அந்த காலம் இனிமேல் வருமா?

Updated : மார் 22, 2021 | Added : மார் 20, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
இப்போது எங்கு பார்த்தாலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை பற்றியே பேசப்படுகிறது. செய்தித்தாள்களும், ஊடகங்களும் நிறைய செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இப்போது நடக்கும் தேர்தல் பிரசாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும், 50 - 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த மேடைப் பேச்சுக்களையும் ஒப்பிட்டு பார்க்கையில், மிக ஆச்சரியமாய் உள்ளது. அப்போது எல்லாம் பிரசாரம் செய்வதற்கு நேரம், காலம்
உரத்த சிந்தனை

இப்போது எங்கு பார்த்தாலும், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை பற்றியே பேசப்படுகிறது. செய்தித்தாள்களும், ஊடகங்களும் நிறைய செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இப்போது நடக்கும் தேர்தல் பிரசாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும், 50 - 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த மேடைப் பேச்சுக்களையும் ஒப்பிட்டு பார்க்கையில், மிக ஆச்சரியமாய் உள்ளது.

அப்போது எல்லாம் பிரசாரம் செய்வதற்கு நேரம், காலம் கிடையாது. தெருக்கூத்து மாதிரி, விடிய விடிய நடக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஒரு முறை, எம்.ஜி.ஆர்., முதல் நாள் மாலை, 5:00 மணிக்கு பேசுவதாக இருந்தது; ஆனால், எப்போது வந்தார் தெரியுமா... மறுநாள் காலை, 8:00 மணிக்கு!
ஒரு ஈர்ப்பு சக்திஅதுவரை ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும், தம் கைக்குழந்தைகளுடன் காத்து இருந்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் அல்ல; எல்லா தலைவர்களுக்கும் அவ்வளவு கூட்டம் வரும். காரணம், அக்காலத்தில், 'டிவி' கிடையாது. யாரையும் நேரில் பார்க்க முடியாது. நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் பார்ப்பது பெரிய விஷயம். மேலும், எல்லாரிடமும் ஒரு ஈர்ப்பு சக்தி, கவர்ச்சி இருந்தது.ஒரு முறை திருவாரூருக்கு நடிகர் சிவாஜி வந்தார். இரவு, 9:00 மணிக்கு மீட்டிங். இரவு, 7:00 மணிக்கு திருவாரூருக்கு பாசஞ்சர் ரயில் உண்டு; பஸ் அவ்வளவாக கிடையாது; கட்டணமும் அதிகம். அந்த ரயிலை பிடித்து, அவரைப் பார்த்தோம்.மீட்டிங் முடிந்தவுடன் நள்ளிரவு, 2:00 மணிக்கு பாசஞ்சர் ரயில் ஏறி, எங்கள் ஊருக்கு வந்தோம்.ஒன்றை கட்டாயம் சொல்ல வேண்டும். இக்காலத்தில் தலைவர்கள் செய்யும், 'பந்தா' தாங்க முடியவில்லை. தொண்டர்களை அருகில் அமர விடுவது இல்லை. இந்த விஷயத்தில், திராவிட தலைவர்களை பாராட்டியே ஆக வேண்டும். நான் சொல்வது அக்கால தலைவர்களை.ஈ.வெ.ரா., எங்கள் ஊருக்கு அடிக்கடி வருவார். எப்போது வந்தாலும் மாலை நேரம், புகை வண்டி நிலையத்தில் இருந்து, மீட்டிங் நடக்கும் பூங்காவுக்கு திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வருவர்.ஒரு சமயம் அவ்வாறு வரும் போது, அவர் கார் கதவை பிடித்துக் கொண்டு கூடவே நடந்து வந்தேன். அவர் என்னைப் பார்த்தார்; எனக்கு பயம் வந்து விட்டது. 'டிபிகல்' பிராமண பையன் மாதிரி இருப்பேன். திட்டப் போகிறார் என, நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்து, 'போய் படி... இந்த கூட்டம் எல்லாம் உனக்கு வேண்டாம்' என்றார்.அவர் ஒரு எளிமை யான மனிதர். அது போலவே மேடைப் பேச்சு இருக்கும்; யதார்த்தமாக பேசுவார்.அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம், விலை உயர்வு, விலைவாசி உயர்வு என, ஆட்சியிலிருந்த காங்கிரசை திட்டுவர். அதற்கு ஈ.வெ.ரா., 'முன்பு எல்லாம் எவ்வளவு சம்பளம் வாங்கின... இப்ப எவ்வளவுவாங்குற... அப்ப, 11 ரூபாய் சம்பளம். 'இப்ப, 18 ரூபாய் சம்பளம். போய் வேலைய பாரு... சம்பளம் அதிகமாக அதிகமாக, விலைவாசி ஏறும்...' என்பார்.அண்ணாதுரையும் அப்படித் தான் ரொம்ப சாதாரணமாக சட்டை, வேட்டியில் தான் வருவார். முதல் நாள் கூட்டம் முடிந்தவுடன், கட்சிக்காரர் வீட்டிலேயே தங்குவார்.காலையில், டீ குடித்தபடியே தெருவாசிகளிடம் பேசிக் கொண்டு இருப்பார். அண்ணாதுரைக்கு எங்கள் ஊர் தான் சம்பந்தி வீடு. பையனுக்கு இங்கு பெண் எடுத்தார். அதன் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன், மாலையில், பூங்காவில் மீட்டிங். அன்று திருவண்ணாமலையில் நடந்த, ஒரு இடைத்தேர்தல் முடிவு வந்தது; தி.மு.க., வெற்றி பெற்றது. அந்த வெற்றி செய்தியை, கருணாநிதி மேடையில் அறிவித்தார். உடனே அண்ணாதுரை, 'இந்த செய்தியை சொன்ன கருணாநிதி பெண்ணாக இருந்தால், முத்தம் கொடுத்து இருப்பேன்' என்றார்.ஒரு முறை கருணாநிதி, எங்கள் ஊருக்கு அருகில் உள்ள குத்தாலத்திற்கு வந்தார்; இரவு மீட்டிங். கோ.சி.மணி, மன்னை நாராயணசாமி, கிட்டப்பா ஆகியோரும் பேச இருந்தனர்.நான், என் நண்பர்களுடன், மதியமே சைக்கிளில் கிளம்பி விட்டேன். போகும் வழியில், ஒரு குளத்தில் கருணாநிதி, தன் நண்பர்களோடு குளித்துக் கொண்டு இருந்தார். தன் துணிமணிகளை தானே துவைத்துக் கொண்டு இருந்தார்.
அனல் பறக்கும்கம்யூனிஸ்ட் மீட்டிங் கேட்க நன்றாக இருக்கும். பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஜீவா, சீனிவாச ராவ், நம்பூத்ரி பாட், பால தண்டாயுதம் ஆகியோர் பேச்சில் அனல் பறக்கும். அவர்கள் பேச்சை கேட்டால், அப்போதே, அங்கேயே, அந்த கட்சியில் சேர்ந்து விடுவீர்கள்.அதே மாதிரி, காமராஜர் எங்கள் ஊருக்கு அடிக்கடி வருவார். அவருக்கு பல நண்பர்கள் உண்டு. டாக்டர் வரதாச்சாரியார், நாராயணசாமி நாயுடு, நீலமேகம் என, பல தலைவர்களுடன் பழக்கம் உண்டு. யாரையும் மறக்க மாட்டார். ஒரு முறை ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு வீட்டு வாசலில் நின்று, 'டாக்டர் வரதாச்சாரி இருக்காரா?' என, பேர் சொல்லி கூப்பிட ஆரம்பித்து விட்டார். அவர் வேறு யாரும் இல்லை; அவருடன் ஒன்றாக ஜெயிலில் இருந்தவர். இப்போது அவர் பெயர் தான், நகராட்சி பூங்காவுக்கு வைக்கப்பட்டுள்ளது.காமராஜர் எந்த ஊருக்கு சென்றாலும், பகல் நேரங்களில் அந்த ஊர் விவசாயிகளிடம் விவசாயம் பற்றியும், பொது மக்களிடம் வாழ்க்கை பற்றியும் பேசுவார்.இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். காமராஜரும், கருணாநிதியும், 'கூகுள்' இணையதள தேடுபொறி மாதிரி. தமிழகத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் செல்வதால், அந்த ஊர்களின் பெயர்களை, அந்த ஊர்களின் முக்கியஸ்தர்கள் பெயர்களை சரியாக கூறுவர்.ஒரு முறை, எம்.ஆர்.ராதா மீட்டிங், பூங்காவில் நடந்தது. மைக்கை பிடித்த உடனே ராதா, 'என் பேச்சை கேட்க ராஜாஜிக்கு பிடிக்கவில்லை போலும்... முகத்தை திருப்பிக் கொண்டு விட்டார்' என்றார்; எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.ஏனெனில், ராஜாஜி சிலைக்கு முதுகுப் பக்கம் தான், மேடை போடப்பட்டு இருந்தது.அப்போது ஆட்சியில் இருந்த ராஜாஜி, ஒரு விவசாய சட்டம் கொண்டு வந்தார். அந்த சட்டத்துக்கு, 60 - 40 என்று பெயர். நிலத்தில் வேலை செய்யும் விவசாயிக்கு, 60 சதவீதம். நில உரிமைதாரருக்கு, 40 சதவீதம் கிடைக்கும் என்பது சட்டம்.அந்த சட்டத்தை முதல் நாள் போட்டு, மறுநாள் அதன் எதிரொலி எப்படி என்று பார்க்க விருப்பப்பட்டு, காலை, 10:00 மணிக்கு, கொளுத்தும் வெயிலில் மீட்டிங்கில் பேசினார். அவர் மிக எளிமையாகவும், ஆணித்தரமாகவும் சிறுகதைகளை சொல்லி, எல்லாருக்கும் புரியும் வண்ணம் பேசுவார். சிலசமயம் மேடையில் பேச்சுக்குப் பதில், கலைநிகழ்ச்சி என்று ஒன்று, கட்சியினர் நடத்துவர். கட்சிப் பாடல்களை, சினிமா பாடல்கள் மெட்டில் பாடுவர்.குடந்தை என்.சி.ராஜன், ராஜபாளையம் மணி அண்ட் சாமி, மாரிமுத்து போன்றோரின் கலைநிகழ்ச்சிகள் உண்டு. சிவகங்கை சேதுராசன், மிக முக்கியமான கலைநிகழ்ச்சி நடத்தும், தி.மு.க., கட்சிக்காரர்.தலைவர்கள் எல்லாரும் மிக நகைச்சுவையாக பேசுவர். சின்ன அண்ணாமலை, ஜெபமணி, திருக்குறள் முனுசாமி, சிற்றுளி சுப்ரமணி, திருவாரூர் தங்கராசு, நாகை பாட்சா ஆகியோர் நகைச்சுவை பேச்சாளர்கள்.இப்போது மாதிரி, மேடை அலங்காரம் சோபா, திண்டு, தனி டாய்லெட், நாற்காலி, 'கேரவன்' வேன் என்று எதுவுமே கிடையாது. எல்லாரும் மண் தரையில் தான் உட்கார வேண்டும்; தலைவர்கள், பேச்சாளர்கள் மட்டும் மேடையில் இருப்பர். எல்லா கட்சி கூட்டமும், 'சிம்பிளாக' இருக்கும். கூட்டத்தின் நடுவே ஒரு தொண்டர் துண்டு ஏந்தி, காசு கேட்டு வருவார். ஒரே சில்லரை காசாக விழும்; காசு குலுங்கும் சத்தம் கேட்கும். உடனே பேச்சாளர், 'சில்லரை காசு போடாதீர்கள். சில்லரையாக ஒரே சத்தம் வருகிறது; ரூபாய் நோட்டுகள் போடுங்கள்' என்று, 'ஜோக்' அடிப்பார்.மீட்டிங் விளம்பரமே வினோதமாக இருக்கும். மதியம், 2:00 மணிக்கு மாட்டு வண்டியில், கட்சிக் கொடியை கட்டிக் கொண்டு, 'இன்று மாலை, 6:00 மணிக்கு கூட்டம் நடைபெறும்' என்று கத்திக் கொண்டே போவர்.மீட்டிங் ஆரம்பிக்கும் முன்பே, சினிமா பாடல்கள் போடுவர். பாட்டு கேட்க வேண்டும் என்றால், கோவில் திருவிழா, அரசியல் கட்சிக் கூட்டத்தில் கேட்டால் தான் உண்டு.


'இமேஜ்'அப்போது எல்லாம், தலைவர்கள் மீது ஒரு ஈர்ப்பு, மரியாதை இருந்தது. நடிகர்களை தியேட்டரில் தான் பார்க்க முடியும். இப்போது அவர்களை அடிக்கடி, 'டிவி'யில் பார்த்து, அவர்களது, 'இமேஜ்' குறைந்து விட்டது. சிலசமயம் திராவிட தலைவர்களின் மீட்டிங்குகள், சில நாடகக் கொட்டகையில் நடக்கும். டிக்கெட் வசூலிப்பர். 50 பைசா, 1 ரூபாய் கொடுத்து, தலைவர்கள் பேச்சை கேட்பர்.ஒரு முறை எங்கள் ஊரில், தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. நோட்டீசில், 'படித்த காமராஜர்' பேசுவார் என்று போட்டு இருந்தது. அந்த பேச்சாளர் பெயர் காமராஜர்; எம்.ஏ., படித்தவர்.
'பெருந்தலைவர் காமராஜர் படிக்கவில்லை' என, தி.மு.க.,வினர் கேலி செய்து, 'போஸ்டர்' போட்டு இருந்தனர்; எங்களுக்கு ஒரே அழுகையாக வந்தது.அதேமாதிரி ஒரு முறை, தி.க., கூட்டம் நடந்தது. இடையில், 'கரன்ட் கட்' ஆகி, விளக்கு அணைந்துவிட்டது; ஒரே இருள். உடனே பேச்சாளர், 'இது, இ.பி.,யில் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான பார்ப்பான் சதி' என்று திட்டினார். சிறிது நேரத்தில் கரன்ட் வந்து, லைட் எரிந்தது. கரன்டை கட் பண்ணியது, ஒரு லைன் மேன்.. ஏதோ தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய, கட் பண்ணினார். அவர் பிராமணர் இல்லை. இப்படித் தான், அப்போது முதல் இப்போது வரை, எங்களை திட்டுவதையே வாடிக்கையாக சிலர் வைத்துள்ளனர்.அப்போதெல்லாம் கூட்டத்துக்கு ஆள் பிடிக்க மாட்டார்கள்; தானாகவே மக்கள் வருவர். ஒரு சைக்கிளில் மூன்று பேர் கூட வருவர். சிலர், மாட்டு வண்டியில் வீட்டுப் பெண்களை அழைத்து வந்து, கூட்டத்தில் பங்கேற்று, முடிந்த உடன் அங்கேயே படுத்து துாங்கி, காலையில் செல்வர்.முக்கியமாக, மக்கள் நடக்க அஞ்ச மாட்டார்கள்.இப்போது கூட்டம் நடத்த, பல லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. தலைவர்களுக்கு, 'ஏசி' ரூம், பெரிய அளவில் மேடை அலங்காரம், பிளாஸ்டிக் சேர்கள், பிரியாணி என, லட்சத்துக்கும் மேல் செலவாகிறது.எம்.ஜி.ஆர்., இருந்தவரை கூட்டத்துக்கு ஆள் பிடித்து வரவில்லை. ஜெயலலிதா வந்த பின் தான், கட்சியினர், ஆள் பிடிக்கும் வேலையை ஆரம்பித்தனர்.ஒரு முறை, காங்., முதல்வராக இருந்த பக்தவத்சலம், 'தி.மு.க., காரன் டீயை குடித்துக் கொண்டு வேலை செய்வான்' என்றார்.அது உண்மை தான்; அப்படி வேலை பார்ப்பர்.இவ்வளவு சொல்கிறாயே... உன் ஊர் பெயரைச் சொல்லவில்லையே என, நீங்கள் கேட்பது புரிகிறது. என் ஊர், முன்பு, மாயவரம்; இப்போது, மயிலாடுதுறை. ஜூன் முதல் ஜனவரி வரை காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்; இப்போது சாக்கடை ஓடுகிறது. வயல்களை அழித்து கட்டடங்கள்; எங்கு பார்த்தாலும் ஒரே குப்பை மேடுகள்; இப்போது ஒன்றும் இல்லை. நினைத்தால் வருத்தமாய் உள்ளது. என்ன செய்வது; கால மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே!ஆர்.சேஷாத்ரி


சமூக ஆர்வலர்


தொடர்புக்கு: 99620 92193

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (22)

Dharmavaan - Chennai,இந்தியா
24-மார்-202107:24:57 IST Report Abuse
Dharmavaan எல்லா கேவலகளுக்கும் ஒரு ...தான் முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
22-மார்-202107:44:08 IST Report Abuse
jagan இ ட ஒதுக்கீடு எனும் நாசத்தை பொய் சொல்லி துர்நாற்ற அரசியல் செய்தவர்கள் தான் அவர்கள். Sugar coating dirty politicians
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
21-மார்-202119:06:40 IST Report Abuse
karutthu பிராமணர்களை வம்புக்கிழுக்கமால் எதையும் அவர்களால் செய்யமுடியாது .......காலம் மாறும் அப்போது காட்சிகளும் மாறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X