நாராயணசாமி மீது ராகுல் கோபம்

Updated : மார் 23, 2021 | Added : மார் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு மொழிபெயர்க்கும் வீடியோ, டில்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒரு பெண்மணி சொன்ன குறையை, தன்னை பாராட்டியதாக, நாராயணசாமி, ராகுலுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தவறான மொழிபெயர்ப்பு என, தெரிந்து கொண்ட ராகுல், நாராயணசாமியிடம் பேசவே இல்லையாம். பல முறை நாராயணசாமி போன் செய்தும்,
 டில்லி உஷ், delhi ush

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு மொழிபெயர்க்கும் வீடியோ, டில்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒரு பெண்மணி சொன்ன குறையை, தன்னை பாராட்டியதாக, நாராயணசாமி, ராகுலுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தவறான மொழிபெயர்ப்பு என, தெரிந்து கொண்ட ராகுல், நாராயணசாமியிடம் பேசவே இல்லையாம். பல முறை நாராயணசாமி போன் செய்தும், போன் எடுக்கவில்லையாம் ராகுல். மேலும், ராகுலின் செயலர்களிடம் சரியான முறையில், நாராயணசாமி நடந்து கொள்ளவில்லை என்றும் பேசப்படுகிறது. இதனால், 'புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட, 'சீட்' தரக்கூடாது' என, ராகுல் சொல்லிவிட்டாராம். இதை முன்பே தெரிந்துகொண்ட நாராயணசாமி, தான் போட்டியிடப் போவதில்லை என, சொல்லி சமாளித்துவிட்டாராம்.


கன்னியாகுமரி ஸ்பெஷல்



கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோற்ற இவரை, எப்படியாவது மீண்டும் வெற்றி பெறச் செய்து, மத்திய அமைச்சராக்க வேண்டும் என, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.இதனால், இந்த தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றனர், பா.ஜ., மூத்த தலைவர்கள். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், கன்னியாகுமரி தொகுதியை ஸ்பெஷலாக கருதுகின்றனர்.அடுத்த சில நாட்களில், இவர்கள் இருவருமே, கன்னியாகுமரிக்கு பிரசாரத்துக்கு வரவுள்ளனர். 'தமிழகத்திலிருந்து ஒரு அமைச்சரை டில்லிக்கு அனுப்புங்கள்' என்கிற விதத்தில், பிரசாரம் இருக்குமாம்.


பா.ஜ., தலைவர்கள் நடத்தும் பரிகார பூஜை


'யாராவது கட்சிக்கு பில்லி, சூனியம் வைத்துவிட்டனரா' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பா.ஜ., - எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், சமீபத்தில் அகால மரணமடைந்தனர். அமித் ஷாவிற்கு நெருக்க மான குஜராத், எம்.பி., ஒருவரும் காலமாகிவிட்டார். ஒரு சிலர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு, பா.ஜ., - எம்.பி., டில்லியில் துாக்கிட்டு இறந்தார். இதனால், பில்லி, சூனியத்தில் மாட்டி விட்டோமா என, அஞ்சுகின்றனர் பா.ஜ., தலைவர்கள். கேரளாவிலிருந்து ஒரு பூஜாரியை டில்லிக்கு அழைத்துள்ளனர்.கட்சி அலுவலகம் மற்றும் புதிய பார்லிமென்ட் கட்டப்படும் இடங்களில், பூஜை மற்றும் யாகங்கள் நடக்க உள்ளனவாம்.


சிறிய விமானங்களுக்கு கிராக்கி



தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், மாநிலத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரசாரம் செய்ய, சிறிய விமானம், ஹெலிகாப்டரை உபயோகித்து வருகின்றனர். இந்த விமானங்களுக்கு படு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆறு பேர் அமரக்கூடிய விமானத்திற்கு, ஒரு நிமிடத்திற்கு வாடகை, 1,017 ரூபாய். ஏழு பேர் உட்காரக் கூடிய விமானத்திற்கு, 3,270 ரூபாய்; 14 பேர் அமரக் கூடிய விமானத்துக்கு, ஒரு நிமிடத்துக்கு, 7,194 ரூபாய் வாடகை. ஜி.எஸ்.டி மற்றும் விமான நிலைய சார்ஜ் இதில் அடங்காது. ஹெலிகாப்டருக்கும் அதிக மவுசு. ஒரு நிமிடத்திற்கு இதற்கு வாடகை, 2,543 ரூபாய்.இந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வர். தமிழக அரசியல்வாதிகள் பறந்து பறந்து பிரசாரத்திற்காக, பணத்தை இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.


அடுத்த ஜனாதிபதி யார்?



தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜூலையில் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த ஜனாதிபதி யார் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் இப்போதிருந்தே பரபரப்பு துவங்கி விட்டது.இந்த முறை நிச்சயம், தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தான், ஜனாதிபதி யாக வருவார் என, பேசப்படுகிறது. அது தமிழரா அல்லது தமிழகத்திற்கு பக்கத்திலிருக்கும் மாநிலங்களைச் சேர்ந்தவரா என, அலசப்படுகிறது.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக் காலமும், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. பா.ஜ., தரப்பிலிருந்து, வெங்கையா நாயுடு, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என, கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X