அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிச்சுட்டாங்களே...!'தாயகம் திரும்பியோர் குமுறல்

Added : மார் 19, 2021
Share
Advertisement
நீலகிரி மாவட்டம், கூடலுார் - தனி தொகுதியில், தாயகம் திரும்பிய தமிழர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பிரதிநிதிகள் யாரும், இதற்கு முன் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதில்லை. இதுவரை போட்டியிட்டவர்கள் வெளி ஆட்களாகவே இருந்தனர்.இந்த தேர்தலில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் உள்ளூர்காரர்கள். அ.தி.மு.க., - பொன்ஜெயசீன்; தி.மு.க., - காசிலிங்கம்; ம.நீ. ம., - பாபு; நாம் தமிழர் -

நீலகிரி மாவட்டம், கூடலுார் - தனி தொகுதியில், தாயகம் திரும்பிய தமிழர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பிரதிநிதிகள் யாரும், இதற்கு முன் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதில்லை. இதுவரை போட்டியிட்டவர்கள் வெளி ஆட்களாகவே இருந்தனர்.இந்த தேர்தலில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் உள்ளூர்காரர்கள். அ.தி.மு.க., - பொன்ஜெயசீன்; தி.மு.க., - காசிலிங்கம்; ம.நீ. ம., - பாபு; நாம் தமிழர் - கேத்தீஸ்வரன்; தே.மு.தி.க., - யோகேஸ்வரன் என, முக்கிய கட்சிகளின், ஐந்து வேட்பாளர்களும் கூடலுார், பந்தலுார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பாபுவை தவிர மற்ற, நான்கு பேரும் தாயகம் திரும்பியவர்கள்.இவர்கள், ஏதோ ஒரு வகையில், அங்கு வாழும் தாயகம் திரும்பிய, தோட்ட தொழிலாளர்களுக்கு உறவினர்களாக உள்ளனர். இதனால், கட்சிக்கு ஓட்டளிப்பதா அல்லது உறவினருக்கு ஓட்டளிப்பதா என்ற குழப்பத்தில், தாயகம் திரும்பியவர்கள் உள்ளனர்.'ஒற்றுமையாக இருந்த நம்மளையே, அரசியல்வாதிக பிரிச்சுட்டாங்கப்பா' என, மக்கள் குமுறுகின்றனர். தி.மு.க.,வின் ஓட்டு வங்கி என்று கூறப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்களின் ஓட்டு, இம்முறை சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தான் அரசியல் சதுரங்கம் என்பதா...

நீலகிரி, கூடலுார் தனி தொகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் அதிகம் உள்ளனர். இவர்களின் பிரதிநிதிகள் யாரும், இதற்கு முன் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டதில்லை. இதுவரை போட்டியிட்டவர்கள் வெளி ஆட்களே. இந்த தேர்தலில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் உள்ளூர்காரர்கள். அதிமுக பொன்ஜெயசீன், திமுக காசிலிங்கம், மநீம பாபு, நாம் தமிழர் கேத்தீஸ்வரன், தேமுதிக யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மநீம பாபுவை தவிர மற்ற நான்கு பேரும் தாயகம் திரும்பியவர்கள். இவர்கள் ஏதோ ஒரு வகையில் அங்கு வாழும் தாயகம் திரும்பிய தோட்ட தொழிலாளர்களுக்கு உறவினர்களாக உள்ளனர். இதனால், கட்சிக்கு ஓட்டளிப்பதா அல்லது உறவினருக்கு ஓட்டளிப்பதா என்ற குழப்பத்தில், தாயகம் திரும்பியவர்கள் உள்ளனர். 'ஒற்றுமையாக இருந்த நம்மளையே, அரசியல்வாதிக பிரிச்சுட்டாங்கப்பா' என, மக்கள் குமுறுகின்றனர். தி.மு.க.,வின் ஓட்டு வங்கி என்று கூறப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்களின் ஓட்டு, இம்முறை சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X