அரசியல் செய்தி

தமிழ்நாடு

நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து தான் தி.மு.க.,வின் பணி: பா.ஜ., கடும் தாக்கு

Updated : மார் 23, 2021 | Added : மார் 21, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை:''ஜனநாயக விரோத கட்சியான, தி.மு.க.,வுக்கு, நில அபகரிப்பு, பணம் பறிப்பு, கட்ட பஞ்சாயத்து செய்வது தான் முக்கிய பணி,'' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார். தமிழக பா.ஜ., சார்பில், 'தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க, 100 காரணங்கள்' என்ற நுால் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது. நுாலை வெளியிட்டு, பா.ஜ., மேலிட
நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து தான்  தி.மு.க.,வின் பணி: பா.ஜ., கடும் தாக்கு

சென்னை:''ஜனநாயக விரோத கட்சியான, தி.மு.க.,வுக்கு, நில அபகரிப்பு, பணம் பறிப்பு, கட்ட பஞ்சாயத்து செய்வது தான் முக்கிய பணி,'' என, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., சார்பில், 'தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க, 100 காரணங்கள்' என்ற நுால் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்தது. நுாலை வெளியிட்டு, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியதாவது:

தி.மு.க.,வின் உரிமையாளராக ஸ்டாலின் உள்ளார். அவருக்கு பின், அவர் மகன் உள்ளார். குடும்ப கட்சியான, தி.மு.க.,வில் ஜனநாகம் இல்லை. 'முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சி, சில மாதங்களில் கவிழ்ந்துவிடும்' என, 2017ல் ஸ்டாலின் கூறினார். ஆனால், இ.பி.எஸ்., நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்துள்ளார். அவரின் ஆட்சி தொடர மக்கள் விரும்புகின்றனர்.

நில அபகரிப்பு, பணம் பறிப்பு, கட்ட பஞ்சாயத்து ஆகியவை தான் தி.மு.க.,வின் முக்கிய பணி. இதை, தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியின் போது, மக்களை பற்றி கவலைப்படாமல், ஊழல் செய்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

அவர்கள் ஆட்சியில் செய்த, '2 ஜி'அலைக்கற்றை ஊழலை மக்கள் மறக்கவில்லை.பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, தமிழகத்திற்கு, பல திட்டங்களுக்கு, அதிகளவு நிதி ஒதுக்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது: தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியின் போது, சிறிய அளவில் ஊழல் செய்யவில்லை; அனைத்தும் பெரிய அளவிலான ஊழல். அவற்றை பட்டியலிட முடியாது. தமிழகத்திற்கு, அதிக வளர்ச்சி திட்டங்களை கிடைக்க, பிரதமர் மோடி அரசு, வழிவகை செய்தது. அனைத்து மாநிலங்களும், மத்திய அரசு உதவி செய்கிறது.

மாநில அரசின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு உதவுவதை வைத்து, தமிழக அரசை, பா.ஜ., வழிநடத்துகிறது என, கூற முடியாது. தமிழகம், பல துறைகளில், முதலிடம் பிடித்துள்ளது. திராவிடம் என்ற பெயரில், கடவுள் மறுப்பு, ஹிந்து கடவுள்களை விமர்சிப்பது போன்ற செயல்களில் தி.மு.க., ஈடுபடுகிறது.இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asokan - Palani,இந்தியா
23-மார்-202114:37:16 IST Report Abuse
asokan தி.மு.க., கூட்டணியை நிராகரிக்க, 100 காரணங்கள்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-மார்-202123:30:49 IST Report Abuse
Pugazh V வழக்கம் போலவே ஆதாரங்கள் ஏதுமில்லாத குற்றச்சாட்டு கள். பத்து வருஷமா திமுக வின் எதிரிகள் மாநிலத்திலும் 7 வருஷமா மத்தியிலும் ஆட்சி யில் இருக்கிறார்கள். இருந்தும் திமுக மீது இவர்கள் சொல்லும் பல பொய்க் குற்றச்சாட்டு களில் ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்க முடிந்ததா? நிலம் அபகரித்திருந்தால் போலீசும், அமலாக்கத்துறை யும் உன் கட்சி யிடம் தானே? புடிச்சு கேஸ் போட்டு நிலத்தைப் புடுங்கிகிட்டு ஜெயிலில் போடறது தானே? முடியல இல்ல..அப்புறம் ஏன் பொய் பொய்யாக கதறல்??
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-மார்-202111:53:36 IST Report Abuse
Dr. Suriyaகுற்ற சாட்ட நிரூபிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான தனமா ஊழல் செய்வார்கள் என்று நீதிபதி சர்காரியாவே சொல்லிட்டாரே.......
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
23-மார்-202111:56:04 IST Report Abuse
Dr. Suriyaபார்த்தீங்களா ஸ்டாலின் வீடு விவகாரமே ஆகுதுன்னு செய்தி.... அதுல எத்தினிப்பெருக்கு கைமாறி மாறி வந்துருக்குன்னு ... இத விசாரிச்சு தீர்ப்பு சொல்லறத்துக்குள்ள கேசு போட்டவன் ஆயுஸ் முடிஞ்சுருமே (முடிச்சிருவாங்களே)...
Rate this:
Cancel
skandh - Chennai,இந்தியா
22-மார்-202121:30:31 IST Report Abuse
skandh ஒரு பக்கம் பிஜேபி யின் குப்பை அறிக்கை.இன்னொரு பக்கம் வெத்து அறிக்கைகள் கர்நாடகா போவியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X