புதுடில்லி:உலகின் சிறந்த ராணுவத்துக்கான வரிசையில், நம் நாட்டுக்கு நன்காவது இடம் கிடைத்துள்ளது.
உலகின் சிறந்த ராணுவங்களை வரிசைப்படுத்தி, 'மிலிட்டரி டைரக்ட்' என்ற ராணுவ இணைய தளம், பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, படைகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் எண்ணிக்கை, விமானம், கடல், நிலப்பரப்பு மற்றும் அணு ஆயுத வளங்கள், ராணுவ ஊதியம், தளவாடங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 100க்கு, 82 புள்ளிகளுடன், சீன ராணுவம் முதலிடம் பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவம், 74 புள்ளிகளுடன் இரண்டாம் இடமும், ரஷ்யா, 69 புள்ளிகளுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. நம் நாட்டு ராணுவம், 61 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. நமக்கு அடுத்தபடியாக, 58 புள்ளிகளுடன், பிரான்ஸ் ராணுவம் உள்ளது.
இந்த வரிசையில், பிரிட்டன் ராணுவத்துக்கு, ஒன்பதாம் இடம் கிடைத்துள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், இந்தியா, மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE