குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. : மே.வங்கத்தில் பா.ஜ., தேர்தல் அறிக்கை

Updated : மார் 21, 2021 | Added : மார் 21, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
கோல்கட்டா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மே.வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையில் பா.ஜ., தெரிவித்து உள்ளது. மே,வங்க மாநிலத்தில் வரும் 27 ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல்

கோல்கட்டா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மே.வங்கத்திற்கான தேர்தல் அறிக்கையில் பா.ஜ., தெரிவித்து உள்ளது.

மே,வங்க மாநிலத்தில் வரும் 27 ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் வகையில் பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கையில் பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. மே.வங்க மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.



latest tamil news





அதன்விபரம் வருமாறு



பெண் குழந்தைகளுக்கு கே.ஜி., முதல் பி.ஜி.,வரையிலான படிப்புகள் இலவசம்
பொது போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச பயண சலுகை


அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.


மீனவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.6,000 உதவித்தொகை

மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்த உடன் முதல்கூட்டத்தொடரிலேயே சி.ஏ.ஏ., நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

விதவைகளுக்கு ரூ.3,000 பென்சன்,

அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி

அகதிகளுக்கு 5 ஆண்டுகள் வரையில் ஆண்டு தோறும் ரூ.10,000 உதவிதொகை

அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.

மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் 3 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும்.

பி.எம்., கிஷான் திட்டத்தில் ரூ.18,000 நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படும் என்பன உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
22-மார்-202111:22:22 IST Report Abuse
Rajas பாலில் தங்கம் எடுக்கலாம் என்று பிஜேபி திலிப் கோஷ் சொன்னதை செயல்படுத்தி பெரிய பெரிய தொழிற்சாலைகளை அமைத்து தங்கம் எடுத்து உலகத்துக்கே கொடுத்து பொருளாதாரத்தை உயர்த்தலாம்.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
22-மார்-202108:58:42 IST Report Abuse
Sandru ஆஹா அங்கேயும் போயி பீலா விட ஆரம்பிச்சிட்டாரே
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
22-மார்-202106:22:09 IST Report Abuse
Elango அமித்ஷா உங்கள் தோல்வி உறுதி மோடி உங்கள் அழிவு உறுதி...evm தான் உங்கள் கடவுள்....அதற்கு தயாராக இருப்பீர்கள்....வெற்றி பெற எந்த ஒரு செயலையும் செய்வீர்கள் வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X