பூரண மதுவிலக்கு அமல்: த.மா.கா., தேர்தல் அறிக்கை வெளியீடு

Added : மார் 19, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில்,
TamilnaduElections2021, TMC, Manifesto, GKVasan, தமாகா, ஜிகே வாசன், தேர்தல் அறிக்கை, பூரண மதுவிலக்கு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ள சில சிறப்பு அம்சங்கள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
* திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
* மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மார்-202106:18:34 IST Report Abuse
Mani . V ஆமா, இவரு கட்சியில் ஒரு பத்து பேர் உறுப்பினர்களாக இருப்பார்களா?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-மார்-202106:05:23 IST Report Abuse
D.Ambujavalli வாங்கிய ஆறு சீட்டுக்கு, கூட்டணித் தலைமையே தொடாத, பூரண மதுவிலக்கை தொட்டு அவர்களை சங்கடப் படுத்தலாமா? அவர்கள் நேக்காக இதைப்பற்றி மூச்சுக்கூட விடவில்லையே
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-மார்-202103:25:25 IST Report Abuse
மலரின் மகள் பதினாறு பதினேழு வயது மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்று தருவதாக அறிவித்திருக்கிறார்களா தேர்தல் அறிக்கையில். வெறும் ஆறு தொகுதியில் போட்டி இடுவதற்கு எதற்கு கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை. அந்த அந்த வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து விட்டு போகலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X