பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சொல்லி மாளாது!

Updated : மார் 22, 2021 | Added : மார் 22, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : வெ.ச.பாகீரதி, சேலத்திலிருந்து எழுதுகிறார்:'அண்ணாதுரை, கருணாநிதி தலைமையிலான ஆட்சிகளில், தமிழகம் படிப்படியாக பல படிகள் வளர்ச்சி பெற்றுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.இவர் கூறும் படிப்படியான முன்னேற்றங்கள் எவை தெரியுமா...நுாறு ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை இருந்த லஞ்சம்,
idu ungal idam, இது உங்கள் இடம், ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வெ.ச.பாகீரதி, சேலத்திலிருந்து எழுதுகிறார்:

'அண்ணாதுரை, கருணாநிதி தலைமையிலான ஆட்சிகளில், தமிழகம் படிப்படியாக பல படிகள் வளர்ச்சி பெற்றுள்ளது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.இவர் கூறும் படிப்படியான முன்னேற்றங்கள் எவை தெரியுமா...

நுாறு ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை இருந்த லஞ்சம், படிப்படியாக, பல லட்சம், கோடி ரூபாய் என வளர்ந்து, தமிழகத்தை தலைகுனிய வைத்தது

இரு மொழிக் கொள்கை என்ற தவறான செயலால், ஹிந்தியைக் கற்க விடாமல் தடுத்து, தமிழையும் ஒழித்து, ஆங்கிலம் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்ந்து விட்டது

ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமித்ததுl இயற்கை வளங்களை கொள்ளைஅடித்ததுl மதுக்கடைகளை திறந்து, தமிழக மக்களை, 'குடி'காரர்களாக்கியது

இலவசங்களை வாரி இறைத்து, மக்களை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியது

உழைப்பு, நேர்மை, நீதி ஒழிக்கப்பட்டு, வாய்ச்சவடால், ரவுடியிசம், அடாவடி ஆகியவற்றையே அரசியல் என, மாற்றியதுl சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்தது

அரசு மருத்துவமனையை அசுத்தமாக்கி, தனியார் மருத்துவமனையின் ஆதிக்கத்தை வளர்த்து விட்டதுl பணம், பரிசு கொடுத்து, வாக்காளர்களையும் லஞ்ச பேர்வழியாக மாற்றியது

திருட்டு ரயிலேறி, சென்னை வந்தவரின் குடும்பம், முன்னேறி, உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஒன்றானது

கழகம் ஒரு குடும்பம் என்பதை மாற்றி, கருணாநிதி குடும்பமே, கழகம் என, தி.மு.க.,வை முழுமையாக கைப்பற்றியது.அப்பப்பா, சொல்லி மாளாது... தி.மு.க.,வால் தமிழகம் பெற்ற அனுபவங்களை!


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெண்களை பெற்றால் மட்டும் போதும்,கட்டாய தாழ்த்தப்பட்ட சம்பந்தம் அரசே ஏற்பாடு செய்யும். திமுக தேர்தல் வாக்குறுதி 259..கலப்பு திருமணம் செய்வதில் மணமக்களில் யாராவது ஒருவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் எனில் அவர்களுக்கு 60000 ரொக்கம்,1 பவுன் தங்கம் இலவசம்.யார் வீட்டு குடியை கெடுக்க இந்த வாக்குறுதி.இந்த வாக்குறுதியை தமிழ்நாட்டில் ஒரு பிரச்சாரத்தில் மக்கள் மத்தியில் கூறி வாக்கு கேட்க முடியுமா??? திமுகவை ஆதரிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.ஆனால் எதிர்க்க பெண்ணை பெற்ற அனைத்து பெற்றோருக்கும் இந்த ஒரு வாக்குறுதி போதும்.கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ளும் சில பேர் இந்த நாடக காதல்,கலப்பு திருமணத்தை நடத்தி பல பேர் குடியை கெடுக்கிறார்கள்.முன்னாள் முதல்வர் கருணாநிதி கலப்பு திருமணம் செய்தால் அரசு வேலை என்றார்.அதனால்தான் உங்கள் கட்சி 10 வருடமாக ஆட்சியில் இல்லை.ஆனால் மீண்டும் மீண்டும் நீங்கள் எடுக்கும் இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சாராத மக்களிடம் கெட்ட பெயரையே பெற்றுத்தரும்.
Rate this:
Cancel
Truth Triumph - Coimbatore,இந்தியா
22-மார்-202123:48:50 IST Report Abuse
Truth Triumph திமுக மற்றும் கூட்டு களவாணிகளை கூண்டோடு முடித்திட நினைத்திட்ட தமிழனே .. உனக்கு படித்திட பல ரசம் சொட்ட சொட்ட படைதிட்ட காவியங்களை மறப்பாயோ .. பொன்னான பொழுதை போக்கிட தந்திட்ட தொலைக்காட்சி பெட்டி உன் மர மண்டையில் உதிக்கவில்லையா .. உதிக்கும் கதிரவனை அஸ்தமிக்க வைப்பாயோ .. தம்பி வைகோ இருப்பது உனக்கு உறுத்துகிறதா கடவுளை மறுத்தால் தொண்ணுறு வயது வாழலாம் என்ற நம்பிக்கை ஏன் உன் ஊன் மனதிற்கு புரிவதில்லை ..சுயமரியாதை கிஞ்சித்தேனும் உனக்கு இருந்தால் இன்ப நிதியை பல்லக்கில் சுமந்திருப்பாய் ...
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
22-மார்-202122:55:55 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டா அடுத்த அஞ்சுவருஷத்துக்கு நாம ICU ல இருக்கற பேஷன்ட் மாதிரிதான் இருப்போம் - மத்திய அரசோட எந்தத் திட்டமா இருந்தாலும் நம்மால பாக்க மட்டும்தான் முடியும் அனுபவிக்க முடியாது - எதிர்கட்சியா இருக்கும்போதே மத்திய அரசோட எல்லாத்திட்டத்தையும் எதுத்து போராட்டம் பண்ணி வளர்ச்சிய தடுக்கறவனுங்க, ஆளுங்கட்சியா மாறிட்டா என்ன ஆகும்? - நண்பர் ஒருவர் நாலு நாள் முன்னாடி கோவைல இருந்து சென்னைக்கு வேறொரு நண்பனோட கார்ல போனார் இதோ அவரே சொல்றார் "கோவைல இருந்து சேலம் வரைக்கும் போனதே தெரியல, ஆனா சேலத்துல இருந்து உளுந்தூர்பேட்டை வரைக்கும் அவ்வளவு சிரமம் காரணம் வாகனப்பெருக்கம், உளுந்தூர்பேட்டைல இருந்து தென்மாவட்ட வாகனங்களும் சேர்ந்துகிட்டதால சொல்லவே வேண்டாம்_ இந்த இடத்துலதான் சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை தேவையா இல்லையான்ற கேள்விக்கு பதில் தெரியுது - ஒரு நாடு முன்னேற முக்கியமான தேவை உள்கட்டமைப்பு வசதிகள் - தனி விமானத்துலயும். ஹெலிகாப்டர்லயும், ஹம்மர் கார்லயும் போய்கிட்டிருக்கற ஒரு கூட்டம் இந்தத் திட்டத்த போராடி முடக்கி இருக்கு- இது ஒரு சின்ன உதாரணம்தான் - இந்த பட்ஜெட்ல மட்டும் தமிழ்நாட்டுக்கு மோடி அரசு கிட்டத்தட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடிகள சாலைப் பணிகளுக்கு மட்டும் ஒதுக்கியிருக்கு - வெறும் 10,000 கோடி திட்டத்தையே எதிர்த்து கிடப்புல போட வெச்ச தி.மு.க இங்க ஆட்சிக்கு வந்தா இந்தத் திட்டம்லாம் நடக்குமா?- மோடி அரசு கடந்த இரண்டு வருடங்களாக, சிறு, குறு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் கொடுத்துகிட்டு இருக்கு நமக்குத் தெரியும், ஆனா, அந்தப் பணம் ஏழை விவசாயிகளுக்கு போய்ச் சேராத ஒரு மாநிலம் எது தெரியுமா?, மேற்குவங்கம், காரணம் அந்தக் குறும்புப் பெண்மணி மமதாவின் மமதை, இழப்பு யாருக்கு? - Smart City திட்டத்துக்கு மத்திய அரசு ஒவ்வொரு வருஷமும் தமிழ்நாட்ல 11 City-க்கு வருஷம் 100 கோடி வீதம் 500 கோடி கொடுக்குது, ஆனா அதக்கூட இப்ப இருக்கற மாநில அரசு சரியா பயன்படுத்தல, இப்பதான் வேகமா செஞ்சிகிட்டு இருக்காங்க, மதுரை பெரியார் நிலையம் என்ற மீனாட்சி நிலைய பணிகள் நடப்பது கூட இந்தத் திட்டத்தில்தான் - திண்டுக்கல் நகர பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் நடப்பது கூட இந்தத் திட்டத்தில்தான் - ஒருவேளை மத்திய அரசுடன் இணக்கமில்லாத அரசு இங்கே வந்தால் என்ன ஆகும்?- பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக இலவசங்களுக்கும், தள்ளுபடிகளுக்கும் வாக்களித்து 38 வெஜிடபிள்களை MPக்களாக தேர்வு செய்த தன்மானத் தமிழன்- இந்தத் தேர்தலிலாவது தெளிவாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - தி.மு.க கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் நோட்டாவுக்கு போவதற்குச் சமம்தான் என்பதை உணர்ந்து - மத்திய அரசுடன் இணக்கமான அரசை தேர்ந்தெடுங்கள் மக்களே - மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு முன்பும், தமிழகமெங்கும் தெருவுக்குத்தெரு விஞ்ஞானத் திருடன் சிலை வேண்டுமென்று நினைப்பவர்கள் மட்டும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X