சென்னை: தமிழகத்தில், தபால் ஓட்டுப்போட தற்போது வரை 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சட்டசபை பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும், 80 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுச்சாவடிக்கு வருவதை தவிர்க்க, தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. 'படிவம்-12டி' மூலம், தபால் ஓட்டு பெற தகுதியான வாக்காளரின் விருப்பத்தை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அறிந்து வருகின்றனர். இதன்படி, தற்போது வரை 2,44, 922 லட்சம் பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
போலீசார் - 2,770
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் - 33,189
மாற்றுத்திறனாளிகள் - 49,114
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 1,59,849
அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டவர்கள்-35 பேர் என மொத்தம் 2,44,922 பேர் தபால் ஓட்டுப்போட விண்ணப்பித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE