி தெரியும்படியும், கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் இந்த சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள், இது நல்லதா, மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவதன் விளைவு என உத்தர்கண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசிய கருத்திற்கு பெண்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் டுவிட்டரில் இன்று(மார்.,18) டிரெண்ட் ஆனது.

உத்தர்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதை அடுத்து புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் சமீபத்தில் பதவியேற்றார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ''பெண்கள் கால் முட்டி தெரியும்படியும், கிழிந்த ஜீன்ஸ்களையும் அணிகிறார்கள். இந்த சமூகத்திற்கு இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். இவை நல்லதா? இந்த காலச்சாரம் எங்கிருந்து வந்தது. வீட்டிலா, பள்ளியிலா அல்லது வேறு எங்கிருந்து வருகிறது. யாரிடம் இந்த தவறு உள்ளது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்காக இப்படி ஆடைகளை அணியலாமா. மேல்நாட்டு கலாச்சாரத்தை கண்மூடித்தனமாக நாம் நம்புவதே இதற்கு காரணம். இது போன்று உடை அணிவது சமூக முறிவுக்கு வழி வகுக்கிறது என்றார்.


latest tamil news



முதல்வரின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களும், பெண்ணியவாதிகளும் இவரின் கருத்தை விமர்சித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #RippedJeansTwitter, #rippedjeans, #UttarakhandCM ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இந்த ஹேஷ்டாக்குகளில் பலரும் பதிவிட்ட கருத்துக்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

* நான் ஒரு அரசியல்வாதி, நான் ஸார்ட்ஸ் அணிகிறேன். நான் விரும்பிய உடை நான் அணிகிறேன், எனக்கு பிடித்த உணவை உண்கிறேன். வேறு யாரும் எனக்கானதை தீர்மானிக்க முடியாது என டில்லி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதிகா என்பவர் தெரிவித்துள்ளார்.

* கிழிந்த ஜீன்ஸை நான் ஆதரிக்கிறேன். அதோடு பர்தா அணிவதை நீக்குங்க என்பதற்கும் ஆதரவு தெரிவிக்கிறேன். காரணம் நீங்கள் ஒன்றை மட்டும் ஆதரித்தால் உண்மையான பெண்ணியவாதி அல்ல.

* கிழிந்த ஜீன்ஸால் பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. இது பா.ஜ., தலைவர்களின் மோசமான மனநிலை, முதலில் அதை மாற்றுங்கள்.


latest tamil news



* புதிய இந்தியா இன்னும் பழைய ஆர்எஸ்எஸ் மனநிலையிலேயே உள்ளது. உங்களின் மறைமுகமான செய்தி தொடர்பாளர் கங்கனா என்ன உடை அணிந்துள்ளார் என நீங்களே பாருங்கள் என ஒருவர் கங்கனா கிழிந்த ஜீன்ஸ் அணிந்த உடையுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் நாட்டில் விவசாயம் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. அதைப்பற்றி சிந்தியுங்கள்.

* கிழிந்த மூளைகளை விட கிழிந்த ஜீன்ஸ் எவ்வளவோ சிறந்தது.

* இவரின் கூற்றை கேட்டு அதிர்ச்சியாக உள்ளது. இந்த சமூகத்திற்கு என்ன செய்தி சொல்ல வருகிறார். பெண்கள் முட்டிகால் தெரியும் உடை அணிவது மோசமான முன்மாதிரி என்றால் ஆண்கள் அப்படி அணியலாமா? அவர்களின் சதை மட்டும் என்ன வேறுமாதிரி உள்ளதா? என கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிந்துள்ள உடையை ஒரு போட்டோவாக பதிவிட்டுள்ளார்.

* நான் கிழிந்த உடையை அணிந்தால் உங்களுக்கு என்ன பிரச்னை.

* நான் ஒரு பெண். என் உடை, என் சுதந்திரம், யாரை கேட்க வேண்டும். நான் கிழிந்த ஜீன்ஸை அணிவேன்.

* பெண்கள் விரும்பிய உடையை அணிவார்கள். முதலில் நீங்கள் வெறித்துப் பார்ப்பதையும், அவர்களை தீர்மானிப்பதையும், அவர்களுக்கு எதிரான தவறான கருத்துக்களையும் நிறுத்துங்கள்.

* கிழிந்த ஜீன்ஸ் அணிவதால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களின் பார்வையில் தான் பிரச்னை உள்ளது.

* பிரச்னை பெண்களின் கிழிந்த ஜீன்ஸ் அல்ல. இவர் போன்ற மலிவானவர்களின் மனநிலை தான் காரணம். சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது, கொலை செய்யப்படும்போது, மந்திரி ஒரு பெண்ணை வேலைக்காக செக்ஸிற்கு அழைக்கும்போது அவர்கள் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனால் முழங்கால்கள் தெரியும் பெண்களைக் கண்டு இவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

இப்படி பலரும் தங்களது எதிர்ப்பை கருத்துக்கள் வாயிலாக டுவிட்டரில் பதிவிட்டு வருவதுடன், நூற்றுக்கணக்கான பெண்கள் பலரும் கிழிந்த ஜீன்ஸ், சார்ட்ஸ் அணிந்து கொண்டு எடுத்த போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
19-மார்-202109:38:40 IST Report Abuse
sankar நல்ல கருத்துதான் - பெண்ணியம் பேசுவோர் கூட மறுக்க மாட்டார்கள்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-மார்-202108:22:13 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அதையாவது போடுறாங்கல்ல ?
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
19-மார்-202101:49:53 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி மண்டூ 3/4th நல்லாக்கும். நீங்ககூடா போட்டுகூங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X