அம்பானிக்கு மிரட்டலா; என்.ஐ.ஏ., விசாரணை| Dinamalar

அம்பானிக்கு மிரட்டலா; என்.ஐ.ஏ., விசாரணை

Added : மார் 21, 2021
Share
மும்பை:முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸேவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த சம்பவத்தை நடித்துக் காட்டவைத்தனர்.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவரும் அதன் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து

மும்பை:முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸேவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த சம்பவத்தை நடித்துக் காட்டவைத்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 'ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' தலைவரும் அதன் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே 'ஜெலட்டின்' குச்சிகள் நிரப்பப்பட்ட கார் சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.இந்த வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உதவி இன்ஸ்பெக்டரான சச்சின் வாஸே என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.அவரிடம் தீவிர விசாரணை நடந்தது. முகேஷ் அம்பானி வீட்டருகே அந்த காரை நிறுத்திச் சென்றது சச்சின் வாஸே என்பது கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சச்சின் வாஸேவை அம்பானி வீட்டருகே அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரை நிறுத்திச் சென்ற சம்பவத்தை மீண்டும் நடித்துக்காட்ட வைத்தனர். அந்த காட்சிகளை அதிகாரிகள் 'வீடியோ' பதிவு செய்தனர்.முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுப்பதற்காக அவரது வீட்டருகே சச்சின் வாஸே வெடி பொருட்கள் அடங்கிய காரை நிறுத்தியிருந்தாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X