தேவேந்திர குல வேளாளர் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது

Updated : மார் 21, 2021 | Added : மார் 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
தமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என, அழைக்க வகை செய்யும், சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி
 தேவேந்திர குல வேளாளர் மசோதா லோக்சபா, நிறைவேற்றப்பட்டது

தமிழகத்தில், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என, அழைக்க வகை செய்யும், சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.தமிழகத்தில், தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பண்ணாடி, வாதிரி ஆகிய உட்பிரிவுகளில் இருக்கும் மக்கள் தங்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என, ஒரே பெயரில் அழைக்க வலியுறுத்தி வந்தனர்.


வாக்குறுதி



இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்திருந்த போது, இது தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். இந்நிலையில், இதற்கான சட்ட திருத்த மசோதா குறித்து, நேற்று மதியத்துக்கு மேல், விவாதம் நடைபெற்றது. அப்போது, ஹரியானாவின் பா.ஜ., - எம்.பி., சுனிதா துக்கால் பேசியதாவது:சங்க காலத்தவரான மள்ளர் பிரிவு மக்களின் சிறப்புகள், பல்வேறு கல்வெட்டுகளில் உள்ளன. முக்கிய கோவில்களில், இம்மக்களுக்கு தற்போதும் சிறப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. தேவேந்திரர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தால், அனைத்து பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை

.ஆங்கிலேயர் காலத்தில் தான், இம்மக்கள், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் முன், சென்னையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'நான் நரேந்திரர் எனில், நீங்கள் தேவேந்திரர்' என, குறிப்பிட்டு, அம்மக்களை பெருமைப்படுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாபின் காங்., - எம்.பி., அமர் சிங் பேசுகையில், ''தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு நடுவே, இம்மசோதா, அரசியல் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டுஉள்ளது,'' என்றார்.



மரியாதை



இதையடுத்து பேசிய உத்தர பிரதேச பா.ஜ., - எம்.பி., ரீட்டா பகுகுணா ஜோஷி, ''நில உடைமையாளர்களாக இருந்த இம்மக்கள், காலப்போக்கில் சமூகத்தில் இழிநிலைக்கு தள்ளப்பட்டனர். ''விவசாய தொழிலைச் செய்யும் அவர்கள், தங்களுக்குரிய மரியாதையைத் தான் கேட்கின்றனர். அதை ஏற்று, அவர்களுக்கு அளித்த வாக்குறுதியைத் தான், தற்போது பிரதமர் நிறைவேற்றியுள்ளார்,'' என்றார்.இந்த விவாதங்களுக்குப் பின், ஏழு ஜாதி பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என, அழைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-202120:48:39 IST Report Abuse
Shankar Nadar வாழ்த்துக்கள் தேவேந்திரகுல வேளார்கள் மஹாஜனங்களே. இவர்கள் இன்னொரு வேண்டுகோள் தாழ்த்தப்பட்ட பட்டியல் ஜாதியிலிருந்து நீக்கி மிகவும் பிற்படுத்த பட்டோர் சமூகத்தோடு சேர்க்கவேண்டும் என்பதுதான்.
Rate this:
Cancel
20-மார்-202113:33:52 IST Report Abuse
சந்திரசேகர் அப்போ வெள்ளாளர் வேற (பிள்ளைமார்கள்) வேளாளர்கள் வேறயா?இசை வேளாளர் எந்த வரிசையில் வரும். கிராமங்களில் வேளார் என்றோரு சமுகம் கோயிலில் பூஜை செய்வார்கள்.அவர்கள் எந்த வரிசை. ஒரே குழப்பம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-மார்-202108:26:16 IST Report Abuse
sankaseshan BJP வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவதில்லை நோட்டை சொல்லாவிட்டால் அன்புக்கு தூக்கம் வராது கிருஷ்ணசாமி சந்தோஷ படுவார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X