பூரண மதுவிலக்கு அமல்: த.மா.கா., தேர்தல் அறிக்கை வெளியீடு| Dinamalar

பூரண மதுவிலக்கு அமல்: த.மா.கா., தேர்தல் அறிக்கை வெளியீடு

Added : மார் 19, 2021 | கருத்துகள் (29) | |
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில்,
TamilnaduElections2021, TMC, Manifesto, GKVasan, தமாகா, ஜிகே வாசன், தேர்தல் அறிக்கை, பூரண மதுவிலக்கு

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதில் கூறப்பட்டுள்ள சில சிறப்பு அம்சங்கள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
* திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
* மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X