அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜோதியும் வரல... செந்திலும் வரல...'

Updated : மார் 22, 2021 | Added : மார் 22, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
அரவக்குறிச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, பா.ஜ வேட்பாளர். சாலப்பாளையத்தில் நேற்று, பிரசாரம் செய்தார்.பொதுமக்களில் பலர், 'சாலை இல்லை. மின் கம்பத்தில், பல ஆண்டுகளாக லைட்எரியவில்லை. மயானம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது' என, அடுக்கடுக்கான புகார் தெரிவித்தனர். அதிர்ச்சியான அண்ணாமலை, 'எங்க ஊர் இந்த தொகுதியில உள்ள தொட்டம்பட்டி சூடாமணிதான். ஆனா,

அரவக்குறிச்சியில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை, பா.ஜ வேட்பாளர். சாலப்பாளையத்தில் நேற்று, பிரசாரம் செய்தார்.



latest tamil news



‛ஜோதியும் வரல... செந்திலும் வரல...' -- அரவக்குறிச்சியின் அந்த கதை இது... __

பொதுமக்களில் பலர், 'சாலை இல்லை. மின் கம்பத்தில், பல ஆண்டுகளாக லைட்எரியவில்லை. மயானம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது' என, அடுக்கடுக்கான புகார் தெரிவித்தனர். அதிர்ச்சியான அண்ணாமலை, 'எங்க ஊர் இந்த தொகுதியில உள்ள தொட்டம்பட்டி சூடாமணிதான். ஆனா, இப்பதான் தேர்தல்ல நிக்கிறேன். 10 வருஷமா இங்க மாறி மாறி நின்னவங்க, இந்த தொகுதியே கிடையாது.

'கரூர் தொகுதியை சேந்தவங்க. ஆனா, நீங்கதான் ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. எம்.எல்.ஏ., ஆபீசுக்கு கூட அவங்க வரல. ஜெயிசாப்புறம் வந்து உங்கள பாத்தாங்களா?' என்றார்.பொதுமக்களோ, '2019 இடைத்தேர்தல்ல நின்ன செந்தில்பாலாஜி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கூட்டியாந்து ஜெயந்தி நகர்ல, குறைதீர் கூட்டம் நடத்தினார். குறைகளும் தீரல, அப்பால பாலாஜியும் வரல. எம்.பி., ஆனப்புறம் ஜோதிமணியும் எட்டிப் பாக்கல...' என்றனர்.


latest tamil news


உடனே அண்ணாமலை, 'யாராவது காணாம போனா, போலீஸ்ல புகார் குடுக்கணும். எம்.பி., - எம்.எல்.ஏ.,யை காணலைனு எங்கிட்ட புகார் தந்திருக்கீங்க. ஆனா, இப்ப நான் போலீஸ் ஆபீசர் இல்ல. அத ராஜினாமா செஞ்சுட்டேன். ஆனாலும் உங்க புகார ஏத்துக்கிறேன். அ.தி.மு.க., தான் மறுபடியம் ஆட்சிக்கு வரும். உங்க பிரச்னை தீர, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்க!' என்றார்.எப்போதும் போல, இந்த வாக்குறுதிக்கும் மக்கள் கைதட்டினர். சில பழக்கங்கள் நம்மை விடவே விடாது.


Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
22-மார்-202115:34:40 IST Report Abuse
Dr. Suriya என்ன காரணம்...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-மார்-202114:56:07 IST Report Abuse
r.sundaram அண்ணாமலை படித்தவர், ஐ பி எஸ் ஆக இருந்தவர். இவரது நேர்மையை பற்றி இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. ஆதலால் நம்பி வாக்கு அளியுங்கள். கண்டிப்பாக உங்கள் குறைகளை நிவர்த்தி செய்வார்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-மார்-202114:04:11 IST Report Abuse
sankaseshan இளங்கோ வா கர்நாடகாவிலிருந்து பணியாற்றிவிட்டு நல்லபெயருடன் தமிழ்நாடு வந்துள்ளார் உன்னைப் போன்றவர்களுக்கு தெரியாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X